அர­சனும் இல்லை புரு­சனும் இல்லை!

Published By: J.G.Stephan

02 Dec, 2019 | 12:55 PM
image

பிரித்­த­றிய முடி­யாத ஒரு அர­சியல் சுழிக்குள் முஸ்லிம் சமூகம் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. பனிப்­பு­காரின் ஊடாக பார்ப்­பதைப் போல் முஸ்­லிம்­களின் எதிர்­காலம் காட்­சி­ய­ளிக்­கின்­றது. இது காட்­சிப்­பி­ழை­யாகக் கூட இருக்­கலாம். ஆனால், இது கால­நி­யதி. இதையும் கடந்து செல்ல வேண்­டி­யி­ருக்­கின்­றது.

‘எம்­மிடம் அதி­காரம் இல்லை’ என்று ஒரு பெருந்­தே­சியக் கட்­சியும், ‘எமக்கு முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளிக்­க­வில்லை’ என்ற தோர­ணையில் ஆளும் கட்­சியும் செயற்­ப­டு­வ­தாக ஒரு தோற்­றப்­பாடு ஏற்­பட்டு வரும் நிலையில், முஸ்லிம் சமூ­க­மா­னது ‘இரண்­டும்­கெட்டான் நிலையை’ நோக்கி நகர்ந்து கொண்­டி­ருப்­ப­தாக உள்­ம­னது சொல்­கின்­றது.

ஆண்­டாண்டு கால­மாக அபி­லா­ஷை­களும் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­டாத ஒரு இனக் குழு­ம­மாக, ஒழுங்­கான தலை­மைத்­து­வங்கள் இல்­லாத குறை, பாது­காப்பு இல்­லாத குறை, ஆயுத அடக்கு­மு­றைகள், இன­வாத நெருக்­க­டிகள் என பல்­வேறு கவ­லை­க­ளுடன் போய்க் கொண்­டி­ருக்கும் முஸ்­லிம்கள், ‘இரு தரப்­பாலும்’ கண்­டு­கொள்­ளப்­ப­டாமல் கைவி­டப்­ப­டு­வோமோ என்ற மனத் தாங்­க­லுக்கு ஆட்­பட்­டுள்­ளனர்.

பெரும்­பான்மை மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­க­ளாலும் முஸ்­லிம்கள் உள்­ள­டங்­க­லாக சிறு­பான்மை மக்­களின் சில இலட்சம் வாக்­கு­க­ளாலும் இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜ­பக்ஷ தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இன்னும் 4 மாதங்­களில் பொதுத் தேர்­த­லொன்று நடை­பெ­ற­வுள்ள சூழ்­நி­லையில், வர­வேற்­கத்­தக்க அதி­ரடி அறி­விப்­புக்­களை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வெளி­யிட்டு வரு­கின்­றனர். இதனால், இந்த அர­சாங்கம் பற்­றிய ஒரு நல்ல பார்வை ராஜ­பக் ஷ­வுக்கு வாக்­க­ளிக்­காத மக்­க­ளி­டமும் உரு­வாகத் தொடங்­கி­யுள்­ளது. ஆனால், இது எது­வரை என்­பது தெரி­ய­வில்லை.

முஸ்­லிம்­க­ளுக்கு அழைப்பு

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ, சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­ததில் இருந்து சிறு­பான்மை சமூ­கங்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தொடர்ச்­சி­யாக அழைப்பு விடுத்து வரு­கின்றார். இனி­வரும் தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு உள்­ள­டங்­க­லாக நாட்டில் பர­வ­லாக வெற்றி பெறு­வ­தற்கும், நீண்­ட­காலம் தமது ஆட்சி நிலைத்­தி­ருப்­ப­தற்கும் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் ஆத­ரவை பெறும் நோக்கில் அவர் அழைப்பு விடுத்­தாலும் அல்­லது முஸ்­லிம்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் இணைத்துக் கொண்டு நல்­லி­ணக்­க­மாக செயற்­படும் எண்­ணத்­தோடு நேசக்­கரம் நீட்­டி­னாலும், இது நல்­ல­தொரு சகுனம் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவை விடவும் அதி­க­ள­வான முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவும், சஜித்தை போட்­டி­யிட வைத்த ஐ.தே.கட்­சியும் தமக்கு வாக்­க­ளித்த முஸ்­லிம்கள் தொடர்பில் தமக்­குள்ள தார்­மீக கட­மையை நிறை­வேற்­றாமல் கறி­வேப்­பி­லை­யாக முஸ்லிம் சமூ­கத்தை எறிந்­து­விட்டு தமது உள்­வீட்டுச் சண்­டை­யி­லேயே காலத்தைக் கடத்த எத்­த­னிப்­ப­தா­கவே தெரி­கின்­றது.

