ஏற்றுமதி வருமானம் முதல் 9 மாதங்களில் அதிகரிப்பு

04 Dec, 2019 | 11:03 AM
image

நாட்டின் ஏற்­று­மதி வரு­மானம் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதத்­தை­விட இவ்­வ­ருட செப்­டெம்­பரில் சிறி­ய­ளவு வீழ்ச்­சியை பதிவு செய்­தி­ருந்­தாலும் கூட கடந்த வருட ஜன­வரி மாதம் முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாதங்களில் ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி வரு­மா­னத்­துடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப்­ப­கு­தி­யி­லான மொத்த ஏற்­று­மதி வரு­மானம்  அதி­க­ரித்­துள்­ளது.

2018ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாத ஏற்­று­மதி வரு­மானம் 1055 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யி­ருந்­தது. அந்த வரு­மா­ன­மா­னது இவ்­வ­ருட செப்­டெம்­பரில் 952 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் இவ்­வ­ருட செப்­டெம்பர் மாத ஏற்­று­மதி வரு­மானம் கடந்த வரு­டத்­தை­ விட 103 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ளது.

கடந்த வருட செப்­டெம்பர் மாத ஏற்­று­மதி வரு­மா­னத்­தை­விட இவ்­வ­ருட ஏற்­று­மதி வரு­மானம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள போதிலும் கடந்த வருடம் (2018) செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத  ஏற்­று­மதி வரு­மா­னத்­தை­விட இவ்­வ­ருட ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத­கால மொத்த ஏற்­று­மதி வரு­மானம் ஓர­ளவு அதி­க­ரித்­துள்­ளது.

2018 செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத­ கால ஏற்­று­மதி வரு­மானம் 8898 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யி­ருந்­தது. இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாதங்களுக்கான ஏற்­று­மதி வரு­மானம் 8983  மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் பார்க்­கின்ற போது இவ்­வ­ருடம் முதல் ஒன்­பது மாத­ கால ஏற்­று­மதி வரு­மானம் 85 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் அதி­க­ரித்­துள்­ளது.

நாட்டின் இறக்­கு­மதி செல­வீ­னங்­க­ளிலும் சாத­க­மான ஒரு நிலை­யை அவ­தா­னிக்க முடி­கி­றது. 2018ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாத இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 1768 மில்­லியன் அமெ­ரிக்க டொலராகக் காணப்­பட்­டது. இவ்­வ­ருட செப்­டெம்பர்  மாத இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 1711 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப்  பதி­வா­கி­ யுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­ போது இவ்­வ­ருட செப்­டெம்பர் மாத இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 57 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

இவ்­வ­ருட செப்­டெம்பர் மாதத்தில் இறக்­கு­மதி செல­வீ­னங்­களில் ஏற்­பட்ட வீழ்ச்­சியைப் போன்று கடந்த வருட செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத கால இறக்­கு­மதி செல­வீ­னங்­களை விட இவ்­வ­ருட செப்­டெம்பர் வரை­யி­லான முதல் ஒன்­பது மாத­ கால இறக்­கு­மதி செல­வீ­னங்கள் பாரிய அளவு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன. இதனால் வர்த்­தகப் பற்­றாக்­குறை குறை­வ­டைந்­துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப் பகு­தியில் மொத்த இறக்­கு­மதி செல­வீ­ன­மா­னது 16,851 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகக் காணப்­பட்­டது. இவ்­வ­ருடம் ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத கால இறக்­கு­மதி செல­வீ­னங்கள் 14,596 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகப் பதி­வா­கி­யுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது இவ்­வ­ருட முதல் ஒன்­பது மாத கால இறக்­கு­மதி செல­வீ­னங்­களில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. அதா­வது கடந்த வரு­டத்­தை­விட 2255 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.

