ஐ.தே.கவினால் மீண்டும் ஆட்­சிக்கு வர முடி­யுமா ?

02 Dec, 2019 | 04:27 PM
image

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பெரும் கலகம் வெடிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது போலவே, அந்தக் கட்­சிக்குள் குழப்­பங்கள் மேலோங்­கி­யி­ருக்­கின்­றன.

சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தெரிவு செய்­வ­தி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் கடு­மை­யான இழு­பறி நிலைகள் காணப்­பட்­டன. ஆனாலும், அவர் தனது பலத்தைப் பிர­யோ­கித்து, வேட்­பா­ள­ராக தன்னை நிறுத்திக் கொள்­வதில் வெற்றி பெற்­றி­ருந்தார்.

உண்­மையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்த தேர்­தலில் போட்­டி­யிட விரும்­ப­வில்லை என்­பது தான் உண்மை. ஏனென்றால் அவ­ருக்கு மூன்­றா­வது தட­வை­யா­கவும் தோல்­வி­ய­டைய விருப்பம் இருக்­க­வில்லை.

தேர்தல் அறி­விப்பு வெளி­யா­க­வி­ருந்த சூழலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு கருத்தை வெளி­யிட்­டி­ருந்­தது பல­ருக்கும் நினைவில் இருந்­தி­ருக்கும்.

வெற்­றி­பெறக் கூடிய வாய்ப்பு இருந்தால், கட்­டாயம் நானே போட்­டி­யி­டுவேன் என்று அவர் அப்­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிடும் போது தமக்கு சாத­க­மான நிலை இல்லை என்­பதை அவர் புரிந்து கொண்­டி­ருந்தார்.

அதா­வது, சிங்­கள பௌத்­தர்கள் தம்மை அதி­க­ளவில் நம்­பு­கின்ற நிலையில் இல்லை என்­பதை அவர் உணர்ந்­தி­ருந்தார்.

அதனால், தான் அவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வழி­விடத் தயா­ராக இருந்தார். அதற்­குள்­ளா­கவே சஜித் பிரே­ம­தாஸ, தானே வேட்­பாளர் என்று சுய பிர­க­டனம் செய்து கொண்டு ஐ.தே.க தலை­மை­யுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டார்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு எவ்­வாறு அமையும் என்­பதை உணர்ந்து கொண்டே ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டியில் இருந்து விலகிக் கொண்டார்.

அதே­வேளை, வேட்­பா­ள­ராக சஜித்தை நிறுத்­து­வ­தற்கு இணங்கிக் கொண்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க, 2024 வரை கட்­சியின் தலை­மைத்­துவம் தமக்கே என்­ப­தையும் உறுதி செய்­தி­ருந்தார்.

ஆனால், சஜித் பிரே­ம­தாஸ வேட்பு­மனுத் தாக்கல் செய்த பின்னர், முரண்­பட்ட கருத்­துக்­களை வெளி­யிட ஆரம்­பித்தார். அது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும், அவ­ரது அணி­யி­ன­ரையும், அச்சம் கொள்ள வைத்­தது.

வெற்றி பெற்றால், பாரா­ளு­மன்­றத்தில் ஆத­ரவு பெற்ற ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மிப்பேன் என்று அவர் கூறி­யது ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்­புக்கு கடுப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

அத்­துடன் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­க­ளுக்கு பத­விகள் வழங்­கப்­ப­டாது என்றும் அவர் கடைசி நேரப் பிர­சா­ரங்­களில் கூறத் தொடங்­கினார்.

இதன் மூலம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அவர் ஓரம்­கட்டப் போகிறார் என்ற அச்சம், ஐ.தே.கவில் ஒரு பகு­தி­யி­ன­ரிடம் தீவி­ர­ம­டைந்­தது.

இதனால் தான், ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாஸ வெற்றி பெற்­றாலும் சரி, தோல்­வி­ய­டைந்­தாலும் சரி, ஐ.தே.கவுக்குள் மீண்டும் கலகம் உச்­ச­ம­டையும் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டி­ருந்­தது.

சஜித் பிரே­ம­தாஸ வெற்றி பெற்­றி­ருந்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஓரம்­கட்ட அவர் முயற்­சித்­தி­ருப்பார். அது கட்­சிக்குள் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.

அவர் தோல்­வி­ய­டைந்­தி­ருக்கும் நிலையில், அவ­ரது அணி­யினர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராகப் போர்க்­கொடி உயர்த்­தி­யிருக்­கின்­றனர்.

