மறுதலிப்பு

08 Dec, 2019 | 04:53 PM
image

திரு­மலை நவம்

“பெரும்­பான்மை சமூ­கத்தின் விருப்­பங்­க­ளுக்கும் உணர்­வு­க­ளுக்கும் எதி­ராக எது­வுமே செய்ய முடி­யாது என்று நான் நம்­பு­கின்றேன். பெரும்­பான்மை மக்­களின் விருப்­பத்­துக்கு எதி­ராக ஏதா­வது வாக்­கு­றுதி வழங்கும் யாரா­யினும் பொய்­யா­ன­வர்கள்” என ஜனா­தி­பதி கோத்தாபய ராஜபக்ஷ இந்­திய விஜ­யத்­தின்­போது தனது பயண முடிவில் அடித்துக் கூறி­யிருக்கிறார்.

ஜனா­தி­ப­தியின் இக்­கூற்­றா­னது ஒட்­டு­மொத்­த­மாக தமிழ்மக்­களின் நீண்­ட­காலப் போராட்­டங்கள், அபி­லா­ஷைகள் மற்றும் கோரிக்­கை­ களை நிரா­க­ரிக்கும் அறி­விப்பென ஏன் கருதக்  கூ­டாது என்று எண்ணத் தோன்­று­கி­றது.

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்து சில நாட்களுக்குள் இந்­தி­யா­வி­லி­ருந்து வெளி­யு­றவு அமைச்சர் ஜெய்­சங்கர் கொழும்­புக்கு பறந்து வந்தார். இவரின் கொழும்பு வரு­கைக்குப் பிறகு இந்­திய அரசு ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது. தமி­ழர்­க­ளுக்கு நீதி மற்றும் சமத்­துவம் வழங்­கப்­பட வேண்­டு­மென அந்த அறிக்கை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

இலங்கை ஜனா­தி­பதி, இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோடி ஆகிய இரு­வ­ருக்­கி­டை­யி­லான டில்லி சந்­திப்பின் போது பிர­தமர் மோடி இலங்­கையில் தமிழ்மக்­களின் சமத்­துவம், நீதி, சமா­தானம், மதிப்பு ஆகி­யவை குறித்த அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் நல்­லி­ணக்க நடை­மு­றை­களை புதிய அரசு முன்­னெ­டுக்கும் என்று தான் நம்­பு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் இன்­னு­மொரு விட­யத்­தையும் தெளி­ வாக கூறி­யி­ருந்தார். இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது அர­சியல் சாசன திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வது மிகவும் அவ­சியம் எனவும் மோடி புது­டில்­லியில் கோத்­த­பாய முன்­னி­லையில் தெரி­வித்­தி­ருந்தார்.  இதனையடுத்து தனது பய­ணத்தின் இறு­தியில் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு வழங்­கிய பேட்­டியில் ஜனாதிபதி கோத்தபாய பெரும்­பான்மை மக்­களின் விருப்­பத்­துக்கு மாறாக என்னால் எந்த அதி­கா­ரப்­ப­கிர்­வையும் செய்ய முடி­யாது, அத்­துடன் 13 ஆவது அர­சியல் சாச­னத்தை முழு­மை­யாக என்னால் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என வெளிப்­ப­டை­யா­கவும் பகி­ரங்­க­மா­கவும் கூறி­விட்டு வந்­திருக்கிறார். இது தொடர்­பாக, இந்­திய ராஜ­தந்­திர வட்­டா­ரங்கள் அறி­யாதிருக்க முடி­யாது.

இலங்கை ஜனா­தி­பதி தனது இந்­திய விஜ­யத்­தின்­போது மறை­மு­க­மா­கவும் நேர­டி­யா­கவும் இலங்கை இனப்­பி­ரச்­சினை மற்றும் அர­சியல் தீர்வு தொடர்பில் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ள இரு விட­யங்கள் தெளி­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஒன்று பெரும்­பான்மை மக்­களின் விருப்­புக்கு மாறாக எந்­த­வொரு தீர்­மா­னத்­திற்கும் தன்னால் வர­மு­டி­யாது, மற்­றொன்று 13ஆவது திருத்தம் நடை­மு­றையில் இருந்து வரு­கி­ற­போதும் அந்த நடையைத் தாண்டி இன்­னு­மொரு வாசலை திறந்து விட முடி­யாது என்­ப­தாகும்.

