ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடகிழக்கு ஆயர்கள்

Published By: R. Kalaichelvan

06 Dec, 2019 | 11:45 AM
image

வடக்கு, கிழக்கு மாகாணங் களின் ஆயர்கள் நால்வரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அரவணைத்துச் செல்ல விருப்பம் காட்டுவது எமக்குத் தெரிகிறது. அவர் ஊடகங்களுக்கு வழங்குகின்ற பேட்டிகளும் அறிக்கை களும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

இது தொடர்பாக நாட்டிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தினரும் அவருக்கு நல்ல பல ஆலோசனை வழங்க சித்தமாயுள்ளோம். அதற்காக எங்களை சந்திப்பதற்கு எதிர்வரும் 13ஆம் திகதி நேரம் ஒதுக்கியுள்ளார்.

அன்றைய தினம் நாம் எதிர் நோக்குகின்ற பல பிரச்சனைகளை அவரிடம் முன்வைப்போம். நல்ல பலன் கிடைக்குமென நம்புகிறோம். எமது துாதுக்குழுவுக்கு யாழ்ப்பாணமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம்  தலைமை தாங்குவார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27