அழுத்தம் பிரயோகிப்போம் : ஜெனிவா பிரேரணை, மார்ச் கூட்டத் தொடர் குறித்து கூட்டமைப்பு தெரிவிப்பு

07 Dec, 2019 | 12:27 PM
image

(ஆர்.யசி)

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற  பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த நகர்வு  அடுத்த ஆண்டு  மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம் என்று  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

 பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திற்கு எமது  அழுத்தங்களை முழுமையாக நாம் பிரயோகிப்போம் எனவும்  அவர்  கூறினார். 

பொறுப்புக் கூறல் விடயங்களில்   புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். 

 இது தொடர்பில்  அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

ஜெனிவா விவாகரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம். இதில் இலங்கை குறித்த விவகாரத்தில் எமக்கு அனுசரணையாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்த குழுவிற்கு இப்போது தலைமை தாங்குவது பிரித்தானியா, ஆகவே அவர்கள் தான் இப்போது இதற்கொரு வடிவம் கொடுக்க வேண்டும். அந்தவகையில்  பிரித்தானிய தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரமாக பேசினேன். வருகின்ற சில நாட்களில் மேலும் சிலருடன்  பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. 

ஆகவே எழுந்துள்ள புதிய சூழ்நிலை சம்பந்தமாக இப்போது பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இது மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம்.  பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய  அரசாங்கம் தீர்மானங்களை எதிர்க்கவில்லை. சில ஆரோக்கியமான நகர்வுகளை அவர்கள் முன்னெடுத்தனர். 

பொறுப்புக் கூறல் விடயத்தை தவிர்த்து செயற்பட முடியாது. பொறுப்புக்கூறல் என்பது எல்லா அரசாங்கங்களுக்கும் இருக்கின்ற பொறுப்பாகும். அதனை தட்டி  கழிக்கவே முடியாது. இந்த புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளபடுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம். அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கண்ணை மூடி செயற்படுவதாக அர்த்தமில்லை. இந்த விடயத்தில் எமது எதிர்ப்பையும் அழுத்தங்களையும் முழுமையாக நாம் பிரயோகிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58