பிரான்ஸ் இறக்குமதிகள் மீது 100 சதவீதத்திற்கும் அதிக வரி - அமெரிக்கா அச்சுறுத்தல்

04 Dec, 2019 | 01:09 PM
image

அமெ­ரிக்­கா­வா­னது  பிரான்­ஸி­லி­ருந்து தனது நாட்­டுக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் 2.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பொருட்கள் மீது 100 சத­வீ­தத்­திற்­கும்­அ­தி­க­மான வரி­களை விதிக்கப் போவ­தாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளது.

தனது நாட்டின் இலத்­தி­ர­னியல் சேவைகள் மீது பிரான்ஸால் விதிக்­கப்­பட்ட வரி­க­ளுக்கு பதி­லடி கொடுக்கும் வகை­யி­லேயே இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­விக்­கி­றது.

எதிர்­வரும் ஆண்டு ஜன­வரி மாத மத்­தி­யி­லி­ருந்து அமு­லாக்கம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் வரிகள் பிரான்­ஸி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் வைன் பானங்கள், யோக்கட், பாலா­டைக்­கட்­டிகள் உள்­ள­டங்­க­லான ஒரு தொகை பொருட்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்­ டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

கூகுள், பேஸ்புக் மற்றும் அமேஸன் போன்ற அமெ­ரிக்க தொழில்­நுட்ப கம்­ப­னிகள் தொடர்­பான இலத்­தி­ர­னியல் வரி  விதிப்­பு­களை அமெ­ரிக்க வியா­பார பிர­தி­நிதி அலு­வ­லகம் கண்­ட­றிந்­துள்­ள­தாக தக­வ­லொன்று வெளியா­ன­தை­ய­டுத்தே அமெ­ரிக்கா இந்த அச்­சு­றுத்­தலை விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்கக் கம்­பனிகள் மீது பாகு­பாடான முறையில் தேவை­யற்ற சுமை­களை சுமத்தும் இலத்­தி­ர­னியல் வரி­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்கா நட­வ­டிக்கை எடுக்கும் என்­ப­தற்­கான தெளிவான சமிக்­ஞையை அனுப்­பு­வ­தாக அமெ­ரிக்­காவின் இந்தத் தீர்­மானம் உள்­ள­தாக அமெ­ரிக்க வியா­பா­ரங்கள் தொடர்­பான பிர­தி­நிதி ரோபேர்ட் லைட்­திஸர் தெரி­வித்தார்.

அதே­ச­மயம் ஆஸ்தி­ரியா, இத்­தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடு­க­ளி­லான இதை­யொத்த வரி­களை கண்­ட­றிய விசா­ர­ணையை விரி­வு­ப­டுத்த அமெ­ரிக்கா உத்­தே­சித்துள்­ள­தாக அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17