காணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் : வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்  

Published By: R. Kalaichelvan

08 Dec, 2019 | 03:16 PM
image

(நா.தனுஜா)

காணாமல்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர்களே தற்போது மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றார்கள்.

எனவே இத்தகையதொரு சூழ்நிலையில் காணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலிமைப்படுத்துவோமே தவிர, அதனை மலினப்படுத்த மாட்டோம் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.

அதேவேளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இதுவரையில் எமது அலுவலகத்தின் மீது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

நாங்கள் தொடர்ந்தும் காணாமல்போனோர் பற்றிய விபரங்களைக் கண்டறியும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட கோத்தபய ராஜபக்ஷவிடம் இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நானோ அல்லது எனது சகோதரனோ போரை வழிநடத்தவில்லை என்றும் இராணுவத்தளபதியே போருக்குத் தலைமை தாங்கினார் என்றும் பதிலளித்த கோத்தபய ராஜபக்ஷ, சரணடைந்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று அதன் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலியய பீரிஸிடம் வினவியபோது பின்வருமாறு பதிலளித்தார்:

'காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்பது ஒரு சுயாதீன ஆணைக்குழுவாகும். அதற்குரிய தனிச்சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட இவ்வலுவலகம், சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றது. 

எனவே ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இதுவரையில் எமது அலுவலகத்தின் மீது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. நாங்கள் தொடர்ந்தும் காணாமல்போனோர் பற்றிய விபரங்களைக் கண்டறியும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்றார்.

அதேவேளை காணாமல்போன தமது உறவுகளைத்தேடி சுமார் இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அவருடைய சகோதரன் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்த ஆட்சிக்காலத்திலேயே தமது உறவுகள் காணாமல் போனதாகவும், எனவே அவர்களே பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்போது நாட்டில் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டிருந்தாலும் காணாமல்போன எமது உறவுகளைத் தேடி நாங்கள் முன்னெடுத்துவந்த போராட்டங்களை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்.

தற்போது அரசாங்கம் அமைத்திருப்பவர்கள் முன்னர் ஆட்சிபீடத்திலிருந்த போதே எமது உறவுகள் காணாமல் போனார்கள். தற்போது அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். அவர்களே காணாமல்போன எமது உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலிருப்பவர்களாவர்.

எனவே இத்தகையதொரு சூழ்நிலையில் எமது போராட்டங்களை மேலும் வலிமைப்படுத்துவோமே தவிர, அதனை மலினப்படுத்த மாட்டோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43