வீழ்ச்சியும் விரிசல்களும்

03 Dec, 2019 | 12:51 PM
image

-துரைசாமி நடராஜா

நடந்து முடிந்த எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்தல் நாட்டில் பல்­வேறு அதிர்­வ­லை­களைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது. இத்­தேர்தல் முடி­வுகள் நாட்டு மக்­களை இரு துரு­வங்­க­ளாக்­கி­யுள்­ள­தோடு ஒவ்­வொரு கட்­சி­யி­னதும் எதிர்­கால முன்­னெ­டுப்­புகள் தொடர்பில் ஆழ­மாகச் சிந்­திக்­கவும் வைத்­துள்­ளது. சிறு­பான்மைக் கட்­சி­களும் இதற்கு விதி­வி­லக்­காகி விட­வில்லை. சிறு­பான்மைக் கட்­சிகள் தேர்தல் முடி­வு­க­ளால் திக்குமுக்­கா­டிப் ­போ­யுள்­ளன.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எவ்­வாறு நடந்­து­கொள்­வது என்று ஆலோ­சித்தும் வரு­கின்­றன. இந்­நி­லையில் சிறு­பான்மை மக்கள் இந்த நாட்டில் தொடர்ச்­சி­யா­கவே பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கும் முகம் ­கொ­டுத்து வரு­கின்­றனர். இவர்­க­ளது பிரச்­சி­னைகள் பல­வற்­றுக்கும் இன்னும் உரிய தீர்வு எட்­டப்­ப­டாத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது. எனவே சிறு­பான்மைச் சமூ­கத்­தினர் ஒன்­று­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வைப் பெற்­றுக்­கொள்­வ­தோடு உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூ­டிய ஓர் அவ­சி­யப்­பாடும் மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது.

எனினும் இச் சமூ­கத்­தினர் ஒன்­று­ப­டு­வ­தற்குப் பதி­லாக தமக்­குள்­ளேயே முரண்­பட்டுக் கொள்ளும் பிழை­யான ஒரு போக்­கையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இந்­நிலை பாத­க­ வி­ளை­வுகள் பலவும் ஏற்­ப­டு­வ­தற்கு உந்துசக்­தி­யாகும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

பல்­வேறு எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் ஜனா­தி­பதித் தேர்தல் கடந்த 16ஆம் திகதி நடந்து முடிந்­தி­ருக்­கின்­றது. இத் தேர்­தலில் வெற்­றி­பெ­றப்­போ­வது யார்? என்றும் அவர் எத்­தனை வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்வார்? என்றும் வெற்­றி­யா­ள­ருக்கு அதி­கப்­ப­டி­யாக எத்­தனை மேல­திக வாக்­குகள் கிடைக்­கு­மென்றும் பலரும் பல்­வேறு கருத்­து­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர். இக்­க­ருத்­து­களில் பல­ வி­ட­யங்கள் பொய்த்துப் போயுள்ள நிலையில் கோத்­த­பாய ராஜபக் ஷ நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ளார். 69 இலட்­சத்­துக்கும் அதி­க­மான வாக்­குகள் இவ­ருக்குக் கிடைத்­தி­ருக்­கின்­றன. இந்த வெற்றி உண்­மையில் போற்­றத்­தக்க ஒரு வெற்­றி­யா­கவே உள்­ளது. நாட்­டு­ மக்கள் கோத்­த­பா­யவின் மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கையின் வெளிப்­பா­டாக இவ்­வெற்றி அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மாக அவர் நடந்து கொள்வார் என்று திட­மாக நம்­பலாம்.

