நாம் கைகொடுக்கவே கோத்தாபய ஜனாதிபதியானார் : மஹிந்த அமரவீர

Published By: R. Kalaichelvan

08 Dec, 2019 | 06:02 PM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து பயணித்திருந்தால் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியிருக்க மாட்டார் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.

ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்ததாலேயே அவர் வெற்றி பெற்றார். தேர்தலில் நாம் தனித்து பயணித்திருந்தால் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்க மாட்டார் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர. பொதுத் தேர்தலிலும் கூட்டணியாக பயணிப்போம் எனவும் அவர் கூறினார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு சிலர் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தனித் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்கும் நகர்வுகளை நாம் தடுத்தோம். 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மிகவும் முக்கியமான தீர்மானம் எடுத்தது. 

அதுவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறவும் எதுவாக அமைந்தது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 14 இலட்சம் வாக்குகள் கிடைத்தது. இம்முறை தேர்தலில் அது முழுமையாக எமக்கு கிடைத்திருக்கும் என கூற முடியாது, ஆனால் எமது ஆதரவு வாக்குகளே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்தது என்பது உண்மையான கூற்று. 

ஒருவேளை நாம் இந்த தேர்தலில் தனித்த பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வழங்காது இருந்திருந்தால் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்க மாட்டார். 

அது அவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை அங்கீகரித்து செயற்பட்டு வருகின்றனர். எனினும் ஒரு சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்காக எம்மை விமர்சித்து வருகின்றனர்.

எவ்வாறு இருப்பினும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மிகவும் முக்கியமான பணிகளை முன்னெடுக்கும். 

தேர்தலில் வெற்றியினை பெற்றுக்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கம் ஒன்றினை நாம் உருவாக்குவோம்.

இப்போதுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி எமக்கு சவாலான கட்சியாக இல்லை. அவர்களின் தலைமைத்துவ பலவீனம், ஆசன மோதல்கள் காரணமாக மக்கள் முழுமையாக அவர்களை நிராகரிக்கும் நடவடிக்கைகலையே முன்னெடுப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08