ஜனா­தி­ப­தி­ பெரும்­பான்மை சமூ­க­மென்று  விளித்துக் கூறிய சமூகம் சிங்­கள மக்­க­ளையே குறிக்­கி­றது. சிங்­கள மக்­கள் தனக்குத் தந்த ஆணையை மீறி மாற்று வழியில் பய­ணிக்­கவும் முடி­யாது செயற்­ப­டவும் இய­லாது என்­பதே அது. அவரின் இக்­கூற்­றா­னது பல்­லின மக்கள் வாழும் ஒரு நாட்­டுக்கு ஏற்­பு­டை­ய­தாக இருக்க முடி­யுமா? ஜன­நா­யக சம்­பி­ர­தா­யங்­களை கடைப்­பி­டிக்­க­வி­ருக்கும் தலைவர் ஒருவர் இவ்­வாறு நடந்து கொள்ள முடி­யுமா என்­பது கடி­ன­மானதொரு  கேள்­வி­யே. 

இலங்கை ஒரு பல்­லின சமூகம் வாழும் ஒரு சிறியநாடு. அதிலும் சிங்­களப் பெரும்­பான்­மைக்கு நேரொத்த கலா­சா­ரங்­க­ளையும் மொழி­யையும் பிர­தே­சங்­க­ளையும் கொண்ட சிறு­பான்மை சமூகம் வாழும் நாடு. அதிலும் தமிழ் மக்கள் மொழியால் வேறு­பட்­ட­வர்கள். முஸ்லிம் மக்கள் மதத்­தாலும் கலா­சா­ரத்­தாலும் மாறு­பட்­ட­வர்கள். மலை­யக மக்கள் பிர­தே­சத்தால் வேறு­பட்­ட­வர்கள்.