இத்­தேர்­தலில் சிறு­பான்மைக் கட்­சிகள் அதி­க­மான ஆத­ரவை புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவுக்கு வழங்கியிருந்­தமை தெரிந்த விட­ய­மாகும். எனினும் அவ­ரது  வெற்றி சாத்­தி­யமா­காத நிலையில் ஆத­ரவு வழங்­கிய கட்­சி­களின் நிலை இப்­போது தர்­ம­சங்­க­ட­மா­கி­யுள்­ளது. இதற்­கி­டையில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள மக்­களின்  ஆத­ர­வி­லேயே வெற்றி பெற்­ற­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். மேலும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் வெற்­றி­ பெற முடியும் என்­பதை தான் முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்­த­தா­கவும் தனது வெற்­றியில் தமிழ், முஸ்லிம் மக்­களும் பங்­கா­ளர்­க­ளாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்­தி­ருந்­த­போதும் எதிர்­பார்த்த அள­வுக்கு அவர்­களின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். தமிழ், முஸ்லிம் மக்கள் இனி­யா­வது ஒன்­றி­ணைய வேண்­டு­மென்றும் அவர் கேட்­டுக்­கொண்­டி­ருந்தார். இதற்­கி­டையில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­பா­ய­வுக்கு பத்து இலட்சம் சிறு­பான்மை மக்கள் வாக்­க­ளித்­தி­ருப்­ப­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்­தி­ருக்­கின்றார் என்­றாலும் அதை மறைக்க சிலர் முயற்­சிப்­ப­தா­கவும் அசாத் குற்­றம் ­சாட்டி இருக்­கின்றார். கோத்­த­பாய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றதைத் தொடர்ந்து கட்­சிகள் பலவும் தங்கள் செயற்­பா­டு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்­யத் ­தொ­டங்கி இருக்­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி உட்­பட சிறு­பான்மைக் கட்­சிகள் பலவும் இதில் உள்­ள­டங்கும்.

ஐக்­கிய தேசியக் கட்சி

ஐ.தே.க. இந்­நாட்டில் நீண்ட வர­லாற்றைக் கொண்ட ஒரு கட்­சி­யாகும். இக்­கட்­சியின் மீது மலை­யக மக்கள் உள்­ளிட்­ட­வர்கள் இனம் புரி­யாத ஒரு பற்­றை வைத்­தி­ருப்­பதும் தெரிந்த விட­ய­மாகும். சிறு­பான்மை மக்­களின் தோழ­னாக இக்­கட்சி செயற்­பட்­டது என்று கூறி­விட முடி­யாது. இக்­கட்­சியும் பல தட­வைகள் சிறு­பான்மை சமூ­கத்தின் மீது தனது கோர முகத்தை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றது. இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிர­ஜா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் பறித்து அம்­மக்­களை நிர்­வா­ணப்­ப­டுத்­தி­யது ஐக்­கிய தேசியக் கட்­சி­யே­ ஆகும்.

எனினும் பின்னர் இக்­கட்­சியே இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் வழங்கி தான் செய்த பாவத்­துக்கு பிரா­யச்­சித்தம் தேடிக்­கொண்­டது. 1983 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ர­மா­னது இந்­நாட்டின் வர­லாற்றில் இடம்­பெற்ற கறை படிந்த அத்­தி­யா­ய­மாகும். இக்­க­ல­வ­ரத்­தை உரி­ய­வாறு அடக்­கு­வ­தற்கு ஐ.தே.க. முன்­வ­ர­வில்லை என்ற ஒரு குற்­றச்­சாட்டும் ஐ.தே.க.வின் மீது இன்னும் இருந்து வரு­கின்­றது. 1983 கல­வரம் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்­களை அச்சம் கொள்ளச் செய்­தி­ருந்­தது. இருப்­பைக் கேள்­விக்­கு­றி­யாக்கி இருந்­தது. சிறு­பான்­மை­யினர் வாழ்­வ­தற்கு இந்­த­ நாடு உகந்த நாடா? என்ற சிந்­த­னையை 1983 ஆம் ஆண்டு கல­வரம் ஏற்­ப­டுத்தி இருந்­தது.

ஐ.தே.க.வின் ஆட்­சிக் ­கா­லத்தில் சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னை­க­ளுக்கு கணி­ச­மான தீர்வு கிடைத்­த­தாக இல்லை. நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரான நிலை­யிலும் இனப் ­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­க­தை­யாகி இருக்­கின்­றது. காணி விடு­விப்பும் முழுமை பெற­வில்லை. முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் பிரச்­சி­னை­களும் முழு­மை­யாகத் தீர்க்­கப்­ப­ட­வில்லை. இவற்­றுக்கு மத்­தி­யிலும் சிறு­பான்­மை­யினர் அதி­க­மான ஆத­ர­வை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வழங்கி இருந்­தனர். சஜித் பிரே­ம­தாச விடாமுயற்­சி­களை மேற்­கொண்டு புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ராக இடம்­பி­டித்தார்.

