கட்டணத்தை அதிகரிக்கும் எந்த திட்டமும் எம்மிடமில்லை - வாசுதேவ

Published By: Vishnu

29 Nov, 2019 | 04:47 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நீர்வழங்கல் அமைச்சு பாரிய நிதி நெருக்கடியிலே தொழிற்பட்டு வருகின்றது. இருந்தபோதும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எந்த திட்டமும் எம்மிடமில்லை என நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்ற அமைச்சர் வாசுதேவ நானயக்கார இன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர்வழங்கல் அமைச்சில் பதவியை ஏற்றுக்கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் நீர்வழங்கல் அமைச்சினால் பாரியதொரு தொகை நிதி செலுத்தவேண்டி இருப்பதாக அமைச்சின் செயலாளர் எமக்கு தெரிவித்திருந்தார். அதனால் இந்த அமைச்சு மிகவும் கஷ்டத்துடனே செல்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம். கடந்த அரசாங்கம் இந்த அமைச்சு செலுத்துவேண்டிய எந்த தொகையையும் செலுத்தாமல், இன்டபிரைஸ் சிறிலங்கா, கிராம எழுச்சி என தெரிவித்துக்கொண்டு அதற்கு பணத்தை செலவழித்து வந்திருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

அத்துடன் நாட்டில் சிறியதொரு பிரிவினர் நீரை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதிகமானவர்களுக்கு நீர் இல்லாத பிரச்சினை இருந்துவருகின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதென்பது பாரிய சவாலாகும். என்றாலும் நாட்டில் அதி கஷ்டத்துடன்,  தண்ணீர் இல்லாமல் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதே எமது நோக்கமாகும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04