மறு­பு­றத்தில், ‘சஜித்­திற்­குத்­தானே முஸ்­லிம்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் வாக்­க­ளித்­தார்கள். நமக்கு கொஞ்ச பேர்­தானே ஆத­ர­வ­ளித்­தார்கள் என்ற மனக்­குறை புதிய ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இருக்­கவே செய்யும். ஆன­போதும், இதனை மனதில் வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூ­கத்தை இந்த அர­சாங்கம் மாற்­றாந்தாய் மனப்­பாங்­கோடு பார்க்கக் கூடாது என்றே முஸ்லிம் சமூகம் அவாவி நிற்­கின்­றது.  

இதற்­கி­டையில், ஆளுந்­த­ரப்பு எல்லா விட­யங்­க­ளிலும் முஸ்­லிம்­களை தமக்கு ‘வாக்­க­ளிக்­காத சமூகம் என்ற கண்­ணோட்­டத்­தி­லேயே பார்க்க தலைப்­ப­டு­கின்­றதோ என்ற சந்­தே­கமும், புதிய அமைச்­ச­ரவை நிய­ம­னத்தின் பின்னர் இலே­சாக துளிர்­விடத் தொடங்­கி­யுள்­ளது. அதா­வது, ‘முஸ்­லிம்கள் தமக்கு பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளிக்­க­வில்­லையே’ என்ற மனக்­குறை புதிய ஜனா­தி­ப­திக்கு இருப்­பதைப் போலவே, ‘இந்த ஆட்­சியில் பல­முள்ள பங்­கா­ள­ராக முடி­யாமல் போய்­விட்­டதே’ என்ற வருத்­தமும், அமைச்­ச­ர­வையில் ஒரு அமைச்சர் கூட இல்­லாத குறையும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு இருக்­கவே செய்­கின்­றது.

என­வேதான், சஜித்தை வெற்­றி­பெறச் செய்ய முடி­யாமல் போன­தாலும், வெற்றி­பெற்ற கோத்­தா­பய ராஜ­பக் ஷ­விற்கு பெரு­ம­ளவு வாக்­கு­களை அளிக்­காமல் விட்­ட­தாலும், முஸ்லிம் சமூகம் அர­சனும் இல்லை புரு­சனும் இல்­லை­யென்ற இரண்­டும்­கெட்டான் நிலைக்கு வந்­தி­ருக்­கின்­றது என்­கின்றோம்.

முஸ்­லிம்­களின் வர­லாறு

இலங்கை முஸ்­லிம்கள் எப்­போதும் ஜன­நா­ய­கத்தின் வழி­நின்­ற­வர்கள் என்­ப­தற்கு வர­லாற்றில் நிறை­யவே சான்­றுகள் இருக்­கின்­றன. முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பாது­காப்­பிலும் அபி­வி­ருத்­தி­யிலும் இன்­ன­பிற விட­யங்­க­ளிலும் கணி­ச­மான பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்­கின்­றது. அர­சிற்கு எதி­ராக போராடி  தனி­நாடு கேட்­கவும் இல்லை, சகோ­தர தமிழ்

மக்­களின் நியா­ய­மான உரிமைக் கோரிக்­கை­க­ளுக்கு குறுக்கே நின்­றதும் இல்லை.

ஆனாலும், கடந்த 40 வரு­டங்­களில் முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்ட உரி­மைகள், அபி­லா­ஷைகள், தீர்வு கண்ட பிரச்­சி­னை­களை விட இழந்­த­வைகள் தான் அதிகம். விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட ஆயுதக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள் போன்­ற­வற்­றாலும் முஸ்­லிம்கள் அவ­திப்­பட்­டனர். யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதால் பாது­காப்பு உணர்வு மேம்­பட்­டாலும் 2010 இற்கு  இன­வாத சக்­தி­களால் நிம்­மதி இல்­லாத ஒரு சமூ­க­மாக ஆக்­கப்­பட்­டனர்.

