வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேசத்திடமிருந்து நிவாரணங்கள் திரண்ட வண்ணமுள்ளன. சுனாமி அனர்த்ததின்போது சர்வதேச நிவாரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதனை போன்று நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறான மோசடிகளில் ஈடுப்படாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வதேசத்திடம் சென்று நாம் கெஞ்சவில்லை. அவர்களாகவே எமக்கு வாரி வழங்குகின்றனர். சுனாமி கொள்ளை போன்று இந்த ஆட்சியில் மோசடிகள் இடம்பெறாது என்ற நம்பிக்கையின் விளைவாகவே இவ்வாறான உதவிகள் கிடைக்க பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் நீச்சல் வீரரான சசங்க அல்விஸ் என்ற மாணவன் நினைவிழந்து வாழ்க்கையில் மீள முடியாத துன்பத்திற்கு இழக்காகியுள்ளார். இவ்வாறு  பாதிக்கப்பட்டுள்ள சசங்க அல்விஸ் மாணவனின் குடும்பத்தினருக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு இலவசமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)