( மயூரன் )

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 12 ஆவது  ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இந் நிகழ்வு நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004 ஆம் ஆண்டு  மே 31 ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.