சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம் : பொலித்தீன் பாவனை முற்றாக தடை 

07 Dec, 2019 | 04:50 PM
image

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம்  டிசம்பர்  11 ஆம் திகதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சூழல் மாசு கருதி நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் பல விதிமுறைகளை நடைமறைப்படுத்தவுள்ளது. இதனையடுத்து  யாத்திரிகர்களுக்கு பொலித்தீன் பாவனை முற்றாக தடைச்செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றீடாக யாத்திரிகர்களுக்கென இலவசமாக பயணப்பையை வழங்குவதுடன், பயண முடிவில் அந்த பையை திருப்பி கொடுத்து செல்லவும் இச்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு நேரங்களில் யாத்திரிகர்கள் செல்லும் வழியில் மின்சார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பாதுகாப்புக்கருதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தவும் புகையிரத மார்க்கமாக வருகை தரும் யாத்திரிகர்களின் நலன்கருதி ஹட்டன் புகையிரத நிலையத்திலிருந்து நல்லத்தண்ணிர் நகரம் வரை விசேட பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணிர் மலையடிவாரத்தில் அமைக்கப்படவுள்ள பொலிஸ் நிலையத்திற்கு மேலதிகமாக சீத்தக்குவ, ஊசி மலையுச்சி முதலிய இடங்களிலும் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

சிவனொளிபாதமலை யாத்திரையின் ஆரம்பமானது டிசம்பர் 9 ஆம் திகதி பெல்மதுமளை கல்பொத்தாவெல ரஜமகா விகாரையில் வழிபாடுகளுடன் நடைபெறவுள்ளது, இதனை தொடர்ந்து, 11 ஆம் திகதி சமன் பூஜை வழிபாட்டு பொருட்களும்,பெல்மதுளை ரஜமகா விகாரையிலிருந்து விக்கிரங்கங்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படவுள்ளது.

ஆறுமாதங்கள் தொடரவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் வெசாக் போயாதினத்துடன் நிறைவு பெறுகின்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49