மஸ்கெலியா நகரில் வடிகான்களில் வீசப்படும் குப்பைகளால் மக்கள் அசௌகரியம்

Published By: Digital Desk 4

03 Dec, 2019 | 12:28 PM
image

மஸ்கெலியா பிரதேச சபையினால் மஸ்கெலியா நகரத்தின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலைத் தடுக்கும் முகமான சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுத்து வருகின்றன.

இருந்த போதிலும் பாடசாலைக்குப் பயன்படுத்தும் பாதைக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறம் பிளாஸ்டிக்,பொலுத்தீன் மற்றும் பழைய வாகன டயர்கள் வீசப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாகப் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது,நாம் தற்போது நகரச் சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் இப்பகுதியையும் சுத்திகரிக்க இருப்பதாகவும் தற்சமயம் சுத்திகரிப்பு பணியாட்கள் பற்றாக்குறை நிலவுவதால் சற்று தாமதமாகியுள்ளதாகவும் இக்குப்பைகளை வெகு விரைவில் சுத்திகரித்துத் தருவதாகவும் குறிப்பிட்டார்

அத்துடன் இவ்வாறு காணப்படும் குப்பைகளை நாம் சுத்திகரித்து வருகின்ற போதிலும் சில விஷமிகள் முறையாகச் சுத்திகரிப்பு பணியாளர்களுக்குக் குப்பைகளை வகைப்படுத்தி வழங்காமல் குப்பைகளை வடிகால்களில் வீசுவதால் இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இதனைத் தடுக்கும் வகையில் நகரின் பல இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தி வருவதாகவும் அவ்வாறு வடிகால்களில் வீசுவோர் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17