இவர்­க­ளு­டைய அபி­லா­ஷைகள், கோரிக்­கைகள் அர­சியல் வழியில் வேறு­பட்­டாலும் அடிப்­ப­டையில் சிறு­பான்­மை­யினர். அவர்­களை எந்த வகை­யிலும் நாட்­டி­லி­ருந்து அந்­நி­யப் ­ப­டுத்த முடி­யாது. இலங்கை அந்­நியர் ஆட்­சிக்கு அடி­மைப்­பட்டுக் கிடந்­த­போது நாட்டின் சுதந்­தி­ரத்தை அனைத்து தரப்­பி­ன­ருமே நேசித்­த­வர்­கள்தான்.நாட்டின் சுதந்­தி­ரத்­துக்குப் பின் தமிழ்மக்கள் தமது சுதந்­திரம், சுய­நிர்­ணய உரிமை, தாயகக் கோட்­பாடு என்­ப­வற்­றுக்­கா­கவே கட்­சி­களை உரு­வாக்கி இவற்றைப் பெற அகிம்ஷை வழியில் போராட முற்­பட்­டார்கள். தந்தை செல்­வ­நா­யகம் வட­–கி­ழக்கு மக்கள் உட்­பட்ட தமிழ் பேசும் மக்­களின் உரி­மை­களைப் பெற வேண்டும் என்­ப­தற்­காக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியை உரு­வாக்­கினார். திரு­கோ­ண­ம­லையில் நடத்­தப்­பட்ட தமி­ழ­ரசுக் கட்­சியின் முத­லா­வது மாநாட்டின் (1951) தமிழ்ப் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் எனவும் அவர்கள் அர­சியல் ரீதி­யாக சுயா­தீனம் பெறு­வ­தற்கும் சிங்­கள மக்­க­ளுடன் சம­தன்­மை­யுடன் இணைந்து வாழ்­வ­தற்கும் விருப்பம் உள்­ள­வர்கள் எனவும்  ­ம­ாநாட்டில் பிர­க­ட­னப்­ப­டுத்­தினார். இப்­பி­ர­க­ட­னத்தின் மூலம் தமிழ்மக்கள் இந்­நாட்டின் தேசிய இனம் மாத்­தி­ர­மன்றி சிங்­களப் பெரும்­பான்­மை­யுடன் சகல சம­வு­ரி­மையும் பெற்று வாழும் உரிமை கொண்­ட­வர்கள் எனவும் வெளிப்­ப­டுத்திக் காட்­டி­னார்.இதன் அடுத்த பரி­ணா­ம­மா­கவே முன்னாள் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு அதை தார்­மீக வழியில் உண­ர­வைத்து பண்டா–செல்வா ஒப்­பந்தம் (1957) அதன் மறு­கட்­ட­மான டட்லி சேன­நா­யக்கா அர­சாங்க காலத்தில் டட்லி–செல்வா உடன்­ப­டிக்கை என்­பன ஒப்­பந்­தங்­க­ளாக விரி­வு­ப­டுத்­தப்­பட்­டன. இந்த ஒ­ப்­பந்த காலங்­களில் எல்லாம் பெரும்­பான்மை சமூ­க­மான சிங்­களச் சமூ­கத்­துக்கு சம­மாக தமிழ்மக்­க­ளுக்கு அர­சியல் உரிமை வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதை மேற்­படி பெரும்­பான்மை மக்­களின் தலை­வர்­க­ளான இவர்­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டதன் கார­ண­மாக ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. துர­திஷ்­ட­வ­ச­மாக அவை கிழித்தெ­றி­யப்­பட்­டாலும் தமிழ் மக்­க­ளுக்­கான உரிமை, அதி­கா­ரப்­ப­கிர்வு, தாயகக் கோட்­பாடு அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென்­பதை மான­சீ­க­மாக ஏற்றுக்கொண்­டுள்­ளனர் என்­பது வர­லாற்றை மாற்ற முடி­யாத உண்மை.

1978ஆம் ஆண்டு ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கி­ய­போது தமிழ்மக்கள் கலந்து கொள்­ள­வில்லை. மறு­புறம் அவர்கள் அதை ஏற்­றுக்­கொள்­ள­வு­மில்லை. தமிழ் மக்­களால் ஏற்றுக்கொள்­ளாத இந்த யாப்பின் பிர­தி­வாத விளை­வுகள் பிற்­கா­லத்தில் எவ்­வாறு இருந்­தன என்­பது மக்கள் அறி­யாத ஒரு விட­ய­மல்ல.

ஆயுதப் போருக்­கான விதை நாட்­டலில் இந்த யாப்பு எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் கொண்­ட­தாக விளங்­கி­யது என்­பது பலரும் தெரிந்து கொண்ட விடயம். 1983 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள நாட்டின் போர் நிலை­மைகள் அமை­திக்கு பங்கம் விளை­வித்­தது மாத்­தி­ர­மின்றி சர்­வ­தேச ரீதி­யா­கவும் அவப்­பெ­யரை உரு­வாக்­கிய நிலையில் தான் இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்­துக்கு இலங்கை அர­சாங்கம் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது. தமிழ்மக்­களின் நீண்­ட­கால அபி­லா­ஷை­க­ளுக்கு முடிவு காணப்­பட வேண்­டு­மென்ற கட்­டா­யத்தின் பேரி­லேயே இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்­துக்கு அமை­வாக மாகா­ண­சபை முறைமை உரு­வாக்­கப்­பட்டு வேறு மாகா­ணங்­க­ளுக்கு அளிக்­கப்­ப­டாத சலு­கை­யாக வட­–கி­ழக்கு மாகாணம் இணைக்­கப்­பட்டு மாகா­ண­சபை கொண்டு வரப்­பட்­டது. அவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட வேளையில் பெரும்­பான்மை சமூ­கத்தின் கடும் எதிர்ப்­புக்கு மத்­தியில் மாகா­ண­சபை முறைமை கொண்டு வரப்­பட்­டது என்­பதும் உண்­மையே.

