இரா­ணுவ ஆட்­சி­க்கு எடுத்துக்காட்­டாக பெளத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­கின்­றன: விந்தன்

Published By: J.G.Stephan

05 Dec, 2019 | 03:09 PM
image

(எம்.நியூட்டன்)

வடக்கு, கிழக்கில் மதத்தின் பெய­ராலும் இனத்தின் பெய­ராலும் ஆக்­கி­ர­மிப்பு யுத்­தத்தை அரசாங்கம் எங்கள் மீது கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது. இதன் வெளிப்­பா­டா­கத்தான் பௌத்த விகா­ரை­களும் புத்தர் சிலை­களும் வைக்கும் நட­வ­டிக்­கைகள் இந்த அர­சாங்­கத்தால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. தெற்கில் இல்­லாத இரா­ணுவம் வடக்கு வீதிகள் முழுக்க குவிக்­கப்­பட்­டுள்­ளது. இது இரா­ணுவ ஆட்­சி­யையே எடுத்துக் காட்­டு­வ­தாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் கன­க­ரட்ணம் விந்தன் தெரி­வித்தார்.

சம­கால நிலை­வரம் தொடர்­பான ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போ­தைய ஜனா­தி­பதி முன்­னைய மஹிந்த ராஜ­பக்்ஷவின் ஆட்­சியில் பாதுகாப்புச் செய­லாளர், இரா­ணு­வத்தில் லெப்­டினன்ட் கேணல் பத­வியிலிருந்­தவர். அவர் இன்று ஜனா­தி­ப­தி­யாக வந்திருக்­கின்றார். அவர் ஜனா­தி­ப­தி­யாக வந்த உட­னேயே இரா­ணு­வத்­திற்கு பாது­காப்பு சம்­பந்­த­மான சகல அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கி­யி­ருக்­கின்றார். 

இரா­ணுவம் இப்­போது வீதி­யெங்கும் இறங்­கி­யுள்­ளது. வர்த்­த­மானி அறி­வித்தலின் பிர­காரம் பாது­காப்பு அதி­கா­ரங்கள் இரா­ணு­ வத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ளன. ஆனால் தேவை­யான அள­விற்கு பொலிஸ் நிலை­யங்கள் உள்­ளன. சிவில் சம்­பந்­த­மான ஏனைய நட­வ­டிக்­கை­க­ளையும் பொலி­ஸாரும் புல­னாய்­வா­ளர்­களும் பார்த்துக்கொண்டுதான் இருக்­கின்­றார்கள். 

ஆனால் இங்கு வடக்கு, கிழக்கில் இரா­ணு வம் வீதி­களில் நின்று சோதனை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுக்கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் இந்த நடை­முறை யுத்த காலத்தில் தான் இருந்­தது. ஆனால் தென்­னி­லங்­கையில் பார்த்தால் இரா­ணு­வத்­தி­னரை எங்கும் காண­மு­டி­யா­துள்­ளது. இது ஒரு இனத்தை அடக்­கு­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

வலி­காமம் வடக்கு, தையிட்டிப் பிர­தே­சத்தில் இரண்டு ஏக்கர் காணியை கைய­கப்­ப­டுத்தி விகா­ரை­களை அமைக்­கின்­றது. இரா­ணுவம் என்ன செய்ய வேண்டும்? ஒட்­டு­மொத்த மதங்­க­ளுக்கும் இனங்­க­ளுக்கும் தான் பாது­காப்பே தவிர என்ன நடக்­கி­றது? கத்­தோ­லிக்க ஆலயம் கட்­டு­வ­தில்லை, கோவில் கட்­டு­வ­தில்லை, மசூ­திகள் கட்­டு­வ­தில்லை, தையிட்­டியில் விகாரை எதற்கு? மதத்தின் பெயரால், இனத்தின் பேரால் ஆக்­கி­ர­மிப்பு யுத்­தத்தை எங்கள் மீது கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது இந்த அர­சாங்கம்.

அது மட்­டு­மல்ல நீரா­வி­யடிப்பிள்­ளை யார் ஆல­யத்தில் புத்தர் சிலையை வைக்கின்­ றார்கள். இது மட்­டு­மன்றி கொழும்புத்­து­றை யில்  300 ஏக்கர் காணியை சுவீ­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்கின்றார்கள். புங்­கு­டு­தீவில் வல்லன் பகுதியில் 10 குடும்பங்­க­ளுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. 

இதி­லி­ருந்து பார்க்­கும்­போது இரா­ணுவம் வடக்கில் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளது. இந்த அர­சாங்கம் இதைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். இது தொடர்­பான அரச அதி­கா­ரிகள் அல்­லது நில அள­வை­யா­ளர்­க­ளாக இருக்­கலாம். அல்­லது பிர­தேச செய­லாள­ராக இருக்­கலாம். அப்­பாவிப் பொது­மக்­களின் காணி­க­ளையும் சொந்த நாட்­டிலே அக­தி­க­ளாக வாழும் மக்­க­ளையும் குடி­யேற்றம் நடை­பெ­றாது இருக்கும் பிர­தேசத்­தி­னையும் தோட்டக் காணி­க­ளையும் கருத்திற்கொண்டு இராணுவம் காணிகளை ஆக்­கி­ர­மித்து தோட்டம் செய்­வது, விகாரை அமைப்­பது தொடர்பான செயல்களுக்கு உடந்தையாக இருக்காமல் அடக்குமுறையான செயற்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல் இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதில் சம்பந்தப் பட்ட சகல அதிகாரிகளும் திணைக்களங் களும் ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது என்றும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் பட்சத்தில் இதற்கான போராட்டங்கள் எதிர் காலத்தில் தீவிரமடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58