சஜித் பிரே­ம­தாஸ தோல்­வி­ய­டைந்­ததும், கட்­சியின் பிரதித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து விலகிக் கொள்­வ­தாக அறி­வித்­தி­ருந்தார். அடுத்த சில தினங்­களில் அவர், சிறுத்­தை­க­ளுக்­காக வாழ்வை அர்ப்­ப­ணிக்கப் போவ­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

அதற்­குள்­ளா­கவே, அவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்­கான மோத­லுக்குத் தயா­ராகி விட்டார்.

மஹிந்த ராஜபக் ஷ தோல்­வி­ய­டைந்­ததும் சிறிது காலம் ஒதுங்­கி­யி­ருந்தார். தன்னைத் தேடி வந்­த­வர்­களைச் சந்­தித்தார். அவர்­களின் கோரிக்­கை­களால் மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வது போன்ற நிலையை, மெது­மெ­து­வாக ஏற்­ப­டுத்திக் கொண்டார்.

ஆனால், சஜித் அதற்­குள்­ளா­கவே அவ­ச­ரப்­பட்டு மக்­களைச் சந்­தித்தார். எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்­கான போட்­டி­யிலும் இறங்­கினார்.

கொஞ்சம் தாம­தித்­தாலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்தப் பத­வியை கொத்திக் கொண்டு போய் விடுவார் என்ற பயம் அவ­ருக்­குள்­ளேயும், அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்­குள்­ளேயும் இருக்­கி­றது,

இவ்­வா­றான நிலையில் தான் ஐ.தே.கவுக்குள் பெரும் புயல் வீசி வரு­கி­றது. இந்தப் புயல் அவ்­வ­ளவு இல­கு­வாக ஓயப் போவ­தில்லை.

ஏனென்றால், ஐ.தே.கவுக்குள் தன்னை மறு­சீ­ர­மைத்துக் கொள்­வ­தற்கும், அடுத்த அடியைத் தாங்கிக் கொள்­வ­தற்கும் சிறிது கால­அ­வ­காசம் தான் உள்­ளது.

பாரா­ளு­மன்றத் தேர்தல் எப்­ப­டியும் இன்னும் ஆறு மாதங்­க­ளுக்குள்  நடத்­தப்­பட வேண்டும். அதில் ஐ.தே.க வெற்றி பெறு­வ­தென்­பதை நினைத்துக் கூடப் பார்க்க முடி­யாது,

ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாஸ தோல்­வி­ய­டைந்­தாலும் கௌர­வ­மான தோல்­வியைத் தான் சந்­தித்தார் அவ­ருக்கு சுமார் 55 இலட்சம் மக்­களின் ஆத­ரவு கிடைத்­தி­ருந்­தது.

அந்த கௌர­வ­மான நிலைக்குக் காரணம், தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­குகள் தான் என்­பதில் சந்­தே­க­மில்லை. எனினும், பொதுத்­தேர்தல் அவ்­வா­றா­ன­தாக இருக்­காது.

சஜித்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த தமி­ழர்கள், ஐ.தே.கவுக்கு வாக்­க­ளிக்கப் போவ­தில்லை. அவர்­க­ளுக்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தமிழ் மக்கள் கூட்­டணி என்று பல தெரி­வுகள் இருக்கும். அவற்றின் பக்­கமே அவர்கள் திரும்­பு­வார்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை வர­விடக் கூடாது என்­ப­தற்­காக சஜித்­துக்கு வாக்­க­ளித்த தமிழ், முஸ்லிம் மக்கள், பொதுத் தேர்­தலில் பெரும்­பாலும், தமிழ், முஸ்லிம் கட்­சி­க­ளுக்கே வாக்­க­ளிப்­பார்கள்.

எனவே, ஐ.தே.க எந்­த­ள­வுக்கு மோச­மான நிலையில் இருக்­கி­றது என்­பதை பொதுத்­தேர்தல் தான் வெளிப்­ப­டுத்தப் போகி­றது.

பொதுத்­தேர்­தலில் ஐ.தே.க வெற்­றி­பெற முடி­யாது. ஏனென்றால் ஜனா­தி­பதித் தேர்­தலில் கிடைத்த வெற்றி பொது­ஜன பெர­மு­ன­வுக்கு சாத­க­மா­னது. தேர்தல் நடக்கும் போது ஆட்­சியில் இருக்கும் அர­சாங்­கமும் அவர்­க­ளி­ன­தா­கவே இருக்கப் போகி­றது.