தமிழ்மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான ஒரு தீர்வின் பொறி­மு­றை­யாக அது அமை­ய­வில்­லை­யென விமர்­சிக்­கப்­பட்­டாலும் தீர்­வொன்று வழங்­கப்­பட வேண்­டு­மென்ற சர்­வ­தேச அபிப்­பி­ரா­யத்தின் அடிப் ­ப­டையில் இந்­தியா தலை­மையில் அது நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­பொ­ழுது பெரும்­பான்மை சமூ­கத்தின் எந்­த­வொரு தலை­மையும் இதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இருந்­த­போ­திலும் உலக நாடு­களின் அபிப்­பி­ராயம் என்ற வகையில் சகல நாடு­களும் வர­வேற்­றி­ருந்­தன.

தமிழ்மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு சிங்­கள மக்­களின் முழு அனு­ச­ர­ணை­யுடன் அர­சியல் தீர்­வொன்றைக் கொண்டு வருவேன் என பகி­ரங்­க­மா­கவே கூறி சிங்­கள மக்­களின் அமோக ஆத­ர­வுடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் (1994) வெற்றி பெற்ற சந்­தி­ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  தான் அளித்த வாக்­கு­று­திக்கு அமைய 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத­ம் புதிய தீர்வுத் திட்­டத்­துக்­கான பொதியை முன்­வைத்தார். சிங்­களப் பெரும்­பான்மை மக்கள் எவ்­வித சல­ன­மு­மின்றி மெள­ன­மாக வர­வேற்­றார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்  முயற்­சியை எந்­த­வொரு சிங்­கள மகனும் கைநீட்டி எதிர்ப்புக் காட்­டவில்லை. அத்­திட்­டத்தை எதிர்க்­கட்­சி­யி­ன­ரான ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும் பெளத்த குரு­மாரும் எதிர்த்த­மைக்கு அமைய அவற்றில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு 1996 அதன் பின் இன்­னொரு திருத்­த­மாக 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது தமிழ் மக்­க­ளுக்கு கூடிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­படப் போகி­ன்றன எனக் காரணம் காட்டி ஐ.தே.கட்­சி­யினர் கடு­மை­யான எதிர்ப்பைக் காட்­டினர். இம்­மு­யற்சி படு­தோல்வி கண்­டது.

