இலங்கையுடனான பங்குடமையை பலப்படுத்தியுள்ள Siemens 

Published By: Priyatharshan

01 Jun, 2016 | 11:39 AM
image

நகர அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கலில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கின்ற புகழ்பெற்ற ஒரு நிறுவனமான Siemens, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதன் மூலமாக இலங்கையுடனான தனது பங்குடமையை மேலும் பலப்படுத்தியுள்ளது.

இதன் கீழ், சர்வதேசரீதியாக நிரூபிக்கப்பட்ட, நவீன, நிலைபேற்றியலுடனான, நகர அபிவிருத்தித் தீர்வுகள் தொடர்பான மிகச் சிறந்த திட்டங்களையும், அதற்குத் தேவையான நிபுணத்துவத்தையும் வழங்கவுள்ளது.

மேல் மாகாண மாநகர திட்டமிடல் செயற்திட்டத்தின் பணிப்பாளரும், இது தொடர்பான குழுத் தலைவருமான திரு. லக்ஷ்மன் ஜெயசேகர மற்றும் Siemens Limited நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளரான திரு. அனிருத் டாண்டன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். 

மேல் மாகாண மாநகர திட்டமிடல் செயற்திட்டத்தின் முதலீடுகளுக்கான தலைமை அதிகாரியான நயன மாவில்மட,  இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளரான  எம்.எம். அனுர பிரசன்ன, இந்தியாவின் Siemens Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுனில் மாதூர் மற்றும் Diesel & Motor Engineering PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே ஆகியோரும் இந்நிகழ்வில் சமுகமளித்திருந்தனர்.

இலங்கையில் நகரப்புற சமூகத்தின் மத்தியில் தற்போதுள்ள முறைமைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதே மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் பிரதான நோக்கம். இது நகரத்தில் வசிப்பவர்கள் நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்தியில் ஒரு அங்கமாக மாறுவதுடன், அவர்கள் உயர்ந்த மட்டத்திலான வாழ்க்கைத்தரத்தைப் பேணுவதையும் உறுதி செய்கின்றது. 

இலங்கை, ஆசியாவில் வர்த்தக, கடல் மற்றும் விமான போக்குவரத்து மையமாக மாறுவதற்கு வழிகோலும். இதன் பின்னணியில் அடுத்த ஐந்து ஆண்டு காலப் பகுதிக்குள் விரிவான அபிவிருத்தியை அடைந்து, ஒட்டுமொத்த மேல் மாகாணத்தையும் ஒரு மாநகரமாக மாற்றியமைப்பதே அமைச்சின் ஆவலாகும். 

அமைச்சின் கீழ் இடம்பெறுகின்ற பணிகளுள் பிரதானமாக, உயிர்-நில- உடல் மற்றும் சமூக-பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மேல் மாகாண மாநகர பிராந்தியத்தை அபிவிருத்தி செய்யும் பாரியளவிலான திட்டமிடல் அடங்கியுள்ளது.

இலங்கையில் நீண்ட கால அடிப்படையிலான, உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் நிலைபேற்றியல் கொண்ட எதிர்கால நகர அபிவிருத்தித் திட்டத்தின் மையமாக மேல் மாகாண மாநகர அபிவிருத்தி அமையவுள்ளது. 

நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சிறந்த நகர குடியிருப்புக்களை வடிவமைக்கும் திட்டத்துடன், குப்பைகூளங்கள், சேரிகள், எரிசக்தி, போக்குவரத்து நெரிசல், சூழல் மற்றும் வாழ்வாதாரங்கள் போன்ற நகரத்துடன் தொடர்புபட்ட தனித்துவமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் கண்டறியும்.

மேல் மாகாண மாநகர திட்டமிடல் செயற்திட்டத்தின் பணிப்பாளரும், இது தொடர்பான குழுத் தலைவருமான  லக்ஷ்மன் ஜெயசேகர கருத்துத் தெரிவிக்கையில்,

“உட்கட்டமைப்பிற்கான தலா வீத மூலதனச் செலவைக் குறைக்கும் இலக்குடன், நகர உட்கட்டமைப்பு, சேவைகள் மற்றும் சூழல் தொடர்பான நெரிசல் அழுத்தங்களைப் போக்கும் மேல் மாகாணத்தின் கடுமையான முயற்சிகளுக்கு Siemens நிறுவனத்தின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பங்கள் எமக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் என்பதால், அவர்களுடன் பங்காளராக இணைந்துள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.”

