எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்?

Published By: J.G.Stephan

08 Dec, 2019 | 10:42 AM
image

ஆர்.ராம்

8ஆவது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது அமர்வு எதிர்­வரும் ஜன­வரி மாதம் 3ஆம் திகதி முற்­பகல் 10 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதன்­போது பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ அக்­கி­ரா­சன உரை ஆற்­ற­வுள்ளார். இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போ­வது யார் என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. 

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றா­வது கூட்­டத்­தொடர் தற்­போது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தாஸ பெய­ரி­டப்­பட்டு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விற்கு எழுத்­து­மூ­ல­மான அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  

இருந்த போதும் பாரா­ளு­மன்ற அமர்­வொன்று இடம்­பெற்று அதில் எதிர்க்­கட்சித் தலை­வரின் பெயர் அறி­விக்­கப்­பட்ட பின்­னரே அவ­ருக்­கு­ரிய ஆச­னத்தில் அம­ரு­வது முதல் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ருக்கு உத்­தி­யோக பூர்­வ­மான அதி­கா­ரங்கள் கிடைக்­கப்­பெறும் என்­பதே சம்­பி­ர­தா­ய­மா­க­வுள்­ளது. 

இவ்­வா­றான நிலையில் எதிர்­வரும் 3ஆம் திகதி முற்­பகல் 10மணிக்கு நடை­பெறும் நான்­கா­வது பாரா­ளு­மன்­றத்­தொ­டரின் முதல் அமர்வில் ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் கொள்­கைப்­பி­ர­க­டன விட­யங்­களை முன்­வைக்கும் அக்­கி­ரா­சன உரை மட்­டுமே இடம்­பெ­ற­வுள்­ளது. அத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்றம் ஒத்­தி­வைக்­கப்­படும் என்றும் உள்­ள­கத்­த­க­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் ஜனா­தி­ப­தியின் அக்­கி­ரா­சன உரைக்கு முன்­ன­தாக எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கான அறி­விப்­பினை விடுக்கும் சம்­பி­ர­தா­ய­மொன்றும் இல்லை. இவ்­வா­றான நிலையில் தான் அக்­கி­ரா­சன உரை­யின்­போது எதிர்க்­கட்சித் தலைவர் ஆச­னத்தில் அம­ரப்­போ­வது யார் என்ற கேள்­விகள் எழுந்­துள்­ளன.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராலோ அல்­லது செய­லா­ள­ராலோ பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்சி ஆச­னத்­தினை சஜித்  பிரே­ம­தா­ஸ­வுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். இச்­செய்தி அச்­சுக்கு செல்லும் வரையில் அவ்­வா­றான பரிந்­துரை செய்­யப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

இதே­வேளை, புதிய கூட்­டத்­தொ­டரின் முத­லா­வது அமர்­வினை முற்­பகல் ஆரம்­பித்து ஜனா­தி­ப­தியின் அக்­கி­ரா­சன உரை­யுடன் சபையை ஒத்­தி­வைத்து   விட்டு பின்னர் பிற்­பகல் ஒரு  மணிக்கு மீண்டும் சபை அமர்­வினை ஆரம்­பித்து நடத்­து­வ­தோடு அச்­ச­ம­யத்தில் பிர­தமர், சபை  முதல்வர், எதிர்க்­கட்­சித்­த­லைவர், எதிர்க்­கட்சி பிர­தம கொறடா ஆகிய பத­வி­க­ளுக்­கான பெயர்கள் உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளன. 

அத்­துடன் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை பதவி வில­க­வேண்டும் என்ற கருத்­துக்கள் புதிய அர­சாங்­கத்­தி­லுள்ள சிலர் மத்­தியில் எழுந்­துள்ள நிலையில் புதிய பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­ட­ரிலும் சபா­நா­ய­க­ராக கரு­ஜ­ய­சூ­ரி­யவே தொட­ர­வுள்­ள­தா­கவும் நம்­ப­க­ர­மான தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

இதே­வேளை, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி வெற்­றி­டத்­திற்­கான பெயர்கள் ஜனா­தி­ப­தியால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவற்­றுக்­கான அனு­ம­தியை அர­சி­ய­ல­மைப்புச் சபை­யி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. 

இதற்­காக எதிர்­வரும் 12ஆம் திகதி சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்­புச்­சபை கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்­கான  உத்­தி­யோக பூர்வ அறி­விப்பு விடுக்­கப்­ப­டாத நிலையில் அக்­கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்கு சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட வேண்­டுமா என்­பது பற்­றியும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் குறித்த அர­சி­ய­ல­மைப்புச் சபை கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பங்­கேற்­கப்­போ­வது யார் என்ற வினாவும் எழுந்­துள்­ளது. 

இத­னை­வி­டவும் அர­சி­ய­ல­மைப்புச் சபைக்கு சபா­நா­யகர், பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் நிரந்­தர உறுப்­பி­னர்­க­ளாக இருக்க, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லை­வரால் இரு உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் ஒரு உறுப்பினரும் சிறுபான்மை தரப்பினைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், சிவில் அமைப்பினைச் சேர்ந்த மூவரும் நியமிக்கப்படுவது சம்பிரதாயமாகும். 

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட  உறுப்பினராக மஹிந்த சமரசிங்க உள்ளார். தற்போது புதிய ஜனாதிபதி பதவி ஏற்றுள்ள நிலையில் அந்த உறுப்பினரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. காரணம் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33