கால்வாயைத் திறந்துவிடுமாறு கோரி காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

06 Dec, 2019 | 06:46 PM
image

சட்ட விரோதமாக குளம் அமைத்து வெள்ளநீர் வடிந்தோடுவதை தடுத்துள்ளமையை கண்டித்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட கர்பலா நகர்,கர்பலா வீதி ஈனிசியர் புரம் பிரதேசத்தில் சட்ட விரோதமாக குளம் அமைத்து காத்தான்குடி வெள்ள நீர் வடிந்தோடுவதை தடுத்துள்ளமையை கண்டித்தும்,வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய பாரம்பரிய தோனாக்கால்வாயை திறந்து விடுமாறு வலியுறுத்தியே இன்று 06  காத்தான்குடியில் ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி ஆர்ப்பாட்ட பேரணி காத்தான்குடி-01 முதலாம் குறிச்சி பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில் இருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றதுடன் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி காத்தான்குடி பிரதேச செயலாளர் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜர் பிரதேச செயலாளர் பிரதேச செயலகத்தில் இல்லாத காரணத்தால் காத்தான்குடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி சித்தி ஜாயிதா ஜலால்தீனிடம் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கையளித்தார்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இயற்கையாக ஓடும் வழியை மறித்து ஊரை வெள்ளக் காடாக்காதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் ஏழைகளுக்கு நீதி வேண்டும், வழி விடு வழி விடு மழை நீர் வழிந்தோட வழி விடு, காலாதி காலமாக நீர் வழிந்தோடும் இயற்கைத் தோணாவை மூடாதே, விவசாயம் வேளாண்மை இல்லாத இடத்தில் குளம் எதற்கு, சட்ட விரோத குளம் கட்டி எங்கள் வீடுகளை மூழ்கடிக்காதே போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததோடு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நேரத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் காத்தான்குடி பிரதேசத்தில் காணப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04