தென்­னா­சியப் பிராந்­தி­யத்தில் ஆதிக்கம் செலுத்­து­வ­தற்­கா­கவோ, நாட்டின் வளங்­களைச் சூறை­யா­டு­வ­தற்­கா­கவோ, இஸ்­லாத்தை பின்­பற்றும் மக்கள் கூட்­டத்தை அடக்கும் நிகழ்ச்சி நிர­லிலோ அல்­லது ஆட்சி மாற்­றத்­திற்­கா­கவோ பக­டைக்­காய்­க­ளாக பாவிக்­கப்­பட்­டதும், அதனால் அதிகம் இழப்­புக்­களைச் சந்­தித்­ததும் இரண்­டா­வது சிறு­பான்­மை­யி­ன­மான முஸ்­லிம்­கள் தான். இவ்­வாறு முஸ்­லிம்கள் எதிர்­கொண்ட பல சிக்­கல்­க­ளுக்கு அடிப்­படைக் காரணம், திரா­ணி­யற்ற அர­சியல், சமூக, சமயத் தலை­மை­க­ளாகும். இதில் யாரும் விதி­வி­லக்­கல்லர்.

இலங்கை முஸ்­லிம்கள் தனி ஒரு இராஜ்­ஜியம் வேண்­டு­மென்று எண்­ணி­ய­வர்­க­ளல்லர் என்­ப­துடன், ஒரு­போதும் முஸ்லிம் சமூகம் தனி­யான ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிறுத்­தவும் இல்லை. இதே கோஷத்­துடன் போட்­டி­யிட்ட நபர்­க­ளுக்கு ஐம்­ப­தா­யிரம் வாக்­கு­களைக் கூட வழங்­க­வில்லை.

எல்லா ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் யாரா­வது ஒரு சிங்­கள பௌத்­த­ருக்கு அல்­லது சிங்­கள கிறிஸ்­த­வ­ருக்கே வாக்­க­ளித்து வந்­தி­ருக்­கின்­றனர். அந்த வகையில் இந்த நாட்டின் ஆட்­சி­யா­ளர்­களை சிம்­மா­சனம் ஏற்­றி­யதில் முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் பங்­கி­ருக்­கின்­றது என்­ப­தையும் இதன் கார­ண­மா­கவே எல்லா அர­சாங்­கங்­க­ளிலும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அதி­கா­ர­மிக்க (அமைச்சு) பத­விகள் வழங்­கப்­பட்­டன என்­ப­தையும் யாரும் மறுக்­க­வி­ய­லாது.

கடந்­த­கால பங்­க­ளிப்பு

1990ஆம் ஆண்டில் ஆர். பிரே­ம­தா­ஸவின் ஆட்­சியை மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் தலை­மையில் உறு­தி­ப­டுத்­திய முஸ்லிம் சமூ­கமே 1994 ஜனா­தி­பதித் தேர்­தலில் சந்­தி­ரிகா அம்­மை­யாரின் வெற்­றிக்கு கணி­ச­மான பங்­க­ளிப்பை வழங்­கி­யது. இம்­முறை கோத்­தா­பய ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மட்­டு­மன்றி சஜித்­துக்கு ஆத­ர­வாக நின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் 2005இல் மஹிந்த ராஜ­பக் ஷவின் வெற்­றிக்கு துணை நின்­றனர்.  

2010 தேர்­தலில் மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜ­பக் ஷவை அந்தக் கதி­ரையில் அமர வைத்­ததில் முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் பங்­கி­ருக்­கின்­றது. இது இந்­நாட்டின் தமி­ழர்கள் வழங்­கிய பங்­க­ளிப்பை விட சற்று அதிகம் என்றே கூறலாம். 2015 மற்றும் 2019 ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் ஆத­ர­வ­ளித்த வேட்­பா­ளர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்­களும் பெருந்­தே­சியக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­களே என்­பதை நினைவிற் கொள்ள வேண்டும்.  

இம்­முறை சஜித்­திற்கு வழங்­கிய அள­வுக்கு கோத்­தா­பய ராஜ­பக் ஷ­வுக்கு முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்­பது நிதர்­ச­னமே. ஆனாலும், பல இலட்சம் முஸ்­லிம்கள் மொட்டுச் சின்­னத்­திற்கு வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தையும், தேசிய காங்­கிரஸ் போன்ற ஓரிரு முஸ்லிம் கட்­சி­களும் பல தனிப்­பட்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் இதற்­காக உழைத்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

இருப்­பினும், முஸ்­லிம்கள் மெல்ல மெல்ல இரு தரப்­பி­ன­ராலும் கைவி­டப்­ப­டு­வது போன்ற ஒரு முன்­னு­ணர்வு இச் சமூ­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. தேர்தல் முடி­வுகள் வெளி­யான பிறகு, சஜித்­திற்கும் ரணி­லுக்கும் இடையில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் கதி­ரைக்­கான சண்டை இடம்­பெ­று­கின்­றதே தவிர, சிறு­பான்மை முஸ்­லிம்கள் தொடர்பில் அவர்­க­ளுக்­குள்ள தார்­மீக கடமை பற்றி சிந்­தித்­த­தாக தெரி­ய­வில்லை.

