மலை­ய­கத்தை ஆக்­கி­ர­மிக்கும் போதைப்­பொ­ருட்கள்

Published By: J.G.Stephan

02 Dec, 2019 | 03:19 PM
image

அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­களின் பாரிய பிரச்­சினை போதைப்­பொருள் பாவ­னை­யாகும். குறிப்­பாக, ஆசிய மற்றும் ஆபி­ரிக்க நாடுகள்  போதைப்­பொருள் பாவ­னையில் முன்­னி­லையில் உள்­ளன. மேலைத்­தேய நாடு­களில் அனு­ம­திப்­பத்­திரம் பெற்று நடத்­தப்­படும் போதைப்­பொருள் வியா­பாரம் கீழைத்­தேய நாடு­க­ளிலும் பாவ­னைக்குத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

முக்­கி­ய­மாக ஐரோப்­பிய நாடு­க­ளிலும் அபி­வி­ருத்தி அடைந்த ஆசிய நாடு­க­ளிலும் போதைப்­பொருள் வியா­பாரம் ஆசிய மற்றும் ஆபி­ரிக்க நாடு­களின் சந்­தை­களை நம்­பியே உள்­ளது. நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்லும் போதைப்­பொருள்  கடத்­தல்­களை ஊட­கங்கள் வாயி­லாக நாம் அறி­கின்றோம். சமீப காலத்தில் இலங்கை போதைப்­பொருள் கடத்­தலில் ஒரு மத்­திய நிலை­ய­மாக மாறி­வ­ரு­வ­துடன் உள்­நாட்டு பாவ­னை­க­ளிலும் பாரிய வளர்ச்­சிப்­போக்கைக் கொண்­டுள்­ளது.

குறு­கிய காலத்தில் உள்­நாட்டில் பல்­வேறு வகை­யான போதைப்­பொ­ருட்கள் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளன. இவை சர்­வ­தேச மட்­டத்தில் அதிக விலைக்கு விற்­ப­னை­யாகும் போதைப்­பொ­ருட்­க­ளாகும். உள்­நாட்­டிலும் முக­வர்கள் மூலம் இளை­ஞர்­களையும் பாட­சாலை மாண­வர்­களையும் இலக்கு வைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. தடை செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருட்கள் நாட்­டினுள் பல்­வேறு சட்­ட­வி­ரோத வழி­மு­றைகள் மூலம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன. இவற்றை கடத்­து­வது, கைமாற்­று­வது, விற்­பனை செய்­வது, கொள்­வ­னவு செய்­வ­தற்கு என ஒரு கறுப்­புச்­சந்தை,  இயக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் அர­சியல் பெரும்­புள்­ளி­களும் போதைப்­பொருள் மாபி­யாக்­களும் தான் இச்­செ­யற்­பாட்­டிற்கு மூளை­யாகச் செயற்­ப­டு­கின்­றனர். பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அர­சி­யல்­வா­திகள் போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­பட்­டி­ருப்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. போதைப்­பொருள் விற்­ப­னை­யா­னது கொழும்பு உள்­ளிட்ட பெரு­ந­க­ரங்­களில் ஒரு வலை­ய­மைப்­பாக இயங்­கு­கின்­றது. நாட்டில் சமீப காலமாக இடம்­பெற்ற பல்­வேறு குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் பெரும்­பாலும் போதைப்­பொருட்களுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களே.  தலை­ந­கரில் பல்­வேறு பிர­தே­சங்­களில் இந்த போதைப்­பொருள் வியா­பா­ரி­களும் முக­வர்­களும் இயங்­கு­கின்­றனர். வெளிப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து கொழும்­புக்கு தொழி­லுக்குச் செல்லும் இளை­ஞர்கள் சுய­மா­கவும் வற்­பு­றுத்­தலின் மூலமும் இவ்­வ­லைப்­பின்­னலில் சிக்கிக் கொள்­கின்­றனர். மலை­யக இளை­ஞர்­களும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. தலை­ந­கரில் தொழி­லுக்­காகச் சென்று தங்­கி­யி­ருக்கும் மலை­யக இளை­ஞர்கள் அங்­குள்ள தொடர்­புகள் மூலம் போதைப்­பொருள் பாவ­னைக்கு அடிமையா­கின்­றனர். அவர்கள் மூலம் பெருந்­தோட்­டப்­ப­கு­தி­க­ளுக்கும் இந்த போதைப்­பொ­ருட்கள் அறி­முகம் செய்­யப்­ப­டு­கின்­றன.

