சிகரட் கம்பனிகாரர்கள் முன்னிலையில்  என்னை நிற்கவைத்து கேள்விகேட்டனர்  : ஜனாதிபதி கூறுகிறார் 

Published By: MD.Lucias

31 May, 2016 | 06:54 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

அலரிமாளிகையில் சிகரெட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கடந்த ஆட்சியில் கேள்வி கேட்கப்பட்டது.   ஆனால் சிகரட்டுக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடவில்லை. இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளேன்  என்று  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே    ஜனாதிபதி இதனை நினைவுபடுத்தினார். 

இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 

நான் சுகாதார அமைச்சராக கடந்த ஆட்சியில் 5 வருடங்கள்  பணியாற்றினேன். இதன்போது எனக்கு அதிகளவில் கசப்பான அனுபவங்களே ஏற்பட்டன. சிகரட் பாவனையை குறைப்பதற்கும், சிகரட்டை ஒழிப்பதற்கும், சிகரட் பெட்டியில் அதன்  பாதகங்கள் தொடர்பில் நூற்றுக்கு 80 வீதம் புகைப்படத்தை அச்சிடுவதற்கும்    போராடினேன். 

இதன்போது என்னை அலரிமாளிகைக்கு அழைத்து சிகரட் கம்பனிக்காரர்கள் முன்னிலையில் நிற்கவைத்து கேள்வி கேட்டனர். நீதிமன்றம் சென்றேன். அங்கு நீதிமன்ற வாங்குகளில் பலமணிநேரம் அமர்ந்திருந்தேன்.  இறுதியில் என்னை இந் நாட்டின் ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35