மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு

Published By: Daya

07 Dec, 2019 | 04:44 PM
image

மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த இரு மாணவிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் வவுனியா பூவரசங்குளத்தை சேர்ந்த நபர் ஒருவரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயன்ற நிலையில் இரு மாணவிகளும் கிராம மக்களால் காப்பாற்றப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம்  தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

அடம்பன்   பகுதியைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் இரு மாணவிகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேர வகுப்பு முடிவடைந்து வீடு சென்ற வேலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர் தகாத விதமாக நடந்து கொண்டதுடன் ஒரு மாணவியைத் தாக்கியும் கழுத்து மற்றும் கண்ணத்தில் கடித்து குளத்தில் மூழ்கடிக்கவும் முயன்றுள்ளார்.

மற்றைய மாணவி தப்பித்துச் சென்ற நிலையில் கிராம மக்களின் உதவியுடன் மற்ற மாணவியை மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிராம மக்களைப் பார்த்தவுடன் குளத்தினூடாக  தப்பித்துச்  சென்ற நிலையில் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் சனிக்கிழமை (7) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

 பாதிக்கப்பட்ட மாணவிகள்  சார்பாகச் சட்டத்தரணிகளான டிணேஸன் மற்று சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட   நீதவான்  குறித்த சந்தேநபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் 18 ஆம் திகதி சந்தேகநபரை உறுத்திப்படுத்துவதற்கான அடையாள அணிவகுப்பிற்கும் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58