2009 இல் யுத்­தத்தை வெற்றி கொண்டு விட்­ட­தாக பெரு­மைப்­பட்­டுக்­கொண்ட இன்­றைய பிர­த­மரும் அன்­றைய ஜனா­தி­ப­தி­யு­மா­ன மஹிந்த ராஜபக்ஷ யுத்த வெற்­றிக்குப் பின் இந்­தி­யா­வுக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் வழங்­கிய வாக்­கு­று­தியில் தமிழ்மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய அதி­காரப் பகிர்வு முறையைத்தான் 13க்கு அப்பால் சென்று வழங்­குவேன் எனத் தெரிவித்­தி­ருந்தார். அதிலும் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் முழு ஒத்­து­ழைப்­பு­டனும் அர­சியல் பகிர்வை செய்து முடிப்பேன் என சத்­தி­யப்­ப­டுத்­தி­ய­தாக செய்­தி­களும் அறிக்­கை­களும் தெரி­விக்­கின்­றன. இவ்­வாறு ஒரு காலத்தில் வாக்­கு­றுதி நல்­கிய அர­சியல் குடும்­பத்தைச் சேர்ந்த இன்­றைய ஜனா­திபதியை பெரும்­பான்மை சிங்­கள மக்கள் விரும்­ப­மாட்­டார்கள், ஏற்றுக் கொள்­ளவும் மாட்டார்கள். இத்­த­கை­ய­தோர் ஆணையை சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து பெற­வில்­லை­யென்று மறு­த­லிப்­பது எந்­த­ள­வுக்கு நியா­ய­முறை என்பது புரியவில்லை.தமிழ்த் தலை­மைகள் எப்­பொ­ழு­துமே சிங்­கள மக்­க­ளையோ அவர்­க­ளது தலை­மை­க­ளையோ பகைத்துக் கொண்டு தமிழ்மக்­க­ளுக்­கான உரிமை வழங்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை எந்த தலை­மையும் முன்­வைத்­தது கிடை­யாது. தந்தை செல்வா அற­வழிப் போராட்­டத்தை தேர்ந்­தெ­டுத்­த­மைக்­கான கார­ணமும் அதுவே. சிங்­கள மக்கள் தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை நீதி­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொண்டு அதை ஜன­நா­யக வழியில் வழங்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே செல்வா அகிம்சை வழிப்­போரை அறி­முகம் செய்து வைத்தார். இதை அன்­றைய தலை­மைகள் உணர்ந்து கொள்­ள­வில்லை. இன்னும் கூறப்­போனால் அன்­றைய நிலை­மை இன்னும் தொடர்ந்த வண்­ணமேதான் காணப்­ப­டு­கி­றது.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­ய­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைக்க புதிய அர­சியல் யாப்­பொன்று  உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற  தீர்­மா­னத்தை முன் மொழிந்­த­வர்கள் சிங்­கள தலை­மை­களே. புதிய அர­சியல் யாப்­பொன்று உரு­வாக்­கப்­பட்டு அதன் வழி தமிழ்மக்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வு இடம்­பெற வேண்­டு­மாயின் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தியில் பொது­ஜன வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­பட்டு அவர்­களின் பெரும்­பான்மை ஆத­ர­வு­ட­னேயே அதி­கா­ரப்­ப­கிர்வு இடம்­பெற வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு தீர்வு நிலை­யா­ன­தா­கவும் பல­மு­டை­ய­தா­கவும் இருக்­கு­மென்று கூறி­யவர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சிங்­கள மக்­க­ளுக்கு ஒளித்து மறைத்து தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­பதில் நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக தமிழ் தலை­மைகள் காணப்­ப­ட­வில்­லை­யென்­பதை தென்­னி­லங்கை அர­சியல் தலை­மைகள் புரிந்து கொள்­வது அவசியம். இவை இவ்­வாறு பய­ணித்துக் கொண்­டி­ருக்­கிற நிலையில் தான் இன்­றைய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக்ஷ இலங்­கையின் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரின் விருப்­பத்­துக்கு மாறாக எத­னையும் என்னால் செய்ய முடி­யாது என்று தெரி­வித்திருக்கிறார். அவ்­வாறு இருப்­பினும் பெரும்­பான்மை சமூ­கத்­தினர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தமிழ்மக்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வு விட­யத்தில் மாற்றுக் கருத்துக் கொண்­ட­வர்­க­ளாக தம்மை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர் என்­ப­தற்கு ஆதாரம் ஏது­மில்லை. உதா­ர­ண­மாக பொது­ஜன பெர­முன வெளி­யிட்ட தேர்தல் விஞ்­ஞா­பனம் கூட அதை பறை­சாற்­ற­வில்லை. தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­வொரு அதி­கார பூர்­வ­மான தீர்­வையும் நாங்கள் வழங்­கப்­போ­வ­தில்­லை­யென அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்டு அதை சிங்­கள மக்கள் அங்­கீ­க­ரித்­தி­ருந்தால் ஜனா­தி­ப­தி­யி­ன் நிலைப்­பாட்டில் எவரும் குறை­கா­ண­மு­டி­யாது. 

”ஐந்து தமிழ்க் கட்­சிகள் கூட்­டாக வெளி­யிட்ட 13 அம்சக் கோரிக்­கைக்­கா­ரர்­க­ளுடன் நான் பேச்­சு­வார்த்தை வைக்­கப்­போ­வ­தில்லை. அது நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்ற கோரிக்­கைகள்” என விமர்­சித்­தி­ருந்த ஜனா­தி­ப­தி­ நியா­ய­மான கோரிக்­கையை முன் வைப்­ப­வர்­க­ளுடன் நான் பேசு­வ­தற்கு தயா­ரா­க­வுள்ளேன் என்ற தனது நிலைப்­பாட்டை தெரி­வித்­தி­ருந்­தமை இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டும். 