இன்­ற­ளவில் ஊட­கங்கள், சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் போதைப்­பொருள் பாவ­னை­யா­ளர்­களின் தொடர்­புகள் மூலம் இளை­ஞர்கள் இந்த வலைக்குள் சிக்­கு­கின்­றனர். மலை­ய­கத்தில் பல்­வேறு முக­வர்கள் மூலம் போதைப்­பொருள் விற்­ப­னைகள் இடம்­பெ­று­வ­தாக தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபை உறுதி செய்­துள்­ளது. அதேபோல் சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் மூலம் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளோ­ரிலும் மலை­யக இளை­ஞர்­களும் அடங்­கு­கின்­றனர்.

2019ஆம் ஆண்டு ஜன­வரி தொடக்கம் ஜூலை வரை­யான 7 மாதக்­கா­லப்­ப­கு­திக்கும் மொத்­த­மாக 50,480 பேர் போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்­பது ஆரோக்­கி­ய­மான செய்­தி­யல்ல.

இத்­த­ர­வு­க­ளின்­படி 25,231 பேர் ஹெரோயின் போதைப்­பொ­ரு­ளுடன் தொடர்­பு­டைய குற்­றங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். அதற்கு அடுத்­த­ப­டி­யாக கெனபிஸ் என்­ற­வகை போதைப்­பொ­ரு­ளுடன் தொடர்­பு­டைய குற்­றங்­க­ளுக்­காக 24,340 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். வருட முடிவில் கணக்­கெ­டுப்புச் செய்­யும்­போது சுமார் ஒரு இலட்சம் பேர் இவ்­வாறு போதைப்­பொ­ரு­ளுடன் தொடர்­பு­டைய குற்­றங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­படக் கூடிய வாய்ப்பு உள்­ளது.



மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் தொழில் அற்ற இளை­ஞர்கள், நக­ரத்­தொ­ழி­லா­ளர்கள், கட்­டிட நிர்­மா­ணத்­தொ­ழி­லா­ளர்கள் என்­போரும் போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளமை வெளிப்­பட்­டுள்­ளது. தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் ஆய்வின் பிர­காரம் கடை­நிலைத் தொழி­லா­ளர்­களே அதி­க­மாக போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர். குறிப்­பாக ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டோரில் 47 சத­வீ­த­மானோர் இவ்­வா­றான தேர்ச்­சி­பெ­றாத தொழி­லா­ளர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.

பெருந்­தோட்டத் தொழி­லுக்குப் புறம்­பாக மலை­யக மக்கள் அதி­க­மாக சேவை­யாற்­று­வது நக­ரங்­க­ளி­லே­யாகும். நக­ரங்­களில் இன்று கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணி­யா­ளர்­க­ளுக்கு அதிக கேள்வி நில­வு­கின்­றது. அதேபோல் நாட்­சம்­பளம் வழங்­கப்­ப­டு­வதும் பெரும்­பாலும் கட்­டிட நிர்­மாண தொழி­லிலே ஆகும். எனவே இடை­நிலை வரு­மானம் பெறும் இளை­ஞர்கள் நக­ரங்­க­ளி­லுள்ள முக­வர்கள் மூலம் போதைப்­பொ­ருட்­களை பெற்­றுக்­கொள்­கின்­றனர். அன்­றாடம் கையில் பணம் கிடைப்­பதும் இதற்கு வாய்ப்­பாக அமை­கின்­றது. இவ்­வா­றா­ன­வர்­களின் மூலம் தோட்­டப்­ப­கு­தி­க­ளுக்கும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் போதைப்­பொ­ருட்கள் அறிமுகம் செய்­யப்­ப­டு­கின்­றன.