மறு­பு­றத்தில், பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்­பதை குறிப்­பெ­டுத்து வைத்­தி­ருக்­கின்ற ராஜ­பக் ஷ அர­சாங்கம் முஸ்லிம் சமூ­கத்­துடன் இணைந்து செயற்­பட பொது­வெ­ளியில் அழைப்பு விடுக்­கின்ற போதிலும், அண்­மையில் நிய­மிக்­கப்­பட்ட இடைக்­கால அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கவோ, பிரதி அல்­லது இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவோ எந்த முஸ்­லிமும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என்­பது கவ­னிப்­பிற்­கு­ரிய பேசு பொரு­ளா­கி­யி­ருக்­கின்­றது.

இது ஒரு குற்றம் இல்லை. அர­சாங்கம் திட்­ட­மிட்டு இதை செய்­தி­ருக்­கவும் மாட்­டாது. ஆயினும், வர­லாற்றில் முதல் தட­வை­யாக முஸ்லிம் மக்கள் பிர­தி­நிதி ஒருவர் அமைச்­ச­ர­வையில் இடம்­பெ­றாமை, ஒரு சமூகம் என்ற வகையில்.. ‘எல்லாம் இருந்தும் ஏதோ­வொன்று இல்­லாத ஒரு குறையை பர­வ­லாக முஸ்லிம் மக்­க­ளுக்குள் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது எனலாம்.  

முன்­ன­தாக, முஸ்லிம் ஒருவர் இந்து மத­வி­வ­கார பிர­தி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட போது எதிர்ப்புக் குரல்கள் எழுந்­தன. ஏப்ரல் பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லை­ய­டுத்து முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மூவர் பதவி விலக வேண்­டு­மென்று அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. இப்­போது வடமேல் மாகாண முத­ல­மைச்­ச­ராக முஸ்லிம் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தற்கு எதி­ராக சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. சம­கா­லத்தில், 53 பேரைக் கொண்ட அமைச்­சர்கள், இரா­ஜாங்க மற்றும் பிர­தி­ய­மைச்­சர்­களுள் முஸ்­லிம்கள் யாரும் இல்லை. எனவே, அர­சியல் ரீதி­யாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு மட்­டுமே இப்­ப­டி­யான ஒரு இக்­கட்­டான நிலை ஏற்­ப­டு­கின்­றதா என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

தொடர்ச்­சி­யாக பத­விகள்
இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­தது தொடக்கம் இன்று வரை­யான எல்லா அர­சாங்­கங்­களின் அமைச்­ச­ர­வை­யிலும் முஸ்லிம் ஒரு­வ­ரா­வது அமைச்­ச­ராக பதவி வகித்து வந்­தார்கள். 1947 இல் நிறு­வப்­பட்ட டீ.எஸ்.சேன­நா­யக்க தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வையில் ரீ.பி.ஜாயா, 1953 இன் ஜோன் கொத்­த­லா­வல அமைச்­ச­ர­வையில் எம்.சி.எம்.கலீல், 1956 இன் பண்­டா­ர­நா­யக்க அர­சாங்கம் மற்றும் 1959 தஹ­நா­யக்க அர­சாங்­கத்தில் சீ.ஏ.எஸ். மரிக்கார்,  1960 மற்றும் 1970 களில் நிறு­வப்­பட்ட ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க அமைச்­ச­ர­வை­களில் பதி­யுதீன் மஹ்மூத், 1965 டட்­லி­சே­ன­நா­யக்க அமைச்­ச­ர­வையில் எம்.எச்.மொஹமட், 1977 இன் ஜே.ஆர் ஜய­வர்­தன அர­சாங்­கத்தில் ஏ.சி.எஸ்.ஹமீட் மற்றும் எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார், 1989 இல் ஆட்­சிக்கு வந்த ஆர்.பிரே­ம­தாஸ அர­சாங்­கத்தில் ஏ.சீ.எஸ்.ஹமீட் மற்றும் ஏ.ஆர். மன்சூர் என எல்லா அமைச்­ச­ர­வை­யிலும் ஆகக் குறைந்­தது ஒரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­வது  அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக இடம்­பி­டித்­தி­ருந்­தனர்.

