ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியால் சுவிஸ் தூதரகத்திற்கு முன்னால் முன்னெடுத்த உண்ணாவிரதம் நிறைவு

Published By: Digital Desk 3

03 Dec, 2019 | 10:53 AM
image

சுவிஸ் தூதுரங்கத்தின் முன்னால் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி சட்டதரணி அஜித் பிரசன் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றிரவு கைவிட்டுள்ளார்.

சுவிஸ் தூதுரங்கத்தின் உத்தியோகஸ்தரை கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவமானது நாட்டிற்கும் புதிய அரசாங்கத்திற்கு அவப்பெயரை எற்படுத்தும் செயல் என தெரிவித்து  ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி சட்டதரணி அஜித் பிரசன்ன சுவிஸ் தூதுரங்கத்தின் முன்னால் நேற்று திங்கட்கிழமை சுவிஸ் தூதரகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட அவர்,சுவிஸ் தூதுரங்க  உத்தியோகஸ்தரை  கடத்தியதாக கூறப்படும் சம்பவத்தினால் நாட்டிற்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இவரின் இந்த பிரசாரத்தின் காரணமாக சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டின் நற்பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான உண்மை தகவல்களை அவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் பல தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர். தொடர்ந்தும் இவர் அமைதியை காக்காது உண்மையை தெரியப்படுத்த வேண்டும். நாட்டிற்கும் புதிய அரசாங்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலே இந்த செயற்பாடு அமையப்பெற்றுள்ளதென கோரிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்ன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் கோரிக்கைக்கு அமைய அவர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35