கொழும்பிலுள்ள சட்டவிரோத  வீடுகள் அனைத்து அகற்றப்படும்  : அரசாங்கம் திட்டவட்டம் 

Published By: MD.Lucias

01 Jun, 2016 | 08:41 AM
image

கடந்த காலத்தில் அநாவசியமாக வீடுகளை அமைத்துக் கொடுத்து வடிகாலமைப்பு முறைமைகளை சீர்குலைத்தமையே   கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டதுடன்  அதிகளவில் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டமைக்கு காரணமாகும். கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சகல வீடுகளையும் உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 

அனர்த்தங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே அறியமுடியாது. எனினும் அனர்த்தங்களை தடுக்கும் மாற்று வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும். இப்போது வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையும், நீர் நிலைகளையும் ஏரிகளையும்    கால்வாய்களையும்  புனரமைக்கும் வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

அதற்காக சகல பிரதேச சபைகளின் உதவிகளையும் நாம் கோரியுள்ளோம். நாட்டில் அனைத்து பிரதேச சபைகளில் இருந்தும் துப்பரவுப் பணிகளுக்கான உபகரணங்களை பெற்றுவருகின்றோம்.   மனிதாபிமான முறையில் சேவை செய்வதற்கான மனித வளத்தையும் பெற்று வருகின்றோம். 

கொழும்பு பகுதியில் மீள் புனர்நிர்மான பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கொலன்னாவை பகுதியே வெள்ள அனர்த்தத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கொலன்னாவை பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த பாதிப்புகளுக்கு மாற்று நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.   

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அதிகளவில் கொலன்னாவை பிரதேசம் பாதிக்கப்பட்டமைக்கு அநாவசிய வீடமைப்பு முறைமைகளே காரணமாகும். 

கடந்த காலத்தில் அநாவசியமாக வீடுகளை அமைத்துக் கொடுத்து வடிகாலமைப்பு முறைமைகளை  தடுத்தமையே இந்தளவு சேதங்கள் ஏற்பட காரணமாகும். 

அப்பகுதியில் 20 அடி அகலத்தில் இருந்த கால்வாய் இப்போது 5அடி அகலம் வரையில் மட்டுமே உள்ளது. ஏனைய பகுதிகள் மண் நிரப்பப்பட்டு அநாவசிய குடியேற்றங்களை உருவாக்கியுள்ளனர். 

ஆகவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சகல வீடுகளையும் உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கை அரசாங்கம் மேற்கொள்ளும். 

மேலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து அதிகளவில் அரசாங்கம் அக்கறைகாட்டி வருகின்றது. எனினும் இப்போது வரையில் புதிய முறைமை குறித்து  முழுமையாக ஆராயப்படவில்லை. எவ்வாறு இருப்பினும் அடுத்த ஆண்டு முதற் காலாண்டு பகுதிக்குள் தேர்தலை நடத்த முடியும் என்ற நிலையில் தான் நாம் செயற்பட்டு வருகின்றோம். அந்தத் தேவையும் எமக்கு உள்ளது. ஆகவே அதற்கான நடவடிக்களை அரசாங்கம் சரியாக கையாளும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58