பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கருணாரத்ன பரணவிதான இதற்கு முன்னர் உள்ளூராட்சி மற்றும்  மாகாண சபைகள் பிரதி அமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.