மிகக் குறிப்­பாக 2004 இல் நிறு­வப்­பட்ட சந்­தி­ரிகா அம்­மை­யாரின் ஆட்சி தொடக்கம், அதற்குப் பின்னர் ஆட்சி செய்த மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் மைத்­தி­ரி­பால - ரணில் கூட்­ட­ர­சாங்­கங்­களில் மேலும் அதி­க­மான முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கவும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளா­கவும் பதவி வகித்­தனர். சில­ருக்கு தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை வழங்­கப்­பட்டு அமைச்சுப் பத­வி­களும் வழங்­கப்­பட்ட வர­லாறும் உள்­ளது.

ஆனால் அண்­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள 15 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள், அதன் பின்னர் நிய­மனம் பெற்ற 35 இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் 3 பிர­தி­ய­மைச்­சர்­களில் எந்­த­வொரு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­யையும் காண முடி­ய­வில்லை. பைஸர் முஸ்­தபா, காதர் மஸ்தான் ஆகிய இரு­வ­ருக்கும் அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­டலாம் என்று நினைத்­தி­ருந்த முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­பார்ப்பு நிறை­வே­ற­வில்லை.

இந்த இடத்தில், “முஸ்­லிம்கள் கோத்­தா­பய ராஜ­பக் ஷ­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. எனவே எந்த உரி­மை­யுடன் அமைச்சு கேட்­கின்­றீர்கள்?” என்று ஒரு­சி­லரும், “பொது­ஜன பெர­மு­னவில் எந்த முஸ்லிம் எம்.பி.யும் இல்லை” என்று வேறு சிலரும் கேள்வி எழுப்­பு­வதைக் காண முடி­கின்­றது. இதே­வேளை, அமைச்சுப் பதவி இருந்தால் மட்டும் சாதித்து விடு­வார்­களா என்ற வினாவும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இவை­யெல்லாம் நம்மை நாமே திருப்­திப்­ப­டுத்திக் கொள்ளும் கற்­பி­தங்­களே அன்றி, நியா­யங்­க­ளாகத் தெரி­ய­வில்லை.

விளங்க வேண்­டி­யது

இங்கு ஒரு விட­யத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்­லையே தவிர முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­கவே இல்லை என்­பது பொய்­யாகும். இப்­ப­டி­யி­ருக்க, முஸ்­லிம்கள் யாரும் வாக்­க­ளிக்­கவே இல்லை எனவே எந்த முகத்தை வைத்துக் கொண்டு அமைச்சை எதிர்­பார்ப்­பீர்கள் என்று நமக்­குள்ளே வாதி­டு­வது அபத்­த­மா­னது.

அதே­நேரம், பொது­ஜன பெர­முன கட்­சியில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் யாரும் இல்லை என்­ப­தென்­னவோ உண்­மைதான். ஆனால், மொட்­டுடன் இணைந்து செயற்­பட்ட சிறு மற்றும் சிறு­பான்மைக் கட்சிக் காரர்­க­ளுக்கும் அமைச்சுப் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களுள் ஆறு­முகன், டக்ளஸ் தேவா­னந்தா, தினேஸ் குண­வர்­தன, விமல் வீர­வன்ச என உள்­ள­டங்­கு­கின்­றனர்.

எனவே, இங்கு ‘மொட்டுக் கட்­சிக்கா­ரர்கள்’ என்ற தகு­தியின் அடிப்­ப­டையில் அமைச்சுப் பத­வி­களை வழங்­க­வில்லை. மாறாக, கடந்த நான்­கரை வரு­டங்­க­ளாக ராஜ­பக் ஷ அணி­யினர் அதி­கா­ர­மி­ழந்து அல்­லல்­பட்ட போது, ‘அந்தப் பக்கம்’ தாவாமல் பக்­க­ப­ல­மாக இருந்­த­வர்­க­ளுக்கே அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சுப் பதவி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கின்­றது. ஆகவே, அந்த வரை­ய­றைக்குள் எந்த முஸ்­லிமும் இல்லை எனலாம்.