ஜனா­தி­ப­தியின் இன்­னொரு மறு­த­லிப்­பான செய்தி: “13ஆவது திருத்தம் இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் ஒரு பகு­தி. ஏலவே அது நடை­மு­றையில் உள்­ளது. பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாத்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதை எங்­களால் வழங்­க­மு­டி­யாது. இருந்­த­போதும் அதற்­கான மாற்று வழி குறித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கிறேன் ”என அவர் கூறி­யுள்ளமை. 

இக்­கட்­டு­ரையின் ஆரம்­பத்தில் குறிப்­பிட்­டது போல் 13ஆவது திருத்­த­மென்­பது நெருக்­க­டியும் நிர்ப்­பந்­தமும் நில­விய ஒரு சூழ்­நி­லையில் கொண்­டு­வ­ரப்­பட்­ட­ ஒன்று. இத்­தி­ருத்தம் கொண்­டு ­வ­ரப்­பட்ட வேளை பல சூழ்­நிலைக் கார­ணிகள் இருந்­துள்­ளன என்பதும் மறுப்­ப­திற்­கில்லை. சர்­வ­தேச நிர்ப்­பந்­தமும் பிராந்­திய நலனும் முதல் நிலைக்­கா­ர­ணி­யாக விளங்­கி­யுள்­ளன. தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு உடன் தீர்­வொன்று காண வேண்­டிய அவ­சரம் இருக்கும் ஒற்­றை­யாட்சி முறைக்குள் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம். எல்­லா­வற்­றுக்கும் அப்பால் 13ஆவது திருத்த வடி­வி­லான தீர்வை பெரும்­பான்மை தமிழ்மக்கள் ஏற்­றுக்­கொள்­ளாத இழிநிலை. 

திம்பு பேச்­சு­வார்த்­தை­களைத் தொடர்ந்து ஜே.ஆர். அரசின் நழுவல் போக்கு இந்­திய அரசின் நிலைப்­பாட்டில் ஒரு தீவி­ரத்­தன்­மையை உண்­டாக்­கி­யதன் விளை­வாக தனது பிராந்­திய  நலன் சார்ந்த தீர்­மா­னத்­துக்கு இந்­தியா வர வேண்­டிய சூழ்­நி­லையில் தான் அவ­ச­ர­மான இலங்கை–இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதன் ஒரு பக்­க­வி­ளைவு தான் 13ஆவது அர­சியல் திருத்தம். இந்த திருத்­தத்தின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்ட அதி­காரப் பகிர்­வா­னது, தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை குறைந்தபட்­ச­மேனும் பூர்த்தி செய்­ய­வில்­லை­யென காட்­டப்­பட்ட கடும் எதிர்ப்­புக்கு மத்­தியில் ஒரு திணிப்பு அதி­காரப் பகிர்­வாகவே இது கொண்டு வரப்­பட்­டது. இதற்கு ஒரு மறு­பி­றப்­புண்டு இதை இப்­போ­தைக்கு ஏற்றுக் கொள்­ளுங்கள் என்ற வற்­பு­றுத்தல் கார­ண­மாக மெள­ன­மாக  கைகட்டி ஏற்றுக் கொண்ட தரப்­பினர் மாகா­ண­சபை முறையை இயக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டார்கள். 

தெரிந்தோ தெரி­யா­மலோ ஆயு­தப்போர் தரப்­பி­னரில் ஒரு தரப்­பினர் இதை முற்­றாக நிரா­க­ரித்­தார்கள். அவர்­களின் பயம் கார­ண­மாக மித­வாத கட்­சி­களும் அதை ஏற்க மறுத்­தனர். 