சஜித்தின் இந்தப் போராட்டம் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­தது. ஐ.தே.க. ஆத­ர­வா­ளர்கள் ரணிலைக் காட்­டிலும் சஜித்தை அதி­க­மாக நேசித்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. ஆனாலும் சஜித் தேர்­தலில் வெற்­றி­ பெ­ற­வில்லை. சஜித்தின் தோல்­விக்கு கட்­சிக்குள் ஐக்­கி­யத்­தன்மை காணப்­ப­டாமை முக்­கிய காரணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதே­வேளை, சஜித்தின் பிடி­வாதம் மற்றும் வெற்­றியை விரும்­பாத ரணில், சஜித் தோல்­வி­ய­டை­வ­தற்­கான காய்­ந­கர்த்­தல்­களை உள்­ளுக்குள் மேற்­கொண்­ட­தா­கவும் கருத்­துகள் உல­வின.

எவ்­வா­றெ­னினும் சஜித்தின் தோல்­வியைத் தொடர்ந்து ஐ.தே.க. வுக்குள் மேலும் விரி­சல்கள் தலை­தூக்கத் தொடங்­கி­யுள்­ளன. எதிர்க்­கட்சித் தலைவர் பதவி குறித்தும் சஜித் மற்றும் ரணி­லி­டையே இழு­பறி நிலை­மை­களே இருந்து வரு­கின்­றன. சஜித்­துக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­டா­விட்டால் புதிய கட்சி ஒன்­றை அவர்  ஆரம்­பிக்க உள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அவ்­வா­றாக சஜித் புதிய கட்­சி­யை ஆரம்­பிக்­கு­மி­டத்து ஐ.தே.க. வீழ்ச்சிப் பாதையில் பய­ணிக்க நேரிடும். ஐ.தே.க.வுக்குள் ரணி­லை­விட சஜித்தின் பலம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கவும் கூறப்­படும் நிலையில் சஜித்தின் புதிய கட்சி கணி­ச­மான ஆத­ர­வா­ளர்­களின் ஒத்­து­ழைப்­புடன் வீறு­கொண்­டெழும் என்றும் நம்­பப்­ப­டு­கி­றது. 

ஸ்ரீ.ல.சு.க. 

அமரர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­காலம் இப்­போது கேள்­விக்

­கு­றி­யா­கி­யுள்­ளது. ஸ்ரீ.ல.சு.கட்­சியின் அதி­க­மான ஆத­ர­வா­ளர்கள் தற்­போது பொது­ஜன பெர­மு­ன­வுடன் கைகோர்த்­துள்­ளனர். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இக்­கட்சி பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ர­வ­ளித்த நிலையில் ஸ்ரீ.ல.சு.க.வின் பிறி­தொரு குழு­வினர் சஜித் பிரே­ம­தா­சவுக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தனர். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஸ்ரீ,ல.சு.க. பொது­ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தைக் கண்­டித்­தி­ருந்தார்.

குமார வெல்­கம போன்­ற­வர்­களும் சந்­தி­ரி­கா­வுடன் கைகோர்த்­தி­ருந்­தனர். சந்­தி­ரி­காவின் வரு­கையை வர­வேற்றுப் பேசியிருந்த சஜித் பிரே­ம­தாச, புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் அங்­கத்­துவக் கட்­சிகள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான குழு­வினர் ஒன்­றி­ணைந்து நாட்டில் ஜன­நா­யக அர­சாங்கம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்கு உறு­தி­ய­ளிக்­கின்ற இத்­த­ருணம் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். நாட்டின் அபி­வி­ருத்தி, சமத்­துவம், சுயா­தீனம் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்தி செள­பாக்­கி­ய­மா­ன­தொரு இலங்­கையை உரு­வாக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்டு பய­ணிப்­பதே இப்­பு­திய  கூட்­ட­ணியின் முக்­கிய இலக்­காகும் என்று தெரி­வித்­தி­ருந்தார்.