இந்தியாவின் Siemens Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான  சுனில் மாதூர்,  கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கம் மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியன ‘உயர் வருமானத்தைக் கொண்ட அபிவிருத்தியடைந்த தேசமாக’ மாற வேண்டும் என்ற அவற்றின் முயற்சிகளுக்கு உதவ பங்காளராகச் செயற்படுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதையிட்டு Siemens நிறுவனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. Siemens நிறுவனம் தனது சர்வதேச அனுபவத்துடன், நகரங்கள், வாழ்வதற்கு இன்னும் அதிகமான வசதி கொண்டவையாகவும், இன்னும் அதிகமாக போட்டித்திறன் கொண்டவையாகவும் மற்றும் இன்னும் அதிகமான நிலைபேற்றியல் கொண்டவையாகவும் மாறுவதற்கு உதவுவதற்கு துறைசார், அறிவுசார் மற்றும் நிபுணத்துவத்தை Siemens நிறுவனம் கொண்டுள்ளது.

நகரமயமாக்கத்தின் மூலமான பொருளாதார திரட்சியின் அனுகூலத்துடன் தேசிய பொருளாதாரம் பயனடைவதற்கு இது இடமளிக்கும்.”

Diesel & Motor Engineering PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில்,

“தொழில்நுட்பவியல்ரீதியான தலையீடுகளை வழங்குவதற்கு எமது நீண்ட கால பங்காளரான Siemens நிறுவனம் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மிகழ்ச்சி அடைந்துள்ளோம். DIMO நிறுவனம் இதற்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று உறுதியாக நம்புகின்றோம்.”

மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக வெகு விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள வெளிப்புற சுற்றுவட்டத்தை அண்டிய பண்டாரகம, கடவத்தை, கொட்டாவ மற்றும் கெரவலபிட்டிய ஆகிய இடங்களில் புதிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் நீண்ட கால அடிப்படையிலான, உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் நிலைபேற்றியல் கொண்ட எதிர்கால நகர அபிவிருத்தித் திட்டத்தின் மையமாக மேல் மாகாண மாநகர அபிவிருத்தி அமையவுள்ளது.

குறிப்பிட்ட முறைமைகள் மற்றும் தீர்வுகளுடன், தொழிற்துறையில் பிராந்தியம் சார்ந்த தேவைகள் மீது உறுதியாக கவனம் செலுத்தி, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி முயற்சிகளில் Siemens நிறுவனம் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. அரசாங்கம்,  உள்நாட்டு தொழிற்துறை மற்றும் வியாபார பங்காளரர்கள் போன்ற சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினருடன் இணைந்து இலங்கையில் பல்வேறு முன்னோடி செயற்திட்டங்களை இந்நிறுவனம் அமுலாக்கம் செய்துள்ளதுடன், அதன் மூலமாக நவீன தொழில்நுட்பங்களின் பயனை குடிமக்கள் அனுபவிப்பதற்கு உதவியுள்ளது.

சாமர்த்தியமான (தொழில்நுட்ப சிறப்புடனான) நிலைபேற்றியல் கொண்ட நகரங்களை அமைப்பதற்கு தேவையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் Siemens நிறுவனம் சர்வதேசரீதியாக முன்னிலை வகித்து வருகின்றது.

கச்சிதமான மின்விநியோகம், கட்டட தொழில்நுட்பங்கள், போக்குவரத்து இயக்கம் மற்றும் மின்வலு விநியோகம் ஆகிய தீர்வுகளுடன், வியன்னா மற்றும் நியூயோர்க் ஆகிய இடங்களில் தொழில்நுட்ப திறன் கொண்ட நகரங்களை Siemens நிறுவனம் வெற்றிகரமாக அமைத்துள்ளது. 

மேலும், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தொழில்நுட்ப திறன் கொண்ட மின்சார தீர்வுகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற மீள்கட்டமைப்புச் செய்யப்பட்ட, விரைவுபடுத்தப்பட்ட மின்வலு அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திலும் தன்னை ரூடவ்டுபடுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஆறு தசாப்த காலமாக இந்திய புகையிரத திணைக்களத்துடன், அதன் விருப்பத்திற்குரிய தொழில்நுட்ப தீர்வு வழங்குனராகச் செயற்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் நகரங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து தளமேடைகள், விமான நிலையத்திற்கான இணைப்பு வழிகள், பிரயாணிகள் பேரூந்துகள், புகையிரத சேவைகள் மற்றும் பேணற்சேவை, நகர சமிக்ஞை விளக்குக் கட்டுப்பாடு, புகையிரத சமிக்ஞை மற்றும் ஏனைய நவீன போக்குவரத்து தீர்வுகள் போன்ற துறைகளில் இந்நிறுவனம் பல்வேறு திறன்களைக்கட்டியெழுப்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57