வட–கிழக்கின் சுதந்­திரம், சுய­நிர்­ணயம், தாய­கக்­கோட்­பாடு அதி­கார மய­மாக கிடைக்கப் பெற வேண்­டு­மாயின் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் உச்ச அளவில் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதை அன்­றைய மாகாண ஆட்­சியை கையில் எடுத்­த­வர்­களும் வலி­யு­றுத்தி நின்­ற­போதும் ஜே.ஆர். ஆட்சி கண்டு கொள்­ள­வு­மில்லை; கணக்கில் எடுக்­க­வு­மில்லை. இருந்­த­ போ­திலும் இந்­திய  ரா­ணு­வத்தின் உத­வி­யுடன் மாகாண ஆட்­சி­யா­ளர்கள் குறிப்­பிட்டு கூறு­வ­தாயின் வட–கிழக்கு மாகாண ஆட்­சி­யா­ளர்கள் (C.V.F) என்ற துணைப்­ப­டையை உரு­வாக்க முயற்­சி­களை மேற்­கொண்­டார்கள். அவை தோல்­வி­யிலேயே முடிந்­தது. 

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­ இலங்கை ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பின் போது 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தும்­படி அழுத்­த­மொன்றை பிர­யோ­கித்­த­தாக ஊடக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. விட்ட குறை தொட்ட குறை  என்­பது போல் தனது நாடு முன்­மொ­ழி­ந்த திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தும்­படி கோர வேண்­டிய தார்­மீகப் பொறுப்பின் அடிப்­ப­டை யில் அந்த மெல்­லிய அழுத்தம் மறை­மு­க­மாக விடுக்­கப்­பட்ட போதும் அந்த கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில் இலங்கை ஜனா­தி­பதி மறு­த­லிக்­க­வில்லை. இருந்­த­ போ­திலும் அந்த விடயம் முழு­மை­யாக சாத்­தி­யப்­படக் கூடிய ஒன்­றல்ல என்­பதை ஊட­கத்­துக்­கான பேட்­டியில் எடுத்துக் கூறி­யி­ருக்­கின்றார். 

ஜனா­தி­ப­தியின் இந்த மறு­த­லிப்­பான கருத்­தா­னது தமிழ்மக்­களைப் பொறுத்­த­வரை பெரும் ஏமாற்­றத்­தையும் தமிழ்த் தலை­மை­க­ளுக்கு சவால் நிலை­மையை­யுமே உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது. 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மென இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­மையை தமிழ்மக்கள் வர­வேற்­றி­ருந்­தார்கள். இந்­தி­யாவின் கரி­சனை தங்­களை நோக்கி பொருத்­த­மான வேளையில் திரும்­பி­யுள்­ளது என்ற கார­ண­மாக அது இருக்­கலாம். 

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வட–கிழக்­கி­லுள்ள ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்கி அவரின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்த முயற்­ சித்­த­ போதும்  போடப்­பட்ட கணக்கு தவ­று­த­லாகி விட்ட நிலையில் ஏமாற்­றமே முடி­வா­கி­யது. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பகி­ரங்­க­மா­கவே தமிழ் மக்கள் ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ருக்கே தாங்கள் வாக்கை அளித்து வெற்றி பெற வைக்க வேண்­டு­மென்று  கோரிக்­கை  விடுத்­தி­ருந்­தனர். அவர்­களின் இந்த முடிவு தீர்க்க தரி­ச­ன­மற்ற முடிவு என்ற விமர்­ச­னமும் தற்­போது முன்­வைக்­கப்­பட்­டு­வரும் நிலையில் எந்த தீர்­மா­னத்­துக்கும் வர­மு­டி­யாத நிலையில் இரு­தலைக் கொள்ளி எறும்பின் நிலை போன்ற தோர் அவலநிலை கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்­ளது என்­பது கசப்­பான உண்­மைதான். 

