மத்திய வங்கி திறைசேரிமுறி விவகார  தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்த முடியாது  

Published By: Vishnu

03 Dec, 2019 | 04:28 PM
image

(ஆர்.யசி)

மத்திய வங்கி திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தடயவியல் கணக்காய்வு பற்றிய ஐந்து அறிக்கைகள்  கோப் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே பார்வையிட முடியும் எனவும் கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.  

சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு மாத்திரம் இந்த அறிக்கைகளைப் பயன்படுத்த முடியும் என  சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருப்பதால் இவற்றை இரகசிய ஆவணங்களாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். 

கடந்த  2002ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற முறைமை தொடர்பில் தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவ்வறிக்கை கோப் குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பில்  அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக கோப் குழு விசேடமாக இன்று கூடவிருந்தது. 

எனினும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டமையால் இக்கூட்டம் நடைபெறவில்லை. 

இந் நிலையில்  கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வுகளை முடிவுக்கு கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்துள்ள நிலையில் பாராளுமன்ற குழுக்கள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளது. 

கோப் குழுவின் செயற்பாடுகளும் முழுமையாக நிறுத்தப்படும்.  இன்றைய தினம் காலையில் கோப் குழு கூடவிருந்தது. அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இன்றைய தினம் மிகவும் முக்கியமான அறிக்கையான மத்திய வங்கி திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை குறித்து நடவடிக்கை எடுக்கவிருந்தோம். 

தடயவியல் கணக்காய்வு பற்றிய ஐந்து அறிக்கைகள் மத்திய வங்கியிடமிருந்து கிடைத்துள்ளன. இது குறித்த அடுத்த நடவடிக்கைகளை தெரிவுக்குழு தீர்மானிக்க வேண்டும். 

எனினும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கோப் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17