முக்­கிய விட­யத்தை வலி­யு­றுத்­தி­யுள்ள இந்­தியா

Published By: Digital Desk 3

02 Dec, 2019 | 11:57 AM
image

புதிய ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ  வெற்­றி­க­ர­மான இந்­திய விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருக்­கின்றார்.  வர­லாற்று காலம்  தொடக்­கமே  இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய நாடுகள் வலு­வான மற்றும் பல்­வேறு வழி­க­ளி­லான  தொடர்­பினை கொண்­டுள்ள நாடுகள்  என்ற வகையில் ஜனா­தி­ப­தியின்  இந்­திய விஜயம் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது. இந்­திய விஜ­யத்­தின்­போது  அந்­நாட்டின் ஜனா­தி­பதி, பிர­தமர், வெ ளிவி­வ­கார அமைச்சர் மற்றும்  உயர் அதி­கா­ரிகள் என பல­ரையும் சந்­தித்து ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.  

ஜனா­தி­பதி  கோத்தாபய ராஜ­பக் ஷ  நாட்டின் தலை­வ­ராக  பத­வி­யேற்ற  பின்னர் மேற்­கொண்ட முத­லா­வது  வெளிநாட்டு விஜ­ய­மாக இந்­திய விஜயம் அமைந்­துள்­ள­மையும் விசேட அம்­ச­மாகும். இது  தொடர்பில்  இந்­தியப் பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் பிரஸ்­தா­பித்த ஜனா­தி­பதி,  தனது பத­விக்­கா­லத்தில் முதலில்  இலங்கை வரும்  வெளிநாட்டு தலை­வ­ராக இந்­தியப் பிர­தமர் மோடி இருக்க வேண்டும் என்று  தான் விரும்­பு­வ­தா­கவும்  குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில்,  இந்­திய விஜ­யத்­தின்­போது  அந்­நாட்டு பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் இந்­தியப் பிர­தமர் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள், சமத்­துவம் மற்றும்  சுதந்­திரம் குறித்து மிக முக­்கி­ய­மான விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார்.

குறிப்­பாக  இரு­த­ரப்பு சந்­திப்பின் பின்னர் கருத்து வெ ளியிட்ட இந்தியப் பிர­தமர் மோடி, ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் நல்­லி­ணக்கச் செயன்­மு­றையைத் தொடர்ந்து முன்­னெ­டுக்கும் என்றும் சமத்­துவம், நீதி, சமா­தானம் மற்றும் கௌர­வத்­துக்­கான தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் என்றும் அந்தச் செயன்­மு­றை­களில் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தை நடை­மு­றை­ப­டுத்­து­வதும் உள்­ள­டங்­கு­கி­றது என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.  மேலும், இலங்­கையில் நல்­லி­ணக்கம் தொடர்­பான எமது கருத்­துக்­களைப் பகிர்ந்­து­கொண்டோம். இனங்­க­ளுக்கிடை­யி­லான ஒற்­றுமை குறித்து  சகல தரப்­புக்­க­ளையும் அர­வ­ணைக்கும் தனது அர­சியல் கருத்­துக்­களை என்­னிடம் ஜனா­தி­ப­தி கூறினார். பலம் வாய்ந்­த­தொரு இலங்கை, இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல மாறாக இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்­திற்கே நன்­மை­ய­ளிப்­ப­தாகும். அண்­மையில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜபக் ஷ­வுக்கு மக்கள் அளித்த ஆணை ஒரு பலம்­வாய்ந்த நாடொன்­றுக்­கான இலங்கை மக்­களின் எதிர்­பார்ப்­பாகும். இலங்­கையும் இந்­தி­யாவும் வலி­மை­யான பிணைப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது  என்றும்   இரு­த­ரப்பு சந்­திப்பின் பின்னர் இந்­தியப் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

அதன்­படி  தமிழ்ப் பேசும் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சினை தொடர்பில் இந்­தியப்  பிர­தமர் முக்­கி­யத்­து­வ­மிக்க கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். இந்­தியப் பிர­த­மரின் கருத்­துக்­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் வர­வேற்­றி­ருந்­தது.  குறிப்­பாக  13 ஆவது திருத்­தத்தின் அமு­லாக்கம், சமத்­துவம், நீதி மற்றும் கௌரவம் என்­பன  தொடர்பில் இந்­தியப்  பிர­தமர் வலி­யு­றுத்­தி­யுள்­ளமை  முக்­கிய அம்­சமாகும்.

