ஐந்து மாதங்களுக்கு முன் இறந்தவரின் சடலம் மீண்டும் தோண்டியெடுப்பு

Published By: Digital Desk 4

09 Dec, 2019 | 12:29 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனாத்   தோட்டத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் இறந்த ஒருவரின் சடலம்  (63 வயது பிச்சை ஜெகநாதன்) இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிச்சை ஜெகநாதன் என்பவர் 24.7.2019 அன்று இறந்துள்ளார் . இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.  இவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரின் மருமகன்  நடராஜ் ரமேஷினால் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒகஸ்ட் 8 ஆம் திகதியன்று முறைபாடு ஒன்றை செய்தார் இறக்கும் போது இறந்தவரால் எழுதப்பட்ட கடிதத்தை ஆதாரமாகக் கொண்டே புகார் செய்யப்பட்டது.

தொடர்ந்து கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் ஒகஸ்ட் 22 ஆம் மேலும் ஒரு முறைப்பாட்டினை மருமகனால் செய்யப்பட்டது.  அதனையடுத்து செப்டெம்பர் 2 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட பொலிஸ் தலைமையகத்தில்  விசாரனை நடை பெற்றது. அதன் பின்னர் டிசம்பர் 3 ஆம் திகதியன்று  நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இவ்விடயம் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அதனையடுத்து டிசம்பர் 5  ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதவான் பிரமோதய ஜயசேகர குறித்த நபரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து டிசம்பர் 9 ஆம் திகதியான இன்று மாவட்ட நீதவானின் நேரடி கண்காணிப்பில் சடலம் தோண்டப்பட்டது. 

இதன் போது நுவரெலியா மாவட்ட  பொலிஸ் தலைமையகத்தின் தடயவியல் உத்தியோகத்தர்கள்  விசேட மருத்துவ நிபுனர் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் லிந்துலை பொலிஸாரும் உடனிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47