வவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உருள் பந்து வீரர்கள்

Published By: R. Kalaichelvan

30 Nov, 2019 | 07:16 PM
image

வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை உருள் பந்து வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை உருள் பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார திணைக்களத்தின் அணுசரணையுடன் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று உருள் பந்து வீரர்களால் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமான உருள் பந்து வீரர்களின் ஊர்வலத்தை பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா கொடியசைத்து ஆரம்பித்து தைவத்தார்.

மாவட்ட செயலகத்தில் இருந்து சென்ற ஊர்வலமானது மன்னார் வீதியூடாக குருமன்காட்டு சந்தியை அடைந்து, அங்கிருந்து வைரவபுளியங்குளம் ஊடாக வவுனியா நகரம் தொடர்ந்து பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, கண்டி வீதி எனச் சென்று வாடி வீடு முன்பாக முடிவடைந்தது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், பொது மக்களுக்கான அறிவித்தலும் வழங்கப்பட்டது.  இதில் சுகாதார திணைக்களத்தினர், உருள் பந்து வீரர்கள், பொலிசார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39