கோத்தாவின் வெற்றியினால் தமிழர்கள் காப்பாற்றப்பட்டனர் : பொற்காலம் என்கிறார் கருணா

Published By: R. Kalaichelvan

03 Dec, 2019 | 11:26 AM
image

கோத்­த­பாய ராஜ­பக்ஷவின் வெற்­றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றப்­பட்­டனர்.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் முஸ்­லிம்கள் இல்­லாத அமைச்சரவையை அமைத்­துள்­ள­மையால் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அடங்­கி­போ­யுள்­ளனர் என்று தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்டம், கல்­முனை பகு­தியில் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் எதிர்­கால திட்டம் குறித்து ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5 மணி முதல் 7 மணி­வரை மக்கள் சந்­திப்பு இடம்­பெற்ற வேளையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

இலங்கை அர­சியல் வர­லாற்றில் முஸ்­லிம்கள் இல்­லாத அமைச்­ச­ர­வையை அமைத்­துள்­ள­மையால் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அடங்­கி­போ­யுள்­ளனர்.

கடந்த பொதுத் தேர்­தலில் தமிழ் மக்­களை சிங்­கள மக்கள் காப்­பாற்றி விட்­டனர்.  தமிழ் மக்கள் வெற்றி பெற­வில்லை. கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் வெற்­றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்­பாற்­ற­பட்­டனர் என்றே சொல்ல வேண்டும்.  இது தமி­ழர்­க­ளுக்கு கிடைத்த பொற்­காலம் ஆகும். மஹிந்த ராஜ­பக்ஷ ஒரு தமி­ழின பற்­றாளர்.

வரு­கின்ற வாய்ப்­பு­களை தவ­ற­விட்டு வர­லாற்று தவ­று­களை மீண்டும் செய்­யக்­கூ­டாது. இது நம்மை பின்­னோக்கி நகர்த்தும் என கூற விரும்­பு­கின்றேன்.

 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சரத் பொன்­சே­கா­விற்கு வாக்­க­ளிக்க மக்­களை தூண்­டி­யது. அன்று அரிய சந்­தர்ப்­பத்தில் தமி­ழர்கள் காப்­பாற்­றப்­பட்­டனர். சரத் பொன்­சேகா வெற்றி பெற்­றி­ருந்தால் முன்னாள் போரா­ளிகள் அனை­வ­ரையும் காண­மு­டி­யாது போயி­ருக்கும். 30 வருட யுத்­தத்தில் தமி­ழர்கள் அர­சியல் மீது வெறுப்­புற்­றி­ருக்­கின்­றனர்.

 திரு­மலை, அம்­பாறை மக்­க­ளுக்கு அர­சியல் தெளிவு வேண்டும். சர்கஸ் கயிற்றில் நடப்­பது போன்­றுதான் அம்­பாறை தமி­ழர்­களின் நிலை­யாகும். பிள்­ளையான் முத­ல­மைச்­ச­ராக இருந்த போது தமி­ழர்­க­ளுக்கே வேலை­வாய்ப்பில் முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முட்டு கொடுத்­த­தனால் முது­கெ­லும்­பில்­லாத கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் அமைச்­சர்கள் 90 வீத­மான முஸ்­லிம்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பி­னையும் தமி­ழர்­க­ளுக்கு 10 வீத  வேலை­வாய்ப்­பி­னையும் வழங்கி தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்­தனர்.

 2009ஆம் ஆண்டு கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தி கொடுப்­ப­தற்­கான இறுதிக்கட்ட வேலைப்­பா­டுகள் நடை­பெற்­ற­வேளை இடையில் புகுந்த ஹக்­கீமும் ஹரிஸும் இடையில் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் தர­மு­யர்த்­தப்­பட்டால் முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்க மாட்­டார்கள் என கூறி  குழப்­பி­விட்­டனர்.   அடுத்த வாரம் என்னை மஹிந்த ராஜ­பக் ஷ கல்­முனை விடயம் சம்­பந்­த­மாக பேச அழைத்­தி­ருக்­கிறார். பேசக்கூடிய  நிலையில் இருக்­கின்றோம். என்­னு­டைய சொந்த காணிக்கு அடுத்­த­வர்கள் வக்கீல் வைத்து வழக்கு பேசு­வது போல் கல்­முனை விட­யத்தில் அனை­வரும் மூக்கு நுழைக்க முற்­ப­டு­கின்­றனர்.

ஹரிஸ் எம்.பி.  இப்­போ­துதான் அ, ஆ படிக்க தொடங்­கு­கிறார். நாங்கள் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு கீழ் பல்­க­லை­க்க­ழ­கமே முடித்து விட்டோம். சாதா­ரண முஸ்லிம் மக்கள் எங்­க­ளுக்கு எதி­ரி­யல்ல, அடுத்த பொது தேர்­தலில் முழு முஸ்­லிம்­களும் மாறி நின்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு வாக்­க­ளிப்­பார்கள். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது ­கொண்டு சென்ற 13 அம்ச கோரிக்­கையை சஜித் பிரே­ம­தாச தூக்கி எறிந்­து­விட்டார். மூன்று தினங்கள் தூங்கி எழும்­பிய பின்னர் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் தமிழ் மக்கள் சஜித் பிேர­ம­தா­சவை ஆத­ரிக்க வேண்­டு­மென தெரி­வித்­தனர்.

கோத்­த­பாய ராஜ­பக் ஷ வெற்றி பெற்ற பின்னர் சுமந்­தி­ரனும் கோடீஸ்­வ­ரனும் பொது­ஜன பெர­மு­னவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்கள் மஹிந்த ராஜ­பக் ஷ­விடம் சென்றால் பிர­தமர், அவர்கள் மீது  செருப்பை கழற்றி வீசுவார். தற்­போது அம்­பாறை மாவட்­டத்தில் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­னணி அனைத்து இடங்­க­ளிலும் கால்­ப­தித்து வரு­கின்­றது.

பொது­த்தேர்­தலில் கள­மி­றங்கி முயற்சி செய்தால் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொள்­ளலாம். இதன்­மூலம் அம்­பா­றைக்கு ஒரு தமிழ் அமைச்சு கிடைக்கும். அப்­போது தமி­ழர்­களின் அபி­வி­ருத்­தியும்  எமது கையில் அதி­கா­ரமும் கிடைக்கும். இந்த நோக்­கத்­துக்­கா­கவே சுதந்­திர கட்­சியின் பிர­தித்­த­லைவர் பத­வியை துறந்து மஹிந்­த­விடம் கூறி­விட்டு வெளி­யே­றினேன். அப்­போ­துதான்  தமிழ் மக்­க­ளுக்­கான பேரம் பேசும் சக்­தி­யாக மாற­மு­டியும் என்ற நோக்கம் மாத்­தி­ரமே என்னிடம் உள் ளது என கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01