இதே­வேளை இரு­த­ரப்பு சந்­திப்பின் பின்னர்  கருத்து வெளியிட்ட ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ,  ஜனா­தி­பதி என்ற வகையில் எனது பதவிக் காலத்தில் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உற­வு­களை மிகவும் உயர்ந்த மட்­டத்­துக்கு எடுத்துச் செல்ல நான் விரும்­பு­கிறேன். வர­லாற்று ரீதி­யா­கவும் கலா­சார ரீதி­யா­கவும் அர­சியல் ரீதி­யா­கவும் நாம் நீண்ட கால நட்­பு­றவை கொண்­டி­ருக்­கின்றோம். எமது மக்­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­காகவும் பாது­காப்­புக்­கா­கவும் இணைந்து பணி­யாற்ற வேண்­டிய தேவை இருக்­கி­ன்றது.  நீண்­ட­கால நட்­பு­றவை கொண்­டுள்ள இரு நாடு­களும் அவற்றின் பொரு­ளா­தார, அபி­வி­ருத்தி  மற்றும் பாது­காப்­புக்­காக இணைந்து பணி­யாற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­வேளை, இந்­திய ஊடகம் ஒன்­றுக்கு   வழங்­கிய நேர்­கா­ணலில்  தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வு மற்றும்  வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி குறித்தும் ஜனா­தி­பதி பிரஸ்­தா­பித்­தி­ருந்தார்.

அதா­வது தமிழ்­மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தி­யையும் சிறந்த வாழ்க்­கைத் த­ரத்­தையும் வழங்­கு­வதே எனது அணு­கு­மு­றை­யாகும். சுதந்­திரம், அர­சியல் உரி­மை­களைப் பொறுத்த­வரை அவை ஏற்­க­னவே எங்கள் அர­ச­மைப்பில் இடம்­பெற்­றுள்­ளன. வேலை­வாய்ப்பு மூலமும் மீன்­பி­டித்­துறை, விவ­சாயம் போன்­ற­வற்­றினை ஊக்­கு­விப்­பதன் மூலமும் நேர­டி­யாக மக்­க­ளுக்கு நன்­மைகள் சென்­ற­­டை­வ­தற்­கான வழி­வ­கை­களை காண­வேண்டும்  என்பதில் நான் தெளிவாக இருக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.

நாங்கள் அர­சியல் விவ­கா­ரங்கள் குறித்து ஆரா­யலாம். ஆனால், கடந்த 70 வரு­டங்­க­ளாக தொடர்ந்து வந்த ஆட்­சி­யா­ளர்கள் ஒரு விடயம் குறித்து மாத்­தி­ரமே வாக்­கு­று­தி­ய­ளித்து வந்­துள்­ளனர், அதி­கா­ரப்­ப­கிர்வே அது­வாகும். ஆனால் இறு­தியில் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. பெரும்­பான்மை சமூ­கத்தின் விருப்­பங்­க­ளுக்கு எதி­ராக எத­னையும் செய்ய முடி­யாது எனவும் நான் கரு­து­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

பெரும்­பான்மை சமூ­கத்தின் விருப்­பத்­துக்கு மாறாக யாரா­வது ஏதா­வது வாக்­கு­று­தி­ய­ளித்தால் அது பொய்யாகும். எந்த பிர­தே­சங்­க­ளையும் அபி­வி­ருத்தி செய்­ய­வேண்டாம், வேலை­வாய்ப்பை வழங்­க­வேண்டாம் என எந்த சிங்­க­ள­வரும் தெரி­விக்க மாட்டார். ஆனால் அர­சியல் விவ­கா­ரங்கள் வேறு மாதி­ரி­யா­னவை.  13 ஆவது திருத்தம் இலங்­கையின் அர­ச­மைப்பின் ஒரு பகுதி என்­ப­துடன் அது ஏற்­க­னவே நடை­மு­றையில் உள்­ளது. பொலிஸ் அதி­காரம் போன்­றவை மாத்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை, இதனை எங்­களால் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது. நான் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றேன் என்றும்   தமிழ் மக்­களின் பிரச்­சினை குறித்து  ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.