ஜனா­தி­பதி தனது பத­வி­யேற்பு வைப­வத்தின் போது தன்னை ஆத­ரிக்­கும்­படி தமிழ் மக்­களை தான் கோரி­யி­ருந்த போதும் அம்­மு­யற்­சியில் தன்னால் வெற்றி பெற முடி­ய­வில்லை என்ற கருத்தை கூறி வைத்­தமை நேர­டி­யாக இல்­லா­விட்­டாலும் மறை­மு­க­மாக தமிழ்த் தரப்­பி­னரை குற்றம் சாட்டும் நிலை­யாக காணப்­பட்ட நிலை­யில்தான் இந்­தியப் பிர­த­மரின் வேண்­டுகோள் தமிழ்த் தரப்­பி­ன­ருக்கு ஒரு நம்­பிக்­கையை அளித்­துள்­ள­தென்ற யதார்த்­தத்தை புரிந்து கொள்ள முடி­கி­றது.  ஜனா­தி­ப­தியின் செய்­தியில் 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாகத் தன்னால் நடைமு­றைப்­ ப­டுத்த முடி­யாது போனாலும் அதற்கு  மாற்­றீ­டாக மாற்று வழி­பற்றி கலந்­து­ரை­யாட முடியுமென்ற ஒரு மறைமுகமான செய்தியை குறிகாட்டியுள்ளார். 

எது எவ்வாறு இருப்பினும் 13ஆவது திருத்தம் தொடர்பான அதிருப்திகள் தமிழ்மக்கள் மத்தியில் கடந்த 32 வருடங் களுக்கு மேலாகவே இருந்து வருகிறது. அத்திருத்தத்தின் பலவீனம், குறைபாடு போதாமை நலிவான அதிகாரப் பகிர்வு முறை பற்றி பல தடவைகள் தமிழ்த் தலைமைகளால் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களின் 70 வருட போராட்டங்களுக்கு அது போதுமான தீர்வாக இருக்க வில்லையென்ற நியாயப்பாடுகள் தமிழ் தலைமைகள் போதியளவு விலாவாரியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கருத்தொன்றின் போது தமிழ்மக்களின் அரசியல் அதிகாரப்பகிர்வு விடயத்தில் 13க்கு அப்பால் சென்று தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை மிக யதார்த்தமாக வலியுறுத்தியிருந்தார். 

தமிழ் மக்­களின் பிரச்­சினை ஒரு நீண்ட காலப்­பி­ரச்­சினை நீறு­பூத்த நெருப்பைப் போல் தகித்து கொண்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்ல தேசத்தின் எல்லை தாண்டி பேசப்­பட்டு வரும் பிரச்­சி­னை­யென்­பது அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­படும் நிலைமை கொண்­டது. அது மட்­டு­மின்றி மூன்று தசாப்த காலத்­துக்கு மேலாக இடம்­பெற்ற யுத்­தத்தின் பேரி­ழப்­புக்­களைச் சந்­தித்த தமிழ்மக்கள் தமது அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்வின் அவ­சி­யத்தை தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இணைந்த வட–­கி­ழக்கில் சமஷ்டி முறை­யி­லான தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது அவர்­க­ளது நீண்­ட­கால நிலைப்­பா­டா­க­வுள்­ளது. ஆனால் தமிழ் மக்­களின் இந்த நிலைப்­பாடு தொடர்பில் தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் கடு­மை­யான விமர்­ச­னங்­களும் எதிர்ப்­புக்­களும் காணப்­ப­டு­கின்­றது என்­பது கசப்­பான உண்­மை­.  இருந்­த­போ­திலும் பெரும்­பான்மை சமூ­க­மென்ற வாய்ப்­பாடோ அல்­லது அதி­கார ஆணையோ நாட்டின் நல்­லி­ணக்­கத்­துக்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் உதவப் போவ­தில்லை என்­பதை மிக நுண்­ணிய முறையில் அவ­தா­னித்து ஆராய்ந்து அதற்­கு­ரிய பொருத்­த­மான தீர்வைக் காண­வேண்­டிய பொறுப்பை பெரும்­பான்மை சிங்­கள மக்­களே தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யிடம் கையளித்துள்ளார்கள். இதனை பயன்படுத்தாது விடின்   பெரும்பான்மை, சிறுபான்மை, சிங் கள ராஜ்ஜியம், வட–கிழக்கு அரசு என்ற இழுபறிகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வு காணவே முடியாது என்பதே நிதர்சனம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22