கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் அதிகரிப்பு-உரிய நடவடிக்கை எடுக்குமா மாநகர சபை

Published By: Daya

05 Dec, 2019 | 09:47 AM
image

கல்முனை மாநகர சபை பகுதியில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள்  அதிகரிப்பினால் பொதுப் போக்குவரத் திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.தற்போது இப்பகுதியில் அடைமழை பெய்து வரும் நிலையில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இதனால் இவ்வீதியில் பயணம் செய்யும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றன. இக்கட்டாக்காலிகள்  கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.

அத்துடன் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து, அசுத்தப்படுத்தி வருவதும் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு  அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடம்  மாநகர சபை எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இதனைக் கட்டுப்படுத்த மாநகர முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04