சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தயாராகும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் 

Published By: Digital Desk 4

08 Dec, 2019 | 06:12 PM
image

(ஆர்.ராம்)

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்காக அந்த விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச நாடுகளும் கூட்டிணைந்து எடுக்க வேண்டும்

என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய கவயீர்ப்பு போராட்டமொன்றை முல்லைத்தீவில் முன்னெடுக்கவுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக நடைபெறவுள்ள இந்தக்  கவனயீர்ப்பு போராட்டம்  எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 10மணிக்கு முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.

அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதோடு செயலகத்திற்கு முன்னால் தமது வலியுறுத்தல்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் வலிந்துகாணாமலாக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைள் உள்ளடங்கிய மகஜரொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

இந்தக்கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி ஈஸ்வரி மரியசுரேஸ் கூறுகையில், 

அசாதாரண சூழலில் காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரி நாம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுத்து வருகின்றோம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆயிரம் நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில் கடந்த ஆட்சியாளர்கள் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவொம் என்று கூறி ஆட்சியில் அமர்ந்தபோதும் பின்னர் அவர்கள் அதுகுறித்து எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கால அவகாசத்தினை நீட்டித்துக் கொண்டார்களே தவிரவும் உள்நாட்டில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஆட்சிமாற்றமொன்று நடைபெற்றுள்ளது. தற்போது ஆட்சிஅதிகாரத்தில் உள்ளவர்களே காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான நேரடியான பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளார்கள். மேலும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் உள்நாட்டில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடத நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கின்றது.

ஆகவே தான் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச நாடுகளும் தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறும் வகையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோருகின்றோம். இந்த விடயத்தில் எவ்விதமான  தாமதங்களுமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50