எனினும் கோத்­த­பா­யவின் வெற்றி தற்­போது பொது­ஜன பெர­மு­னவின் செல்­வாக்கை அதி­கப்­ப­டுத்தி இருக்­கின்­றது. சுதந்­திரக் கட்­சி­யி­னரின் மாற்றுக் குழு­வினரின் எதிர்­பார்ப்­புகள் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இக்­கு­ழு­வினர் பொது­ஜன பெர­மு­னவின் பக்கம் திரும்­பிப்­பார்க்­கின்ற ஒரு நிலை­யையும் ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது.

பொது­ஜன பெர­முன வளர்ச்சிப் பாதையில் முன்­னோக்கி வைக்­கின்ற ஒவ்வோர் அடியும் சுதந்­திரக் கட்சி பின்­னோக்கி வைக்­கின்ற அடி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்­ நி­லையில் சுதந்­திரக் கட்சி எதிர்­கா­லத்தில் செல்­வாக்­கி­ழப்­ப­தற்­கான வாய்ப்­பு­களே அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றன. இக்­கட்­சியை தூக்கி நிறுத்­து­வது இனியும் சாத்­தி­ய­மா­குமா? அவ்­வாறு முடிந்­தாலும் இன்னும் எத்­தனை காலத்­துக்கு காத்­தி­ருக்­க ­வேண்­டி­வரும் என்று சிந்­திக்­க ­வேண்­டி­யுள்­ளது. 

மக்கள் விடு­தலை முன்­னணி 

மக்கள் விடு­தலை முன்­ன­ணியை உள்­ள­டக்­கிய தேசிய மக்கள் சக்தி இம்­முறை தேர்­தலில் எதிர்­பார்த்த வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. தேசிய மக்கள் சக்தி இத்­தேர்­தலில் பத்து இலட்­சத்­துக்கும் பதி­னைந்து இலட்­சத்­துக்கும் இடைப்­பட்ட வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ளும் என்ற எதிர்­பார்ப்பு பல­ரி­டையே காணப்­பட்­டது. அவ்­வாக்­குகள் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கணி­ச­மான தாக்­கத்­தைச் செலுத்தும் என்றும் பலர் பேசிக்­கொள்­வ­தையும் கேட்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அனுர குமார திசா­நா­யக்க ஆளு­மை­ மிக்­கவர் என்றும்  இந்த ஆளுமை தேசிய மக்கள் சக்­தியின் வாக்­கு­களில் கணி­ச­மான அதி­க­ரிப்­பை ஏற்­ப­டுத்தும் என்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ர­வா­ளர்கள் பேசிக்­கொண்­டார்கள். எனினும் அனுர குமா­ரவின் ஆளுமை எதிர்­பார்ப்­பு­களை உரி­ய­வாறு நிறை­வேற்­ற­வில்லை. இத்­தேர்­தலில் அனுரகுமார திசா­நா­யக்க நான்கு இலட்­சத்து 18 ஆயி­ரத்து 553 வாக்­கு­களை மட்­டுமே பெற்­றுக்­கொண்டார். இது எதிர்­பார்த்த வாக்­கு­க­ளாக இல்லை. எனவே மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் தனது செயற்­பா­டு­களை மீள் ­ப­ரி­சீ­லனை செய்­ய­ வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. 

