பாடசாலைக்கு  தூக்கிச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிக்கு தமிழக அரசு வாகன உதவி..!

Published By: R. Kalaichelvan

03 Dec, 2019 | 09:44 AM
image

எந்தக் காரணத்துக்காகவும் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக, 12 ஆண்டுகளாக தாயால் பாடசாலைக்கு தூக்கிச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிக்கு, தமிழக அரசு சார்பில் முதல்வர் வாகன உதவி செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பத்மாவதி. இந்த தம்பதியின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்கள் சூம்பிய நிலையில் காணப்பட்ட திவ்யா, வளர்ந்த பின்னர் நடக்க முடியாமல் தவழ்ந்தார்.

மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால் சரவணன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால், தனி நபராக திவ்யாவை கஷ்டப்பட்டு வளர்த்தார் பத்மாவதி.

 சொந்த ஊரான பெருங்கோழி அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார் திவ்யா. மேல்நிலைக் கல்விக்காக உத்திரமேரூர் சென்ற அவர், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

எந்தக் காரணத்துக்காகவும் மகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி, கடந்த 12 ஆண்டுகளாக மகளை இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார்.

இதற்காக, வீட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் மகளை சுமந்துவந்து அரசு பஸ்சில் பயணிக்கும் பத்மாவதி, மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்குச் செல்கிறார்.

இது குறித்து மாணவி திவ்யா கூறுகையில், “நான் நன்றாக படித்து வேலைக்குச் செல்வேன்.

அதன் மூலம், என்னைப் போல் சிரமப்படுபவர்களுக்கு உதவுவேன். நாள் முழுவதும் என்னுடனே இருந்து கவனித்துக் கொள்வதால், அம்மாவால் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட முடியவில்லை. இதனால், வீட்டுச்சூழல் கஷ்டமாக இருக்கிறது. என் மேற்படிப்புக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி, கடந்த வாரம் அனைத்து பத்திரிகைகளிலும் படத்துடன் வெளியாகின. இதை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு சார்பில் அந்த மாணவிக்கு உதவிசெய்ய முன்வந்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, மாணவி திவ்யாவுக்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52