வவுனியாவில் 510 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Published By: R. Kalaichelvan

29 Nov, 2019 | 08:16 PM
image

வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் 510 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13.09.2019 அன்றிலிருந்தே உள்ளூர் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் பருவ மழையினால் மேலும் டெங்கு நுளம்புகள் பெருக்கெடுக்கும் அபாய நிலை காணப்படுகின்றது.

தங்களது இருப்பிடங்கள் பகுதிகளை தூய்மையாகவும், சுத்தமாகவும் துப்பரவு செய்து வைத்திருக்குமாறும் பொது சுகாதாரப்பரிசோதகர்களின் டெங்கு ஒழிப்பு செயற்திட்ட நடவடிக்கைக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் வவுனியாவில் டெங்கு தொற்று ஏற்பட்டு 510பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் பருவ மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகின்றது. 

குருமன்காடு, காளிகோவில், பூங்கா வீதி போன்ற பகுதிகளில் தற்சமயம் நுளம்புகள் பெருகும் இடமாக அடையாளம் காணப்பட்டு அதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

 ஏனைய பகுதிகளில் நுளம்பு பெருக்கம் பகுதியளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையும் காணப்படுகின்றது. எனினும் தற்பொழுது பெய்துவரும் பருவ மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் நிலையும் மேலும் காணப்படுகின்றன. 

கடந்த 13.09.2019 அன்றிலிருந்து டெங்கு நுளம்பு தொற்று உள்ளூர் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் 510பேருக்கு டெங்கு நுளம்பு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 

நாளைய தினம் பொலிசாருடன் இணைந்து நகரில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் பார்வையிடப்பட்டு பெருக்கெடுக்கும் இடங்கள் அவதானிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமது இருப்பிடங்கள், திணைக்களங்கள், அரச, தனியார் நிலையங்கள், விடுதிகள் அனைத்தையும் சுத்தம் செய்து துப்பரவாகவும், தூய்மையாகவும் வைத்திருக்குமாறும் பரிசோதனை மேற்கொள்ள செல்லும் பொது சுகாதாரப்பரிசோதகர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55