அந்­த­வ­கையில்,  புதிய ஜனா­தி­ப­தியை பொறுத்­த­வ­ரையில் இந்த இந்­திய விஜயம் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் இந்­தியத் தரப்பும்  தமிழ் மக்­களின்  நீண்­ட­கால பிரச்­சி­னையை தீர்த்தல் உள்­ளிட்ட  விட­யங்­களில்  தனது நிலைப்­பாட்டை உறு­தி­யாக தெரி­வி­த்­துள்­ளது.

உண்­மையில் இலங்கை தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வதில் இந்­தி­யா­வுக்கு தார்­மிகக் கடமை உள்­ளது என்­ப­தனை மறுக்க முடி­யாது. கடந்த காலங்­களில் இந்­தியா இந்த விட­யத்தில் பாரிய தலை­யீ­டு­களை செய்­தி­ருந்த போதிலும் இது­வரை  தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு  சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­ கூ­டிய தீர்வைப் பெற முடி­ய­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் 1987 ஆம் ஆண்டு இந்­தி­யாவின் தலை­யீட்­டு­ட­னேயே  அர­சி­ய­ல­மைப்பின்  13 ஆவது திருத்தச் சட்டம்  கொண்­டு­வ­ரப்­பட்­டது. அவ்­வாறு  மாகாண சபை முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­திலும் இது­வரை  தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை அடைய முடி­ய­வில்லை என்­பதே யதார்த்­த­மாகும். எனவே  இந்­தியா  தொடர்ந்தும்   இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துடன் இணைந்து    தமிழ் பேசும்  மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வுகாண்­பது  தொடர்பில்   ஆரா­ய­வேண்டும். பெரும்­பான்மை மக்­களின் விருப்­பத்­துக்கு மாறாக எத­னையும் செய்ய முடி­யாது என்று ஜனா­தி­பதி   தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஆனால் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் குறித்து பெரும்­பான்மை மக்­க­ளுக்கு  தெளிவு­ப­டுத்தி தீர்­வுக்­கான அவ­சி­யத்தை  ஏற்­ப­டுத்த தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் முன்­வ­ர­வேண்டும்.  இது தொடர்பில்   அனைத்து மட்­டங்­க­ளிலும்   கலந்­து­ரை­யா­டல்கள்  இடம்­பெ­ற­வேண்டும்.  தமக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில்   இந்­தியா ஆரோக்­கி­ய­மான பங்­க­ளிப்பை செலுத்தும் என்று  தமிழ் பேசும்  மக்கள்  நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்­றனர்.  அதன் கார­ண­மா­கவே  மோடியின் அறி­விப்பை  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வர­வேற்­றது.

எனவே,  தமிழ்  மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வது குறித்து இந்­தியா முழு­மை­யான ஈடு­பாட்­டுடன் செயற்படும் என்ற  தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இந்த விடயத்தில் ஆரோக்கியமான பங்களிப்பை  இந்தியா வழங்கவேண்டிய  தார்மிகக் கடமையை கொண்டுள்ளது என்பதனை மறுக்க முடியாது.  எனவே  அரசாங்கமும் தமிழ்த் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி  தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைக் காண  இந்தியா  தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த வேண்டும். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இந்தியா  இந்த விடயத்தில் மிக முக்கியமாக  தமிழ் பேசும் மக்களின்   அரசியல் அபிலாஷைகள் குறித்து வலியுறுத்தியுள்ளமை தீர்க்கமான நிலைமையாக அமைந்துள்ளது. எனவே  விரைந்து  தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முதன்மையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் இந்தியா  அதற்கான  ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

(12.12.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரியத் தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13