டிரம்பிற்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையை கொண்டுவருவதற்கான போதிய ஆதாரங்கள் - அமெரிக்க குழு அறிக்கை

04 Dec, 2019 | 12:23 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் தவறான விதத்தில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக அரசியல் குற்ற   பிரேரணையை கொண்டுவருவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என   விசாரணைகளை முன்னெடுத்துள்ள குழு தெரிவித்துள்ளது.

சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிற்கான அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட குழு அமெரிக்காவின் தேசிய நலன்களை விட  டிரம்ப் தனது தனிப்பட்ட நலன்களிற்கு முக்கியத்துவம் அளித்தார் என தெரிவித்துள்ளது.

2020 இல் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டின் உதவியை பெறமுயன்றார்-உக்ரைனின் உதவியை பெற முயன்றார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

டிரம்பினை ஜனாதிபதி பதவியிலிருந்து ஏன் வெளியேற்றவேண்டும் என்பதற்கான காரணங்களை முன்வைப்பதற்காக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

சனப்பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குறித்த நிரந்தர தெரிவுக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2020 இல் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக டிரம்ப்  பல மாதங்களாக உக்ரைனின்உதவியை பெற முயன்றார் என்பதை கண்டுபிடித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் தொடர்பான அமெரி;க்காவின் வெளிவிவகார கொள்கையை பலவீனப்படுத்தினார்,தான் மீண்டும் ஜனாதிபதியாவதை உறுதி செய்யக்கூடிய இரு அரசியல் நோக்கங்களிற்காக அமெரிக்காவின் நலனை விட தனது நலனை முன்னிலைப்படுத்தினார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில்; முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனை தான் சந்திக்கவேண்டியிருக்கும் என அஞ்சிய டொனால்ட் டிரம்ப பிடெனிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றன என பகிரங்கமாக அறிவிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார் என 

சனப்பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குறித்த நிரந்தர தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17