வய­து அ­டிப்­ப­டையில் பார்க்­கும்­போது 19 வய­துக்கும் 25 வய­துக்கும் இடைப்­பட்­டோரில் 10 சத­வீ­த­மானோர் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர். அதே­வேளை 25 தொடக்கம் 50 வய­துக்கு இடைப்­பட்ட அதி­க­மான தொகை­யினர் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர். குறிப்­பாக போதைப்­பொருள் பாவிப்­போரில் 80 சத­வீ­த­மானோர் 25–-50 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளாவர். பெரும்­பான்மைச் சமூ­கத்­துடன் ஒப்­பிடும் போது மலை­யக இளை­ஞர்கள் குறை­வான எண்­ணிக்­கை­யா­னோரே போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர். எனினும் இது முளை­யி­லேயே களை­யப்­பட வேண்­டிய ஒரு பிரச்­சி­னை­யாகும்.

கல்வி மட்­டத்­தினை ஒப்­பிட்டு ஆய்வு செய்­யும்­போது பாட­சாலை செல்­லா­தோரும்  பாட­சா­லைக்­கல்­வியை இடை­ந­டுவில் கைவிட்­டோ­ருமே அதி­க­மான போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர். தரம் 6 தொடக்கம் 10 இற்கு இடைப்­பட்ட வகுப்­பு­க­ளுடன் இடை­வி­ல­கியோர் கிட்­டத்­தட்ட 40 சத­வீ­த­மானோர் போதைப்­பொருள் பாவ­னை­யா­ளர்கள். அதேபோல் போதை பாவ­னை­யு­டை­யோரில் 50 சத­வீ­த­மானோர் திரு­ம­ண­மா­கா­த­வர்­க­ளாவர். இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் 15 தொடக்கம் 19 வய­துக்­கி­டைப்­பட்ட காலப்­ப­கு­தியில் போதைப்­பொருள் பாவ­னையை தொடங்­கி­யோர்­க­ளாவர்.

     இவ்­வ­கை­யான போதை பாவ­னை­யா­ளர்கள் தின­சரி பாவிப்­ப­வர்­க­ளா­கவும்  வாரத்­துக்கு ஒரு முறை அல்­லது வேறு கால இடை­வெ­ளி­களில் பாவிப்­ப­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். மலை­யக இளை­ஞர்­களை இதி­லி­ருந்து மீட்கும் பொறுப்பு எம் அனை­வ­ருக்கும் இருக்­கின்­றது. போதைப்­பொருள் பாவ­னையால் பொரு­ளா­தார ரீதி­யாக பல­வீ­ன­ம­டை­வதும்  உடல் ரீதி­யாக நோய்வாய்ப்படுவதும் இடம்பெறும். போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் நோய்களுக்கான மருத்துவ செலவீனமானது மிகவும் அதிகமாகும். அவ்வாறு நோய்வாய்ப்பட்டால் அதிலிருந்து மீள அதிக காலமெடுப்பதுடன் அவர் சார்ந்த குடும்பமும் சமூகமும் இதனால் மொத்தமாகப் பாதிக்கப்படும்.

முக்கியமாக பாடசாலை மாணவர்களின் நடத்தையை கண்காணிப்பதும்  இளைஞர் குழுக்களின் மீது அவதானம் செலுத்துவதும் காலத்தின் தேவையாகவுள்ளது. குறிப்பாக குழுக்களின் மூலமே போதைப்பாவனை அறிமுகம் செய்யப்படுகின்றமையும் புதியவர்கள் அப்பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலைகளை அண்மித்த கடைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சமூகத்தின் இருப்பை அழிப்பதற்கான கூர்மையான ஆயுதங்களில் போதைப்பொருள் முதன்மையானது. அதனைக் கொண்டு ஒட்டு மொத்த சமூகத்தையும் சீரழிக்கலாம். மலையகம் இவ்விடயத்தில் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

- அருள்கார்க்கி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22