இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொரே ஹெற்ரம்,  4 பிரதிநிதிகளுடன் 3 நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றுக் காலை இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.