ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி, நோர்வே தூதுவர்கள் தெரிவிப்பு

Published By: Digital Desk 4

02 Dec, 2019 | 08:02 PM
image

இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி. மெனல்லா (Rita Giuliana Manella) இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷக்கு இத்தாலி அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்த இத்தாலி தூதுவர், புதிய நோக்குடன் முன்னோக்கி பயணிக்கும் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்புடன் செயற்பட தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கோத்தாபயவின் புதிய வேலைத்திட்டத்துடன் பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கை துரிதமாக முன்னோக்கிப் பயணிக்கும் என நம்பிக்கை வெளியிட்ட தூதுவர், அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைனி ஜொரன்லி எஸ்கேடல் (Trine Joranli Eskedal) உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.

நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, புதிய நோக்குடனும் வலுவான பின்னணியுடனும் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தமது அரசாங்கம் உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத் தருமென நோர்வே தூதுவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59