கூட்டு முடி­வு­களை எடுக்­க­ கூட்­ட­மைப்பு ஒரு­போதும் தயா­ராக இருந்­த­தில்லை: சுரேஷ்

Published By: J.G.Stephan

02 Dec, 2019 | 11:27 AM
image

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பொது ஜன பெர­மு­ன­வுக்கு தனிப்­பெ­ரும்­பான்மை வழங்க வேண்­டு­மென சிங்­கள மக்கள் முடி­வெ­டுத்தால், அதுவும் நடக்­கலாம் என ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தில் நேற்­று முன்தினம் அவர்   நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே இவ்­வாறு  தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர்   தேர்தல் காலத்தில் மட்டும் கூடிப் பேசு­வது, வாக்­கு­களை சுவீ­க­ரிப்­பது என்­றுதான் இருக்­கி­றார்கள். அதற்கு அப்பால் கூட்டு முடி­வு­களை எடுக்க அவர்கள் ஒரு­போதும் தயா­ராக இருந்­த­தில்லை.

2002 முதல் 2015 வரை ஒன்­றாக பய­ணித்து, இந்த விட­யங்­களை நாம் வலி­யு­றுத்தி வந்தோம். அப்­ப­டி­யொன்றை செய்ய முடி­யா­தென திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்­டார்கள்.

இவர்­களின் நட­வ­டிக்­கையில் தமிழ் மக்கள் விரக்தி, வெறுப்பு ஏற்­பட்டு பல வழி­களில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். கடந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில், 50 வீதத்­துக்கும் மேலான வாக்­குகள் அவர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை.

ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் ஏற்­க­னவே தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தனர். கடந்­த­ கா­லத்தில் மக்கள் கொல்­லப்­ப­டவும், காணாமல் போகவும் கார­ண­மாக இருந்­தவர் ஜனா­தி­ப­தி­யாக வரக்­கூ­டா­தென உறு­தி­யாக இருந்­தார்கள். அதனால் மாற்று தெரி­வுக்கு வாக்­க­ளித்­தனர். நாங்கள்- மக்கள் விரும்­பி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்கள் என கூறினோம். ஏனெனில், மக்கள் யாருக்கு வாக்­க­ளிப்­பார்கள் என்­பது எமக்கு தெரியும்.

பொதுத் தேர்­தலில் பொது­ஜன  பெர­முன மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்றால் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­மென சொல்­கி­றார்கள். பாரா­ளு­மன்ற தேர்தல் விகி­தா­சா­ர­மு­றைப்­படி நடக்கும். அதில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்­குமா என்­ப­தெல்லாம் தெரி­யாது. ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வு­களை பார்க்­கும்­போது பொது­ஜ­ன­ பெ­ர­முன மீண்டும் ஆட்­சிக்கு வரு­மென தெரி­கி­றது.

தமிழ் மக்கள் தமக்­கான பிர­தி­நி­தி­களை தெரிவு செய்ய வேண்டும். சுமந்­திரன், சம்­பந்தன், அவர்­களின் நட­வ­டிக்கைகள் தொடர்­பா­கவும் மக்கள் தெளி­வாக புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். மாற்று அணி வரக்­கூ­டாது, பொது­ஜன பெர­மு­ன­வுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்க விடக்­ கூ­டாது என சொல்­வ­தற்கு தேவை­யில்லை. அதை மக்கள் தீர்­மா­னிக்கும் காலம் வந்­துள்­ளது. மாற்று அணி தேவை­யில்லை, மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வர­வி­டக்­கூ­டாது என சுமந்­திரன் சொல்லத் தேவை­யில்லை. ஏனெனில், ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் சிங்­கள மக்­களின் வாக்­கி­லேயே வெற்­றி­பெற்­றார்கள். அவர்­க­ளுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை கொடுக்க வேண்­டு­மென சிங்­கள மக்கள் முடி­வெ­டுத்தால், அதுவும் நடக்­கலாம்.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் அவர்கள் வெற்­றி­பெற்றால், அதை பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க ஏன் முயற்­சிக்­கக்­கூ­டாது என்­பது அடுத்த கேள்வி. ஏற்­க­னவே ஐ.தே.கவுடன் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வந்தும் உங்­களால் தீர்க்க முடி­ய­வில்லை. இப்­பொ­ழுது இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வந்தால், நாம் சிறிய தேசிய இன­மென்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளுடன் பேசி தீர்­வுக்கு வர­மு­டி­யுமா என்­பதை பார்க்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வந்தால், 19ஆவது திருத்­தச்­சட்­டத்தை சில சம­யங்கள் அவர்கள் மாற்­றலாம். அதை­மாற்­றினால் சுதந்­திர தேர்தல் ஆணைக்­குழு, உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட சில விட­யங்கள் மாற்­றப்­ப­டலாம். பல­முறை ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­கலாம். 19ஆவது திருத்­தத்­தினால் பாதிக்­கப்­படப் போவது பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்களே.

தமிழ் மக்கள் ஏற்­க­னவே பல­வி­தத்­திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தம்மைத்தாமே நிர்வகிக்க, தமது பாதுகாப்பை பலப்படுத்த எப்படியான உபாயங்களை வகுப்பதென நாங்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, சுமந்திரன் ஒருவர் திடீரென மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடாது, மாற்று அணி வரக்கூடாது என்பது தமிழ் மக்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் நடவடிக்கையை அவர் செய்கிறார்  என்றார்.-- 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59