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு

சிறு­பான்மைக் கட்­சி­களின் வரி­சையில் கூட்­ட­மைப்பு இம்­முறை தேர்­தலில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரிக்­கப் ­போ­கின்­றது-? என்ற எதிர்­பார்ப்பு அநே­க­ரிடம் காணப்­பட்­டது. சிறு­பான்மை மக்­களே ஜனா­தி­பதித் தேர்­தலில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக அமைவர் என்ற கருத்­தா­டல்­க­ளுக்கு மத்­தியில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தொடர்பில் அதி­க­மா­கவே  பேசப்­பட்­டது. ஐந்து கட்­சிகள் இணைந்து  முன்­வைத்த 13 அம்சக் கோரிக்கை தொடர்பில் பிர­தான வேட்­பா­ளர்கள் கவனம் செலுத்­தாத நிலையில் கட்­சி­களின் நிலைமை தர்மசங்­க­ட­மா­னது. இறு­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சஜித்­துக்கு ஆத­ரவு வழங்கி இருந்­தது. இது குறித்து பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் எதிர்க்­கட்­சி­யினர் முன்­வைத்­தி­ருந்­தனர். சஜித் பிரே­ம­தாச 13 அம்சக் கோரிக்­கை­க­ளையும் மறை­மு­க­மாக ஏற்றுக்கொண்­டி­ருப்­ப­தா­கவும் இதன் கார­ணத்­தி­னாலே தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பு சஜித்­துக்கு ஆத­ர­வை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தி­ருப்­ப­தா­கவும் சிங்­கள மக்­க­ளி­டையே கருத்­துகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்­நி­லை­யா­னது பெரும்­பான்மை மக்­களின் செல்­வாக்கை சஜித் பிரே­ம­தாச பெற்­றுக்­கொள்­வதில் ஒரு வீழ்ச்சி நிலையை ஏற்­ப­டுத்தி இருந்­தது. 

இந்­நி­லையில் தமிழ்த்  தேசியக் கூட்­ட­மைப்பு தமது கடந்­த­ கால தவ­று­களைத் திருத்­திக்­கொண்டு முன்­செல்ல வேண்­டிய ஒரு தேவை காணப்­ப­டு­கின்­றது. கூட்­ட­மைப்பு கடந்த காலத்தில் ஆட்­சியின் இருப்­புக்கு தோள் ­கொ­டுத்­த­போதும் அதன் மூல­மாக உரிய நன்­மை­களைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்டு இருந்து வரு­வ­தை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, காணா­ம­லாக்­கப்­பட்டோர் குறித்த முன்­னெ­டுப்­புகள் உட்­பட 13 அம்சக் கோரிக்­கை­களின் முக்­கி­யத்­துவம் குறித்து கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்றைச் சாத­க­மாக்­கிக்­கொள்ள சாது­ரி­ய­மான காய் நகர்த்­தல்­களின் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. கூட்­ட­மைப்பு அடுத்த நகர்­வு­களை நிதா­ன­மாக மேற்­கொள்­ள­ வேண்டும். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆதிக்­கத்தைப் பலப்­ப­டுத்தி சாதக விளை­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முற்­ப­டுதல் வேண்டும்.

மலை­யகக் கட்­சிகள்

தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித்துக்கு ஆத­ரவு வழங்கி இருந்­தது. சஜித்தின் வெற்றி உறு­தி­யா­னது என்று இக்­கூட்­டணி பல சந்­தர்ப்­பங்­களில் வலி­யு­றுத்தி இருந்­தது. எனினும் இது சாத்­தி­ய­மா­காத நிலையில் கூட்­ட­ணியின் எதிர்­பார்ப்பு மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­தா­வுக்கு ஆத­ர­வ­ளித்த நிலையில் கோத்தா வெற்றி பெற்­ற­தோடு ஆறு­முகன் தொண்­டமான் அமைச்­ச­ரா­கியும் இருக்­கின்றார். தோட்ட உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக வலு­வூட்டல் அமைச்சு இவ­ருக்குக் கிடைத்­தி­ருக்­கின்­றது. எனினும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆத­ர­வா­ளர்கள் முழு­மை­யாக ஆறு­மு­கனின் கோரிக்­கையை ஏற்று கோத்­தா­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்ற ஒரு கருத்தும் இருந்து வரு­கின்­றது. இதற்­கி­டையில் இ.தொ.கா. கோத்­த­பா­ய­வுக்கு சுமார் எண்­ப­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருப்­ப­தாக மத்­திய மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் கண­பதி கன­கராஜ் தெரி­வித்­தி­ருந்தார். இத­ன­டிப்­ப­டையில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இருந்த இடை­வெ­ளியைக் காட்­டிலும் இம்­முறை இடை­வெளி குறைந்­தி­ருக்­கின்­றது. கோத்­த­பா­ய­வுக்கு இ.தொ.கா. வழங்­கிய ஆத­ரவு தீர்க்க தரி­ச­னத்­துடன் மேற்­கொள்­ளப்­பட்­டது. நீண்ட தொலை­நோக்கின் அடிப்­ப­டை­யி­லேயே இ.தொ.கா.வின் இவ்­வா­த­ரவு வழங்­கப்­பட்­டது என்றும் கண­பதி கன­கராஜ் தெரி­வித்­துள்ளார்.

