ஜனாதிபதியை சந்தித்தார் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

Published By: R. Kalaichelvan

06 Dec, 2019 | 11:29 AM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை மாலைதீவின் வெளியுறவு விவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

மாலைதீவின் வெளியுறவு விவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் என்னுடன் சந்தித்து கலந்துரையாடியமை மகிழ்வானது.

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் அனுப்பியிருந்த அன்பான வாழ்த்துக்களையும் அவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டேன்.

எமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் எமது பிராந்தியத்தின் அமைதி மற்றும் மேம்பாடு என்பவை தொடர்பாக நானும் அவரும் கலந்தாலோசித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தன்னுடையவும் மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் அவர்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர், 

“எனது நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அங்கு அரசியல் நிலைமை ஸ்திரமாக உள்ளது. ஆளும் கூட்டணி பலமாக உள்ளதெனத் தெரிவித்தார்.” 

இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இருதரப்பு மற்றும் பிராந்திய கூட்டுறவு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் தெரிவித்தார். இத்தகைய கூட்டுறவின் ஊடாகவே போதைப்பொருள் பிரச்சினை இளைஞர்கள் தீவிர சிந்தனையின்பால் செல்வதை முடியுமான அளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் திறந்தே உள்ளது எனக் குறிப்பிட்டார்.

பொருளாதார மேம்பாட்டிற்காக இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமானதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதியும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சரும் உடன்பட்டனர். 

இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை இலங்கைதான் 70 களின் ஆரம்பத்திலேயே முன்வைத்ததென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாலைத்தீவின் தூதுவர் ஒமர் அப்துல் ரசாக் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26