மெல்லக் கொல்லும் உயிர் கொல்லி

01 Dec, 2019 | 11:26 AM
image

    உல­கையே ஆட்­டிப்­ப­டைக்கும் ஆட்­கொல்லி நோயான எயிட்ஸ் இன்று பாரிய சுகா­தாரச் சீர­ழி­வு­களை ஏற்­ப­டுத்தும் ஒரு நோயாக உரு­வெ­டுத்­துள்­ளது என்றால் அது மிகை­யா­காது.  வளர்­முக நாடுகள் முதல் பின்­தங்­கிய நாடுகள் வரை உலகின் எல்லா மூலை­மு­டுக்­கு­க­ளிலும்  எயிட்ஸ் உரு­வா­கி­யுள்­ளது. 

எச்.ஐ.வி. வைர­ஸினால் தொற்றும் இந்த உயிர் கொல்லி நோய்­ த­டுப்பு  தொடர்பில் பல்­வேறு விழிப்­பு­ணர்வு செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் கூட எயிட்ஸ் நோய் தாக்­கத்­துக்­குள்ளா­னோரின் தொகை  குறைந்­த­ பா­டில்லை என்றே சொல்ல வேண்டும். 

 எனினும் இந்த ஆட்­கொல்லி நோயை முற்­றாக ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை உலக நாடுகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றன. இதற்­கென தனித்­தனி அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்டு விஷேட செயற்­றிட்­டங்கள் காலத்­துக்குக் காலம் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் கூட முற்­றாக கட்­டுப்­ப­டுத்த முடி­யா­ம­லுள்­ளது என்­பதே அப்­பட்­ட­மான  உண்­மை­யாகும். 

இந்த நோய் தொற்றின் பரவல் தீவி­ர­ம­டைந்­ததன் விளை­வாக எச்.ஐ.வி. தொற்றை முற்­றாகக் கட்­டுப்­ப­டுத்தி மக்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்­வையும் எயிட்ஸ் குறித்த அறி­வையும் விருத்தி செய்யும் முக­மாக 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் மாதம் முதலாம் திக­தியை உலக எயிட்ஸ் தின­மாக உலக சுகா­தார ஸ்தாபனம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

அதற்­கி­ணங்க    இவ்­வாண்­டுக்­கான  எயிட்ஸ் குறித்த கருப்­பொ­ரு­ளாக  “எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்­று­ நோயை முடி­வுக்குக் கொண்­டு­வ­ருதல்: சமூகம் மூலம் சமூகம்” என்ற வாச­கத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் 2018ஆம் ஆண்டு எயிட்ஸ் குறித்த கணிப்­பீட்­டின்­படி 37.9 மில்­லியன் மக்கள் எச்.ஐ. வி. நோய் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது. அதே­வேளை  இந்த எண்­ணிக்­கையில் 1.7 மில்­லியன் வரை­யி­லான பதி­னைந்து வய­துக்கு மேற்­பட்ட சிறார்கள் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. உல­கையே ஆட்­டிப்­ப­டைக்கும் இந்த உயிர் ­கொல்லி நோய் இலங்­கை­யையும் விட்­டு­வைக்­க­வில்லை.  

உலக நாடு­க­ளுக்­கி­டை­யி­லான எச்.ஐ.வி நோய்­ தொற்றின் வீரியம் குறித்து  ஆரா­யும்­போது  எமது இலங்கை நாடா­னது ஒப்­பிட்­ட­ளவில் மிக மிகக் குறைந்­த­ள­வி­லான நோய் தொற்றைக் கொண்­டி­ருப்­ப­தாக ஆய்­வு கள் தெரி­வித்­துள்­ளன. அதே­வேளை எமது நாட்டில் இந்த நோய் தொற்று முற்­றாக அழி­வ­டை­ய­வில்லை என்­ப­தையும் ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. இது­வ­ரையில் அண்­ண­ள­வாக சுமார் 4200 பேர் வரை­யானோர் அடை­யாளம் காணப்­பட்டு சிகிச்­சைகள் அளிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆரம்­ப ­கா­லங்­களில் இளம் வய­தி­ன­ரி­டையே காணப்­பட்ட இந்த நோய் தொற்­றா­னது  பின்னர்  30 முதல் 35 வய­துக்­கி­டைப்­பட்­டோ­ரி­டை­யேயும் காலப்­போக்கில்  15 வயது முதல் 49 வய­துக்­குட்­பட்ட தரப்­பி­ன­ரி­டை­யேயும் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த வகையில் இதுவரையில் இலங்­கையில்   கடந்த 2017ஆம் ஆண்டு காலப் ­ப­கு­தியிலேயே அதி­க­ளவானோர்  நோய் தொற்றுக்கு ஆளாகியி­ருப்­ப­தாக சுகா­தார வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ளனர். இதற்கு நோய் தொற்­றுள்ள நபர்­க­ளு­ட­னான உட­லு­றவே கார­ண­மெனவும்   சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். மேலும் இலங்­கையில் கடந்த ஐந்து வருடக் காலப்­ப­கு­தியில் இளையோர் மற்றும் நடுத்­தர வயது பரு­வத்­தினர் மத்­தி­யி­லேயே இந்த  நோய் தொற்று  காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.  மேலும் நோய் தொற்று குறித்து அவர்கள் தெரி­வித்­துள்­ள­தா­வது,

எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்ட ஒருவர் வருடக் கணக்கில் எவ்­வித அறி­கு­றி­களும் இன்றி  வாழலாம்.  அதா­வது தொற்று ஏற்­பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்­தியைப் பொறுத்து அவ­ருக்குள் குறித்த வைரஸ் செயற்­படும். இந்தத் தொற்­றா­னது அவர்­க­ளது இரத்­தத்­திலும் பாலியல் சுரப்­பி­க­ளிலும் வாழ்­கி­றது. எச்.ஐ.வி. நேர்­மறை இரத்தம் அல்­லது எச்.ஐ.வி.  வைரஸால் மாசு­ப­டுத்­தப்­பட்ட பாலியல் சுரப்பு ஆகி­ய­வற்­றி­லி­ருந்து  எச்.ஐ.வி. வைரஸ் ஒரு சாதா­ரண நபரின் உட­லுக்குள் பிறப்­பு­றுப்பு, ஆச­ன வாய் அல்­லது சளி சவ்வு வழி­யா­கவோ நுழை­கி­றது. இரத்­தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் இருந்­தாலும் தொற்று நோயி­லி­ருந்து மூன்று மாதங்­க­ளுக்குள் இரத்தப் பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்டால் இனங்­கா­ணலாம். 

எனினும் எயிட்ஸ் தொற்­று­டைய ஒரு நபரை பரி­பூ­ர­ண­மாகக் குணப்­ப­டுத்த முடி­யாது என்­பதே கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். எனினும் வாழ் நாள் முழு­வதும் எச்.ஐ.வி தொற்றை குறிப்­பிட்ட அளவில் கட்­டுப்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்­ட­வர்­களை  வாழச் செய் யும் அள­வுக்கே எமது உலக மருத்­துவம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இன்­று­ வரை அதனை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழிகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.  உலக சுகா­தார ஸ்தாப­னத்தின்  எயிட்ஸ் குறித்த கணிப்­பீ­டு­க­ளின்­படி  2016 முதல் 2018 வரை­யான காலப்­ப­கு­தியில் பங்­க­ ளாதேஷ், மலே­சியா, பாகிஸ்தான், பிலிப் பைன்ஸ் மற்றும் இலங்கை உள்­ளிட்ட நாடு­களில் எச்.ஐ.வி. தொற்­றினால் பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை ஒப்­பீட்­ட­ளவில் குறை­வாக உள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது. 

அதே­போன்று உல­கி­லேயே எச்.ஐ.வி. நோயால் 7.7 மில்­லியன் அள­வி­லான  தென்­னா­பி­ரிக்க  மக்­களே அதிகம்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதில் மேற்கு மற்றும் மத்­திய ஆபி­ரிக்­காவில் 5 மில்­லியன் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

2017ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில்  உல­க­ளவில் சுமார் 36.9 மில்­லியன் மக்கள் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில்  15 வய­துக்­குட்­பட்ட 1.7 மில்­லியன் சிறார்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர். அதே­நேரம் உல­க­ளவில் 1.8 மில்­லி யன் பேர் 2017ஆம் ஆண்டில் புதி­தாக எச்.ஐ.வி. நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. 

இந்த எச்.ஐ.வி. தொற்­றா­னது  பாலியல் தொழி­லா­ளர்கள் மற்றும் அவர்­க­ளது வாடிக்­கை­யா­ளர்கள், ஆண்­க­ளுடன் உட­லு­றவு கொள்ளும் ஆண்கள்,போதை மருந்­து­களை உட்செலுத்­து­ப­வர்கள்  மற்றும் திரு­நங்­கை கள் ஆகி­யோரின் ஊடா­கவே பெரும்பாலும் சமூகத்தில் பரவிச் செல்­லு­கின்­றமை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் 2010 முதல்  தொற்­று­ நோயை எதிர்த்துப் போரா­டி­யதில் உலக சுகா­தா­ரத்­ துறை  முன்­னேற்றம் கண்­டுள்­ள­தென்றே கூறவேண்டும். 

உலக சுகா­தார ஸ்தாபனம் உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­களின் தொடர்ச்­சி­யான முயற்­சியின் விளை­வாக இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு எயிட்ஸ் நோய் தொற்று குறித்த தெளிவும் விழிப்­பு­ணர்வும் காணப்­ப­டு­கின்­ற ­போ­திலும் இதனை முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­ம­லுள்­ளமை கவலைக்குரிய விடயமாகும். இதனை தடுப்பதற்கான  செயற்றிட்டங்கள் நாடு தோறும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்  ஒரு சிலரது தவறான அணுகுமுறைகளும் பின்பற்றுதலுமே இந்த நோய் தொற்றானது குறித்த தரப்பினரைச் சார்ந்த சகலரையும் வந்தடையக் காரணமாகவுள்ளது. பாதுகாப் பற்ற பாலின சேர்க்கைகளைத் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு சில மூத்த தலைமுறையினரின் செயற்பாடுகளால் இன்று உலகளவில் 1.7 மில்லியன் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என் பதை ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் புறந்தள் ளுவதை நிறுத்தி அத்தகையோரை உதார ணமாகக் கொண்டு நிகழ்கால சமுதா யத்தை திறம்பட வழிநடத்த முயற்சிக்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32