மலை­ய­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் இ.தொ.கா.வும், தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியும் எதிரும் – புதி­ரு­மாக உள்­ளன. ஒரு கட்­சியை இன்­னொரு கட்சி விமர்­சித்து வரு­கின்­றது. இந்த விமர்­ச­னங்கள் சில வேளை­களில் மூன்­றா­ம­வ­ருக்கு வாய்ப்­பையும் ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன. மூன்­றா­வது தரப்­பினர் மலை­யக சமூ­கத்தை கைகொட்டிச் சிரிப்­ப­தற்கும் இவை வாய்ப்­பாகி இருக்­கின்­றன. இ.தொ.கா.வும், தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியும் கடந்த காலத்தில் வெவ்­வேறு கட்­சி­களைப் பிர­தி­ நி­தித்­து­வப்­ப­டுத்தி இருந்­தன. ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் இதுவே நடந்­தது. இந்­நி­லையில் எதிர்­வரும் பாரா­ளு­மன்­றத் தேர்­தலின் பின்னர் இவ்­விரு கட்­சி­களும் ஆளும் கட்­சி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெறும் வாய்ப்­புகள் அதி­க­மாகக் காணப்­ப­டு­வ­தாக அர­சியல் அவ­தா­னிகள் கருத்­து­களை முன்­வைத்­துள்­ளனர். நிலை­மை­களைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இணக்­கப்­பாடு

இந்­நாட்டில் சிறு­பான்­மை­யி­னரின் நிலை­மை­களைக் கருத்­தில்­கொண்டு சிறு­பான்­மை­யினர் தங்­க­ளுக்குள் ஓர் இணக்­கப்­பாட்­டு­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் வாழ­ வேண்­டிய ஒரு தேவை அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது. விட்­டுக்­கொ­டுப்பு, கலந்­து­ரை­யாடல் இவற்றின் ஊடாக சிறு­பான்மைக் கட்­சிகள் தமக்குள் ஓர் இணக்­கப்­பாட்­டை ஏற்­ப­டுத்திக்கொள்­ள­ மு­டியும். இந்­நி­லையில் சிறு­பான்மைச் சமூ­கத்­தினர் ஒரு­வ­ருக்­கொ­ருவர் இழி­வு­ப­டுத்­திக் ­கொள்­வதோ அல்­லது சேறு பூசிக் ­கொள்­வதோ பிழை­யான செய­லாகும். இத்­த­கைய நிலை­மைகள் வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கதும் வேர­றுக்­கப்­ப­ட ­வேண்­டி­ய­து­மாகும் என்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் மலை­யக மக்­களை ‘தோட்­டக்­காட்டான்’ என்று கூறி கொச்­சைப்­ப­டுத்தி இருக்­கின்றார். இது குறித்து பலரும் கண்­ட­னங்­களை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றனர். சிறு­பான்­மை­யினர் பலம் குறைந்­த­வர்கள், அர­சி­யலில் வலி­மை­யற்­ற­வர்கள், பொரு­ளா­தார மற்றும் ஏனைய வாய்ப்­பு­க­ளற்­ற­வர்கள், பல துறை­க­ளிலும் 

