காலி முகத்திடலில் நடைபெறும் மோசடிகள்; குறைப்பாடுகளை அவதானிக்க கண்காணிப்பு குழு  

Published By: Vishnu

02 Dec, 2019 | 03:33 PM
image

(எம்.மனோசித்ரா) 

கொழும்பு காலி முகதிடலில் நடைபெறும் மோசடிகள் மற்றும் அங்குள்ள குறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையிலான கண்காணிப்பு குழுவொன்றினை நியமிக்குமாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார். 

காலிமுக திடலுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டதன் பின்னரே அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். 

காலிமுகதிடலின் முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அவசியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அனைவருக்கும் தூய்மையான நாட்டை கையளித்தல் ' எனும் எண்ணக்கருவுக்கு அமைய பொழுது போக்கிற்காக மற்றும்  ஓய்வுபொழுதை கழிப்பதற்காக பொதுமக்கள் வருகைத்தரும் கடற்கரைச் சார் காலிமுகத்திடலை சுத்தமான இடமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடனே மேற்கூறப்பட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

காலிமுகதிடலில் உள்ள குறைப்பாடுகளை வெகுவிரைவில் நிவர்த்திச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன், உல்லாச பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு வீதிகளை புனரமைத்தல் , சிறு கடைகளில் மக்களின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முறையொன்றினை திட்டமிடுதல் மற்றும் கடற்கரையினை முழுமையாக சுத்தம் செய்தல் ஆகிய செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33