ஒரு வருடமாக கெட்டுப்போகாமல் இருக்கும் அப்பிள்

Published By: Digital Desk 3

03 Dec, 2019 | 04:51 PM
image

ஒரு வருடத்துக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும் காஸ்மிக் கிரிஸ்ப் ரக அப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் பிரிட்ஜில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் புதிய ஆப்பிளைக் கண்டுபிடித்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதற்கு ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘ஹனிகிரிஸ்ப்’ மற்றும் ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகிய  கலந்து உருவானது என்பதால் இந்தப் பெயர் வைத்துள்ளனர். 1997ஆம் ஆண்டிலேயே வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆப்பிள் பயிரிடப்பட்டது என்கின்றனர்.

சாறு நிறைந்த இந்த ஆப்பிள் திடமாகவும் மிதமாகவும் இருக்கும். இந்த ஆப்பிள் ரகத்தை விற்பனைக்குக் கொண்டுவர 10 மில்லியன் டொலர் செலவிட்டிருப்பதாவும் சொல்கிறார்கள். இலங்கை மதிப்பில் இது சுமார் 180 கோடி ரூபாய் ஆகும்.

வொஷிங்டன் மாகாண விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 12 காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் மரங்களை வளர்க்க 40 மில்லியன் டொலர் (சுமார் 720 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளனர்.

காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிளைக் கண்டுபிடித்த வொஷிங்டன் பல்கலைக்கழகக் குழுவினரில் ஒருவரான கேட் எவன்ஸ், “இந்த ஆப்பிள் மிக மிருதுவாகவும் திடமாகவும் இருக்கும். இனிப்பும் புளிப்பும் சேர்ந்து சுவையைக் கொண்டிருக்கும். நீர்ச்சத்தும் இதில் அதிகமாகக் காணப்படும்.” என்கிறார்.

குறிப்பாக, “பறித்த நாளிலிருந்து பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருந்தால், 10 முதல் 12 மாதங்கள் வைத்திருந்து சாப்பிடலாம். தரம் மற்றும் சுவையிலும் கெடாமல் நன்றாக இருக்கும்.” எனவும் கேட் தெரிவிக்கிறார்.

விற்பனைக்கு வந்திருக்கும் காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் ஒரு கிலோ சுமார் 4 டொலருக்கு விற்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33