சிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு?

Published By: Digital Desk 3

05 Dec, 2019 | 03:19 PM
image

சிம்­பாப்­வேயின் முன்னாள்  சர்­வா­தி­கா­ரி­யான ரொபேர்ட் முகாபே கடந்த செப்­டெம்பர் மாதம் 9ஆம் திகதி தனது 95 ஆவது வயதில்  சுக­வீ­ன­முற்ற நிலையில்  சிங்­கப்­பூரில் மர­ண­மா­னமை அனை­வரும் அறிந்­த­தாகும்.

இதன்­போது அவர் 7.7 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான பணத்­தையும் பல சொத்­துக்­க­ளையும் 10 கார்­க­ளையும் விட்டுச் சென்று ள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அநே­க­மான சொத்­துகள் அவ­ரது பெயரில் இல்லை எனவும் அந்தச் சொத்­துகள் தொடர்­பில் ­அவர் உயில் எதனையும் எழுதி வைத்து விட்டுச் செல்­ல­வில்லை எனவும் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் நேற்று முன்­தினம் செவ்­வா­ய்க்­கி­ழமை கூறியதா­க அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. 2001ஆம் ஆண்டு  கசிந்த  தர­வு­களின் பிர­காரம் முகா­பே­யிடம் ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சொத்­து கள் இருப்­ப­தாக  கரு­தப்­பட்­டது.

இந்­நி­லையில் முகா­பேயின் மக­னான பொனா சிகோவோர்  தனது தந்­தையின் சொத்­து­களை பதி­வு­செய்­வ­தற்கு  உயர் நீதி­மன்­றத்­திற்கு மனு­வொன்றை  தாக்கல் செய்­தி­ருந்தார். அந்த சொத்­து­களில் உள்­நாட்டு வங்­கி­யி­லி­ருந்த 7.7  மில்­லியன்  ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான பணம், ஹரேரே நக­ரி­லி­ருந்த 4 வீடுகள், 10 கார்கள், ஒரு பண்ணை, கிரா­மப்­புற வீடொன்று மற்றும்  பழத்­தோட்­ட­மொன்று என்­பன உள்ள­டங்­கு­கின்­றன. அதே­ச­மயம் முகாபே 2008ஆம் ஆண்டு  தனது சர்ச்­சைக்­கு­ரிய தேர்­தலின்போது ஹொங்­கொங்கில் 4 மில்­லியன்  ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான மாளி­கையை வாங்­கி­யி­ருந்தார். இந்­நி­லையில்  முகா­பேயின் பல சொத்­துகள் அவ­ரது பெயரில் இல்­லா­த­தாலும் அவை தொடர்பில் அவர் உயில் எத­னையும் எழுதி வைக்­கா­த­தாலும்  அவ­ருக்கு உரி­மை­யா­ன­தாக கூறப்­படும் பல மில்­லியன்  ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான  சொத்­துக்­களை இனங்­கண்­ட­றிந்து உரி­மை­கோர முடி­யாத சிக்கல் நிலைக்கு  அவ­ரது குடும்­பத்­தினர்   உள்­ளா­கி­யுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34