புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைக்க மக்களின் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை

Published By: Daya

04 Dec, 2019 | 11:39 AM
image

புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.

14 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள உரிமையாளர்களின் விபரம்:

குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்லம்மா, கந்தையா தியாகராசா, இராசையா கோணேசலிங்கம், பஞ்சாசரம் தயாபரன, செல்வராசு அம்பிகா.

கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாகக் கடமையாற்றியவர்களும் இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்திருந்தனர்.

எனினும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04