பின்­தங்­கி­ய­வர்கள் என்ற முறை­யி­லேயே அவர்களை இழி­வு­ப­டுத்தும் நிலை­மைகள், சொற்கள் உலக நாடு­களில் காணப்­ப­டு­கின்­றன. அமெ­ரிக்­காவுக்கு கறுப்பு இனத்­த­வர்கள் அடி­மை­க­ளாகப் போனார்கள். ஆபி­ரிக்­காவில் இருந்து இவர்கள் அழைத்­துச்­செல்­லப்­பட்­டார்கள். இவர்­களை ‘நீக்ரோ’ என்று பெய­ரிட்டு அழைத்­தனர். பிற்­கா­லத்தில் ‘கறுப்­பர்கள்’ என்றும் இவர்கள் அழைக்­கப்­பட்­டனர். இந்த இரண்டு சொற்­க­ளுமே அவர்­களை இழி­வு­ப­டுத்­து­வ­தாக பிற்­கா­லத்தில் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்­தன. எனவே ’நீக்ரோ’, ‘கறுப்­பர்கள்’ என்று கூறு­வது இழிசொல் என்­பதை உணர்ந்து அது தவிர்க்­கப்­பட்டு இன்று அவர்­களை ‘ஆபி­ரிக்க அமெ­ரிக்கர்’ என்று அழைப்­ப­தாக பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் போன்­ற­வர்கள் கூறு­கின்­ றனர்.

அமெ­ரிக்­காவில் நீக்ரோ கல்வி என்ற பெயரில் நூல்­களும் உள்­ள­தாகத் தெரிய வரு­கின்­றது. இங்­கி­லாந்தில் பாகிஸ்­தா­னியர், இலங்­கையர், பங்­க­ளா­தே­சத்­தவர் எனப் பலரும் உள்­ளனர். அவர்­களை சுட்­டு­வ­தற்­கென்று ஒரு சொல் வைத்­தி­ருக்­கின்­றார்கள். அது ஒரு இழி சொல். அவ்­வாறு கூறப்­ப­டக்­ கூ­டாது. தமிழ் நாட்­ட­வர்­களை இழி­வு­ப­டுத்­து­வ­தற்கு கேரளப் பகு­தியில் ஒரு சொல் வைத்­தி­ருக்­கின்­றனர். இலங்­கையில் முஸ்­லிம்­களை இழி­வு­ப­டுத்தும் சொற்கள் சிங்­க­ளத்தில் இருக்­கின்­றன. தமிழர் மத்­தி­யிலும் இருக்­கின்­றது. மலை­யக மக்­களை இழி­வு­ப­டுத்தும் இன்னும் சில சொற்­களும் இருக்­கின்­றன.  தமி­ழர்­களை இழி­வு­ப­டுத்தும் பொதுச் சொல்லும் இன்னும் இருப்­ப­தைக் கூறி­யாதல் வேண்டும். எனினும் இத்­த­கைய இழி­சொற்­களைப் பயன்­ப­டுத்தி எந்த ஒரு சமூ­கத்­தையும் இழித்துக் கூறுதல் கூடாது. இவ்­வாறு கூறு­வதால் அந்தச் சமூ­கத்தின் வெறுப்­பை சம்­பா­திக்க வேண்­டி ­வரும் என்­ப­தோடு அது மனி­தா­பி­மா­னமும் ஆகாது என்­ப­தையும் விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும். அதா­வுல்லாஹ் ஒரு சிறு­பான்மைச் சமூ­கத்­த­வ­ராக இருந்­த­போதும் அவர் பிறி­தொரு சிறு­பான்மைச் சமூ­க­மான மலை­யக சமூ­கத்தை இழி­சொல்லைப் பயன்­ப­டுத்தி அடை­யா­ளப்­ப­டுத்தி இருப்­பது வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்க விட­ய­மா­கவே உள்­ளது.

