கடற்படையினரின் பாதுகாப்பு சாவடியை இடமாற்றவும் : சம்பந்தன் பணிப்புரை 

Published By: MD.Lucias

31 May, 2016 | 04:30 PM
image

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி காந்திநகரில் மீனவர்கள் படகுகளை தரித்து வைக்கும் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு சாவடியை  இடமாற்றுமாறு எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பணிப்புரை விடுத்துள்ளார். 

இது விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனாரத்தனன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் முன்வைத்த கோரிக்கை சபையில் பரிசீலிக்கப்பட்டபோதே சம்பந்தன் அரச அதிபருக்கு இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கும்புறுப்பிட்டி காந்திநகரில் மீனவர்கள் படகுகளை தரித்து வைக்கும் கடற்கரைப்பகுதியில் கடற்படையினரின் சிறிய பாதுகாப்பு சாவடி அமைக்கப்பட்டள்ளது. 

அதனால் அப்பகுதி மீனவர்களுக்கு தமது மீன் பிடிப்படகுகளை அவ்விடத்தில் தரித்து வைக்க முடியாதுள்ளது. 

அத்துடன் சுதந்திரமாக அப்பகுதிக்கு செல்லவும் முடியாதுள்ளது. புதிதாக அமைத்துள்ள அந்த கடற்படை பாதுகாப்பு சாவடியை அவ்விடத்தில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனார்த்தனன் கோரிக்கை விடுத்திருந்தார். 

இவ்விடயம் தொடர்பாக கடற்படை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உடனடியாக அந்த கடற்படைச் சாவடியினை இடமாற்றுமாறு எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் பணிப்புரை விடுக்கப்பட்டது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59