ஐ.தே.க மீது சிங்­கள பௌத்த மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து விட்­டார்கள் என்ற அடை­யாள முத்­திரை குத்­தப்­படும் போது, ஏற்­க­னவே சஜித்­துக்கு வாக்­க­ளித்­த­வர்­களும் கூட, ஐ.தே.கவுக்கு வாக்­க­ளிக்க முன்­வ­ரு­வார்­களா என்ற கேள்வி இருக்கும்.

இப்­படிப் பல்­வேறு கார­ணி­களால், ஐ.தே.க மீண்டும் ஆட்­சி­ய­மைக்கும் வாய்ப்பு கிட்­டாது.

இந்த நிலையில் ஐ.தே.கவுக்குள் முரண்­பா­டு­களும் பூசல்­களும் மேலோங்கும் போது, நிலைமை இன்னும் மோச­ம­டையும்.

கடந்த ஆண்டு ஒக்­டோபர் ஆட்­சிக்

­க­விழ்ப்பின் போது, ஐ.தே.கவின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்க முயற்­சிகள் நடந்­தன

 பேரம் பேசல்கள் நிகழ்ந்­தன. ஆனாலும் பெரும்­பா­லா­ன­வர்கள் அந்தப் பக்கம் சாயத் தயா­ராக இருக்­க­வில்லை.ஆனால் வரும் பொதுத் தேர்­த­லுக்குப் பின்னர் அவ்­வா­றான நிலை இருக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

ஏனென்றால் பொதுத்­தேர்­தலில் மஹிந்த தரப்­புக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்­காது போனால், குதிரை பேரம் நடக்கும் என்­பதில் ஐய­மில்லை.

ஏனென்றால் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஒழிப்­பது அல்­லது அதில் திருத்­தங்­களைச் செய்­வது தான் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் இலக்கு.

இதனை அவரும், பசில் ராஜபக் ஷவும், ஜனா­தி­பதித் தேர்தல் வெற்­றிக்குப் பின்னர் மிகத் தெளி­வாக கூறி­யி­ருந்­தனர்.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஒழிப்­பதன் மூலமே, மஹிந்த ராஜபக் ஷ தனது வாரி­சு­களின் அர­சி­யலை நிலைப்­ப­டுத்த முடியும். அதற்­காக அவர்கள் எந்த நிலை வரைக்கும் செல்லத் தயா­ராக இருப்­பார்கள்.

18ஆவது திருத்­தச்­சட்­டத்தை கொண்டு வரு­வ­தற்­காக ஐ.தே.க உடைக்­கப்­பட்­டது. இணைய மறுத்த சிறு­பான்மைக் கட்­சிகள் உடைக்கப் போவ­தாக மிரட்டிப் பணிய வைக்­கப்­பட்­டன. அது­போன்­ற­தொரு நிலை வரும் பொதுத் தேர்­த­லுக்குப் பின்­னரும் ஏற்­ப­டலாம்.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பொது­ஜன பெர­முன பெறாது போனால், குதிரை பேரங்கள், அச்­சு­றுத்­தல்­களின் மூலம், ஆட்கள் இழுக்­கப்­ப­டு­வார்கள்.

அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால், அது ஐ.தே.கவுக்கு இன்னும் கடு­மை­யான சோத­னை­யா­கவே அமையும்.

ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரத்தின் போது, சரத் பொன்­சேகா போன்ற ஐ.தே.க தலைவர்கள் சிலர், இம்முறை தோல்வியடைந்தால்  ஐ.தே.கவினால் 25 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறியிருந்தனர்.

இப்போதும் கூட பலரும், இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஐ.தே.க ஆட்சிக்கு வரமுடியாது என்றே ஆரூடம் சொல்கிறார்கள். அது 5 ஆண்டுகளாகவும் இருக்கலாம், 25 ஆண்டுகளாகவும் இருக்கலாம்.

இதனை தீர்மானிக்கப் போவது, தனியே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மாத்திரம் இருக்காது, ஐ.தே.கவின் அடுத்த கட்ட நகர்வுகளும், அணுகுமுறைகளும் கூட அதில் செல்வாக்குச் செலுத்தப் போகிறது.  

ஐ.தே.க தன்னை மறுசீரமைத்துக் கொண்டு எல்லா தரப்பு மக்களினதும் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக மாற வேண்டும். அதனை செய்யாமல், மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதை இப்போதைக்கு நினைத்துக் கூடப் பார்க்க  முடியாது.

- சத்ரியன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18
news-image

தமிழ்ப் பொதுவேட்பாளர் ‘குதிரைக் கொம்பு’

2024-04-15 18:20:26