நாக­ரி­க­ம­டைந்த நாடுகள் இன்று இவ்­வா­றாக இழி­சொற்­களைப் பயன்­ப­டுத்தி ஒரு சமூ­கத்­தை அடை­யா­ளப்­ப­டுத்தும் நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கின்­றன. இதனை ஒவ்­வொ­ரு­வரும் புரிந்­து­கொள்­ளுதல் வேண்டும். இழிசொல் பிர­யோகம் தொடர்பில் முஸ்லிம் அமைப்­பு­களும் கண்­ட­னத்தை வெளி­யி­டுதல் வேண்டும். இலங்கை பல்­லின மக்­களும் வாழு­கின்ற ஒரு நாடாகும். இங்கு ஒவ்­வொரு இனத்­த­வ­ரதும் கலா­சார –பண்­பாட்டு –விழு­மி­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும். ஓரினம் தனது கலா­சா­ரத்தைப் பேணி முன்­செல்­கின்ற அதே­வேளை ஏனைய இனத்­த­வ­ரது கலா­சா­ரத்­துக்கும் மதிப்­ப­ளித்து உரி­ய­வாறு பேணு­வ­தற்கு ஒத்­து­ழைத்தல் வேண்டும். இந்த நிலைமை இல்­லா­த­வி­டத்து முரண்­பா­டு­களும், பிணக்­கு­களும், குரோ­தங்­களும், விரும்­பத்­த­காத நிகழ்­வு­களும் இடம்­பெ­று­வது தவிர்க்க முடி­யா­த­தாகி­ விடும். எனவே இந்த நிலை தொடர்பில் அவ­தானம் செலுத்­து­வ­தோடு ஆழ­மாகச் சிந்­தித்துச் செயற்­ப­டு­தலும் வேண்டும். ஓர் இனம் இன்­னொரு இனத்­தை இழி­வு­ப­டுத்­து­வது நியா­ய­மா­ன­தல்ல. இதே­வேளை மலை­யகச் சமூகம் இப்­போது பல்­வேறு துறை­க­ளிலும் வேக­மாக முன்­னேறி வரு­கின்­றது. பட்­ட­தா­ரிகள், அரச  உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளனர். சமூக நிலை­மைகள் முன்­னேற்றம் கண்­டுள்­ளன. கல்வி மையச் சமூகம் என்ற நிலையை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது. எனவே மலையக சமூகத்தை குறைத்து மதிப்பிட யாரும் முனைதல் கூடாது. இச்சமூகத்தின் சமகால நிலைமைகளைப் புரிந்துகொண்டு கருத்துகளை வெளியிட வேண்டும்.

நல்லிணக்கம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களை இரு துருவங்களாக ஆக்கியுள்ளதாக கருத்துகள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருவது தெரிந்த விடயமாகும். இந்நிலையில் சிங்கள மக்களுக்கிடையேயும் சிறுபான்மை மக்களுக்கு இடையேயும் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை ஐக்கியப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. சிறுபான்மை இனத்த வருடனான நல்லிணக்கச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு அபிவிருத்தியே ஒரே வழி என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இதேவேளை புதிய ஜனாதிபதி சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றும் வகையில் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கெளரவம் தொடர்பில் தேசிய நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பார் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு தீர்வை எட்டுவதற்கு தேசிய நல்லிணக்க முயற்சிகளை இலங்கை அரசாங் கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்த்திருப்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி கோத்தபாயவின் வெற்றிக்கு சிறுபான்மை மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. எனவே அவர் அடுத்த தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை அதிக மாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் முக்கியஸ்தர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஜனாதிபதி கோத்தபாயவிடம் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையிலமைந்த பல்வேறு திட்டங்கள் காணப்படுகின்றன. 'இலங்கையர்' என்ற பொது வரையறைக்குள் நாட்டு மக்களை ஐக்கியப்படுத்தி ஒன்றிணைக்கக் கூடிய வல்லமை, ஆற்றல் மிக்கவராக ஜனாதிபதி கோத்தபாய விளங்குகிறார்.

புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும்  இன, மத, மொழி பேதமின்றி சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை, பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் நிச்ச யம் செயற்படுவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா போன்றவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதேவேளை தமிழ், முஸ்லிம் மக்களை தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறும் ஜனாதிபதி கோத்தபாய அழைப்பு விடுத்திருக்கின்றார். இதற்கேற்ப ஜனாதிபதிக்கும் ஒத்துழைப்பு வழங்கி நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்வது மிகவும் அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41