உலகப் புகழ்­பெற்ற மலை­யேற்ற வீரர் பலி

Published By: J.G.Stephan

01 Dec, 2019 | 03:26 PM
image

அமெ­ரிக்­காவை சேர்ந்த உலகப் புகழ்­பெற்ற மலை­யேற்ற வீரர் பிராட் கோப்ரைட் ஆயிரம் அடி உய­ர­மான மலையின் உச்­சி­யி­லி­ருந்து தவறி விழுந்து சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

பிராட் கோப்ரைட் மற்றும் அவ­ரது நண்­ப­ரான சக மலை­யேற்ற வீரர் அய்டன் ஜேக்­கப்சன் ஆகிய இரு­வரும் மெக்­ஸிகோ நாட்டின் வடக்கு பகு­தியில் உள்ள ‘எல் பொட்­ரெரோ சிக்கோ’ மலையில் ஏறி­யுள்­ளனர். அப்­போது பிராட் கோப்ரைட் மலையின் உச்­சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்­பா­ராத வகையில் தவறி வீழ்ந்­த­தி­லேயே இந்த உயி­ரி­ழப்பு நேர்ந்­துள்­ளது.

31 வய­து­டைய இவர் எவ்­வித பாது­காப்பு உப­க­ர­ணமும் இல்­லாமல் மலை­யே­று­வதில் வல்­லவர். இதனால் இவர் உலகம் முழு­வதும் பிர­ப­ல­மான மலை­யேற்ற வீர­ராக திகழ்ந்தார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாகா­ணத்தில் உள்ள உலகின் மிக உய­ர­மான சிக­ரங்­களில் ஒன்­றான ‘எல் கேப்டன்’ சிக­ரத்தில் எந்தவித பாது­காப்பு உப­க­ர­ணங்­களும் இன்றி மிக குறு­கிய நேரத்தில் ஏறி சாதனை படைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிராட் கோப்­ரைட்டின் இறப்­புக்கு உலகம் முழுவதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10