மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விவகாரம்: அரசின் அலட்சியம் தான் காரணம் - மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published By: Daya

03 Dec, 2019 | 05:01 PM
image

மேட்டுப்பாளையத்தில் மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு அரசின் அலட்சியம் தான் காரணம் என தி.மு.க. தலைவர் மு. க.. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு, 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 4 இலட்ச ரூபா நிதியுதவி போதாது. கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

முன்னதாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். 

இதனிடையே அப்பகுதி மக்கள் சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அந்த சுற்றுச்சுவரை (80 அடி நீளம் 20 அடி உயரம் உள்ள அந்த சுற்று சுவரை) அகற்ற கோரி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17