எவ்­வா­றி­ருப்­பினும், முன்னர் அனு­மா­னிக்­கப்­பட்ட போதிலும், பைஸர் முஸ்­தபா மற்றும் காதர் மஸ்தான் ஆகி­யோ­ருக்கு கடைசி மட்டும் பதவி வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில், அமைச்சுப் பத­வியை பைஸர் முஸ்­தபா தனக்கு பதவி தேவை­யில்லை என்று சொல்லி விட்டார் என்றும், மஸ்­தா­னுக்கு ஏதோ கார­ணத்தால் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் சமூக வலைத்­த­ளங்­களில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், விசா­ரித்துப் பார்த்­ததில் உண்மைக் கார­ணங்கள் வேறு­வி­த­மா­னவை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு அமைச்சு கொடுக்­கப்­ப­டாமை தற்­செ­ய­லா­கவே இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. அர­சாங்கம் எதிர்­பார்த்த தகு­தி­களை பைஸரும், மஸ்­தானும் கொண்­டி­ருக்­க­வில்லை என்றே கருத வேண்­டி­யுள்­ளது. ஒரு­வேளை, கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் வெற்­றி­பெற்று தேசிய காங்­கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதா­வுல்லா ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தி­ருப்­பா­ரானால், அவ­ருக்கு அமைச்சுப் பதவி கிடைத்­தி­ருக்கும். இதற்­கப்பால் சொல்ல ஒன்­று­மில்லை.

ஆனால், அமைச்சுப் பதவி கொடுக்­கா­தது சரிதான் என்று சொல்­வது அற்­பத்­த­ன­மா­னது. அது, ஜனா­தி­ப­திக்கு இம்­முறை வாக்­க­ளித்த முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­பையும், அதா­வுல்லா, பைஸர், மஸ்தான் தொடக்கம் பஸீர், ஹச­னலி, அலி­சப்ரி வரை முஸ்லிம் சமூக அர­சி­யல்­வா­தி­களும் செயற்­பாட்­டா­ளர்­களும் வழங்­கிய ஒத்­து­ழைப்­பையும் குறை­ம­திப்­பீடு செய்­வது போலவே  அர்த்­தப்­ப­டுத்­தப்­ப­டலாம்.

முஸ்­லிம்­களின் வகி­பாகம்

அதே­வேளை, கடந்த காலங்­களில் அமைச்சுப் பத­வி­களைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் அதன் கனதி உணர்ந்து மக்­க­ளுக்கு சேவை­யாற்­ற­வில்லை. வெறு­மனே கதி­ரை­களை சூடாக்­கி­விட்டு, வரப்­பி­ர­சா­தங்­களை அனு­ப­வித்துக் கொண்டு காலத்தை வீண­டித்­தார்­களே தவிர, முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. எனவே அமைச்சு தந்தாலும், தராவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர்.

இதையெல்லாம் தாண்டி, பல்லினங்கள் வாழும் நாடொன்றில் முஸ்லிம்களும் ஒரு தனியினம். அவர்களுக்கு என்று பிரத்தியேகமான அபிலாஷைகள் உள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபயவுக்கு பாரியளவில் வாக்களிக்காத தமிழ் சமூகத்திற்கு இரு அமைச்சுக்கள் வழங்கப்பட்டிருப்பது போல, முஸ்லிம்களுக்கும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை வழங்கியிருக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக, அரபு நாடுகளுக்கு காட்டுவதற்காக, முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் அதை செய்ய முன்வருமாயின், முஸ்லிம்கள் அதனை ஒரு நல்ல சமிக்ஞையாக நோக்குவார்கள். அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கான வகிபாகம் உறுதிப்படுத்தப்படும் அதேநேரத்தில், ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியும் குறையும்.

அந்த வகையில், இப்போது இரண்டும்கெட்டான் நிலையிலுள்ள முஸ்லிம் சமூகம் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்ல வேண்டும். அரசாங்கமும் கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் ராஜ­பக் ஷக்களுக்கு வழங்கிய ஆதரவை மனதிற் கொண்டும், நல்லெண்ண அடிப்படையிலும் உரியவற்றை வழங்கி முஸ்லிம்களை அணைத்துச் செல்வதே சிறப்பு.

அதைவிடுத்து, இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ‘அதிகாரம் கிடைக்கவில்லை’ என்ற கோதாவில் முஸ்லிம்களை கவனிக்காது விட நினைக்கின்ற சமகாலத்தில், தமக்கு ‘பெருவாரியாக முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை’ என்ற உள்மன ஓர்மத்தின் காரணமாக ஆட்சியாளர்களும் முஸ்லிம் சமூகத்தினை நட்டாற்றில் விட்டு விடக்கூடாது. இதுவே முஸ்லிம் சமூகத்தின் நிகழ்கால எதிர்பார்ப்பாகும். வேறொன்றுமில்லை !

-ஏ.எல்.நிப்றாஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54