மோசமான களத்தடுப்பால் தோல்வியைத் தழுவிய இந்தியா!

Published By: Vishnu

09 Dec, 2019 | 11:26 AM
image

இந்திய அணியின் சொதப்பலான களத்தடுப்புக் காரணமாக இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. 

இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி நேற்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது.

171 என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. 

தீபக் சகார் வீசிய 3 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய லீவிஸ், வொஷிங்டன் சுந்தர் வீசிய 6 வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். 

இவருக்கு ஒத்துழைப்பு தந்த சிம்மன்ஸ், யுவேந்திர சகால் வீசிய 9 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை சேர்த்த போது சுந்தர் பந்தில் லீவிஸ் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா வீசிய 14 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சரை பறக்கவிட்ட சிம்ரன் ஹெட்மயர் 23 ஓட்டத்துடன், அதே ஓவரில் வெளியேறினார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சிம்மன்ஸ், அரைசதம் கடந்தார். 

புவனேஷ்வர் வீசிய 16 ஆவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய நிக்கோலஸ் பூரன், தீபக் சகார் பந்தை பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. 

சிம்மன்ஸ் 67 ஓட்டத்துடனும், பூரன் 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிம்மன்ஸ் வென்றார்.

இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 11ல் மும்பையில் நடக்கிறது.

இந்திய அணியின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 5 ஆவது ஓவரில் சிம்மன்ஸ், லீவிஸ் கொடுத்த பிடிய‍ெடுப்பு வாய்ப்புகளை முறையே வாஷிங்டன் சுந்தர், விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்த் ஆகியோர் நழுவ விட்டனர். 

பின், தீபக் சகார் வீசிய 17ஆவது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த பிடியெடுப்பினை ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்தியத்தீவுள் அணியினர் எளிதாக ‘சேஸ்’ செய்தனர்.

பவுண்டரி எல்லை அருகே களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஹெட்மயர் அடித்த பந்தை அபரமாகமாக பிடியெடுத்து அசத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09