ஏற்­று­மதி வரு­மானம் முதல் ஒன்­பது மாத காலப் பகு­தியில் ஓர­ளவு வளர்ச்­சியைப் பதிவு செய்­துள்ள அதே­வேளை, இறக்­கு­மதி செல­வீ­னங்­க­ளிலும் முதல் 9 மாத காலப் பகு­தியில் ஏற்­பட்ட பாரிய வீழ்ச்­சி­யா­னது கடந்த ஆண்­டை­விட இவ்­வாண்டு வர்த்­தகப் பற்­றாக்­கு­றையை சுருக்­க­ம­டையச் செய்­துள்­ளது. இது  ஆரோக்­கி­ய­மானதொரு விட­ய­மா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு ஏற்­று­மதி வரு­மா­னத்தில் ஏற்­பட்­டுள்ள ஓர­ளவு அதி­க­ரிப்பு மற்றும் இறக்­கு­மதிச் செல­வீ­னங்­களில் ஏற்­பட்­டுள்ள பாரிய வீழ்ச்சி என்­பன நாட்­டிற்கு சாத­க­மான ஒரு சமிக்­ஞையைக் காட்­டி­னா­லும்­கூட கடந்த காலங்­களில் சிறந்து விளங்­கிய சுற்­று­லாத்­ து­றை­யூ­டான வரு­மானம் இவ்­வ­ருடம் பாரி­ய­ளவு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் சுற்­று­லாத்­து­றை­யி­னூ­டாக 280 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டது. இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதம் சுற்­று­லாத்­து­றை­யூ­டாக 204 மில்­லியன் டொலர் வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது இவ்­வ­ருட செப்­டெம்பர் மாத சுற்­றுலா வரு­மானம் 76 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. செப்­டெம்பர் மாத வரு­மானம் மாத்­தி­ர­மின்றி கடந்த வருட ஜன­வரி முதல் செப்­டெம்பர் மாதம் வரை­யி­லான ஒன்­பது மாத காலப்­ப­கு­தியில் பெறப்­பட்ட சுற்­றுலா வரு­மா­னத்­தை­விட இவ்­வ­ருடம் செப்­டெம்பர் வரை­யி­லான சுற்­றுலா வரு­மானம் பாரிய வீழ்ச்சியடைந்­துள்­ளது.

தகவல் மூலங்கள் - இலங்கை சுங்கம், இலங்கை மத்திய வங்கி

2018ஆம் ஆண்டு ஜன­வரி முதல் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப் பகு­தியில் 3251 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் சுற்­று­லாத்­து­றை­யி­னூ­டாக வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டது. இவ்­வ­ருடம் செப்­டெம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலப் பகு­தியில் சுற்­றுலாத் துறை­யி­னூ­டாக 2583 மில்­லியன் அமெ­ரிக்­க­ டொலர் வரு­மா­ன­மாகப் பெறப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் வரை­யி­லான ஒன்­பது மாத வரு­மா­னத்­தை ­விட இவ்­வ­ருட செப்­டெம்பர் மாதம் வரை­யி­லான ஒன்­பது மாத கால வரு­மானம் 668 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

சுற்­று­லாத்­துறை வரு­மா­னத்தில் ஏற்­பட்ட பாரிய வீழ்ச்­சிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற தீவி­ர­ வாத குண்டுத் தாக்­கு­தல்­களே காரணம் என்­றாலும் அந்தத் தாக்­கத்­தி­லி­ருந்து சுற்­று­லாத்­துறை வழ­மைக்குத் திரும்பி வரு­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெற்­றி­பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் சில அதி­ரடி நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்தார். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்த 2500 ஊழி­யர்­களின் தொகை­யை 500 வரை குறைத்தார். அரச நிறு­வ­னங்­களில் வைக்­கப்­படும்  அரச தலை­வர்­க­ளு­டைய படங்­க­ளுக்குப் பதி­லாக இலச்சி­னைகள் பொறித்த படங்­களை மாத்­திரம் பயன்­ப­டுத்­து­மாறு பணித்தார். இதன்­மூலம் ரூ.100 மில்­லியன் செலவைக் குறைத்­துள்ளார்.

‍அதே­போன்று சோளம், குரக்கன், எள்ளு, பயறு மற்றும் மரமுந்திரிகை உள்ளிட்ட தேசிய உற்பத்திகளின் இறக்குமதியை எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் மட்டுப்படுத் துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் விவசாயத் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு குறித்த உற்பத்தி வகைகளின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதுடன் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற் கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள் ளதாகவும் இதன்மூலம் உள்ளூர் விவசா யி கள் நன்மையடைவர் எனவும் விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உண்மையிலேயே இதுபோன்ற செயற்பா டுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும் இன்னும் புதிய வகையான உபாய மார்க்கங் களைக் கண்டறிந்து ஏற்றுமதிகளை அதிகரித்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதுடன் நேரடி முதலீடுகளையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.நேசமணி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18