இராணுவம் சிவில் சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது - ஜே.வி.பி 

Published By: Digital Desk 4

04 Dec, 2019 | 05:23 PM
image

(எம்.மனோசித்ரா)

புதிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகக் கூறுகின்றது. ஆனால் இராணுவத்தினரை சிவில் சேவைக்குள் உள்வாங்கியிருக்கின்றமை தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா,குற்றஞ்சாட்டியுள்ளார்.

குற்றஞ்செய்தவர்கள் அதிகாரிகளாகவும் அந்த குற்றங்களை விசாரித்தவர்கள் குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர் என்று விசனம் வெளியிட்டார்.

தேசிய மக்கள் சக்தி காரியாலயாத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

ஜனாதிபதி பதவியேற்றவுடனேயே இராணுவத்தினரை சிவில் சேவைகளுள் இணைத்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபடுத்துவதாக வர்த்தமானி வெளியிட்டிருக்கிறார். இந்த செயற்பாடு தற்போது நாட்டுக்கு தேவையா என்பதே எமது கேள்வியாகும். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை, சில ஊடக அலுவலகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமை , சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. விஷேட விசாரணை பிரிவின் உயர் அதிகாரிகள் பதவி மாற்றப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு வித்திடும் இது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் ஆரம்பத்திலிலேயே தடுக்கப்பட வேண்டும். நாட்டில் சாதாரண சூழல் நிலவுகின்ற இவ்வேளையில் பொலிஸாரின் சேவைகளுக்கு இராணுவத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறெனில் நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாருக்கு இல்லையா ? இவ்வாறு மக்களை இராணுவ செயற்பாடுகளுக்கு பழக்கப்படுத்தி முழுமையாக இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பது தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். காரணம் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் இராணுவ ஆட்சி அத்தியாவசியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21