கொழும்பிலிருந்து கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: டொரேவிடம் சி.வி. தெரிவிப்பு

Published By: MD.Lucias

01 Jun, 2016 | 06:49 PM
image

நல்லிணக்கத்துக்கான விடயம் முன்னெடுக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களையும் அப் பாதிப்புக்களை ஏற்படுத்தியவர்களையும் ஒருங்கிணைத்து பேசும்போது பாதிக்கப்பட்டவர்களுடைய மனநிலைகளை, அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை, வேண்டுதல்களை அறிந்து தான் நல்லிணக்கத்தை கொண்டுவரமுடியும். அவ்வாறில்லாமல் கொழும்பிலிருந்து கொண்டு நல்லிணக்கத்துக்காக அதை செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்று கூறுவதால் நல்லிணக்கத்தை நாட்டில் கொண்டுவரமுடியாது என்று நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹெற்ரமிடம் தான் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார அமைச்சர்,  வடமாகாண முதலமைச்சர் சி.வி .விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்தரையாடினார். 

இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார   அமைச்சர், நல்லிணக்கத்துக்கான  பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு நோர்வே அரசாங்கம் உதவிகளை வழங்குவது தொடர்பிலும் குறிப்பிட்டு என்னுடைய கருத்துக்களை கேட்டறிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உண்மை எனவும் அது கொழும்பிலிருந்தே எடுக்கப்படுவதுடன் எம்முடன் கலந்தாலோசித்து எடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நான் எடுத்துக்கூறியுள்ளேன்.

இதற்கு நாட்டில்   நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹெற்ரம் தனக்கு உறுதிமொழி வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08